ஆரோக்கிய சருமம், சரியான ஈரல் செயல்பாடுகள், நல்ல ஜீரண சக்தி, உணவுச்சத்துக்கள் சரிவர கிரகிக்கப்படுவது, கழிவுகள் சரிவர வெளியேறுவதை குறிக்கிறது என்கிறது ஆயுர்வேதம். உடலின் கண்ணாடி சருமம். முகத்தை பாதுகாக்க, கருமை நிற திட்டுக்களை போக்க பல மூலிகை மருந்துகள் ஆயுர்வேதத்தில் உள்ளன.
வேம்பு மற்றும் மஞ்சள் சிறந்த கிருமி நாசினி இவைகள் சருமப் பாதுகாப்புக்காவும், பல தொற்று நோய்களை தடுப்பதற்காகவும் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகின்றன.
நாயுருவி மற்றும் குப்பைமேனி சருமத்தை காக்கும் சொறி, சிரங்குகள் வராமல் தடுக்கும்.
பூவரசு சோரியாஸிஸ், சொறி சிரங்குகள் முதலிய சரும நோய்களை தவிர்க்கும்.
கற்றாழை – இப்போது கற்றாழை இல்லாத மேனி அழகு சாதனங்கள் இல்லை. கற்றாழை சாற்றை முகத்தில் தடவி வர மாசு, மருக்கள், கருமை வளையங்கள் மறையும்.
கோவைக்காய் – சரும பளபளப்பை அதிகரிக்கிறது.
புங்கம் (Pongamia glabra) – சரும நோய்களுக்கு இதன் விதைகள் பலனளிக்கின்றன.
