மூலிகை ஃபேஸ் பேக்கள்

Spread the love

முகச் சுருக்கங்கள், கோடுகள், கண் கருவளையங்கள் போன்றவை வராமல் தடுக்க, மேனியின் எண்ணெய்ப் பசை,ஈரப்பசை சீராக அமைத்துக் கொள்ளவும் முக பேக்குகள் (குறிப்பாக மூலிகைகளினால் தயார் செய்யப்பட்டது) உதவுகின்றன. மூலிகை முக பேக்குகள் எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றவை என்பதுடன் பாக்டிரியாவை எதிர்த்து ஆரோக்கியம் பேணுகிறது. மாஸ்க்குகளை விட மிருதுவானவை.

முக பேக் தயாரிக்கப் பயன்படும் பழங்கள், காய்கறிகள்:

பழங்கள் மற்றும் காய்கறியினால் செய்யப்படும் பேக்குகள் சருமத்திற்கு சத்துகளை அளிக்கின்றன. நாம் உபயோகிக்கும் பழம், காய்கறிகளின் சாறினைப் பிழிந்து எடுத்து அதனுடன் கடற்பாசி (Agar Agar) மற்றும் முல்தானி மட்டி அல்லது ஓட்ஸ் மாவு சேர்த்து விழுதாக அல்லது களிம்பாக செய்து கொள்ள வேண்டும்.

எந்த சருமத்திற்கு எந்த பழங்கள், காய்கறிகள் முக பேக்கில் பயன்படுத்தப்படுகின்றன?

நார்மலான சருமத்திற்கு     திராட்சை, வாழைப்பழம்

உலர்ந்த சருமத்திற்கு  ஆப்பிள், வாழைப்பழம், கேரட், முலாம் அல்லது தர்பூசணி.

எண்ணெய்ப் பசை சருமத்திற்கு    வெள்ளரி, முட்டைக் கோஸ், தக்காளி, எலுமிச்சை

முதிர்ந்த சருமத்திற்கு ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை

குறையுள்ள சருமத்திற்கு    ஆப்பிள், திராட்சை, தக்காளி, முட்டைகோஸ்

மேலும் சில முக பேக்குகள்:

சாதாரண சருமத்திற்கு:

பால், பாலாடை கலந்த பேக்கை முகத்திற்குத் தடவலாம். எலுமிச்சைச் சாறும், வெள்ளரிச் சாறும் கலந்து தடவி அரை மணி நேரம் கழித்து கழுவிக் கொள்ள வேண்டும்.

உலர்ந்த சருமத்திற்கு:

சூடான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் இரண்டு வைட்டமின் இ மாத்திரைகள், ஒரு வைட்டமின் ஏ மாத்திரை, ஒரு வைட்டமின் டி மாத்திரை சேர்த்து கரைத்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து டவல் ஒன்றின் மூலம் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து பஞ்சினால் துடைத்து எடுக்கவும். இந்த பேக் உலர்ந்த சரும வகைக்கு மிகவும் நல்லது.

எண்ணெய்ப் பசை மிகுந்த சருமத்திற்கு:

1.    முல்தானி மட்டி, ஆரஞ்சு பழச் சாறு, பன்னீர், தேன் ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்பூன் எடுத்து களிம்பாக்கிக் கொண்டு முகத்தில் பூசவும். நன்கு காய்ந்த பின் கழுவிக் கொள்ளவும்.

2.    தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு பேக்கையும் பூசலாம்.

3.    நன்கு நசித்த பப்பாளி பழத்தை முகத்தில் இட்டு 15 நிமிடம் கழித்து கழுவலாம்.

மூலிகை முகப் பேக்குகள்:

1.    மஞ்சள் பொடி, சந்தனம், பால் இவற்றைக் கலந்து முகத்தில் தடவிக் கொள்ளலாம்.

2.    மஞ்சள் பொடி, சந்தனப் பொடி, கடலை மாவு இவற்றைக் கலந்து தடவிக் கொள்ளலாம். அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்.

முகம் பளபளக்க இன்னும் என்ன செய்யலாம்?

1.    வெந்தயத்தைப் பாலில் அரைத்து களிம்பாக்கி முகத்தில் தடவிக் கொள்ளவும். உலர்ந்த பின்பு வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும்.

2.    இளநீர் அல்லது தேங்காய்ப்பால் உடன் சிகப்பு சந்தனப் பொடியினை சேர்த்து கலந்து களிம்பாக்கி முகத்தில் தடவிக் கொள்ளலாம்.

3.    தக்காளிச் சாறு அரை கோப்பை அளவுடன் எலுமிச்சைச் சாறு 30 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து முகத்திலும், கழுத்திலும் தடவிக் கொள்ளவும்.

தண்ணீரை அடிப்படைப் பொருளாக உபயோகித்து தயாரிக்கப்படும் முக பேக்குகள்:

இந்த வகை பேக்குகள் முக சருமத்தை வலுவாக்கும். முகச் சுருக்கங்களைப் போக்கும்.

1. ஆரஞ்சு முக பேக் :

தேன் ஒரு மேஜைக் கரண்டி, ஆரஞ்சுச்சாறு ஒரு தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி முல்தானி மட்டியினை 2 தேக்கரண்டி பன்னீரில் அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்த பின்பு, இதனுடன் தேன், ஆரஞ்சுச் சாறு கலவையினையும் சேர்த்து களிம்பாக்கிக் கொள்ளவும். முகத்தில் தடவி உலர்ந்த பின்பு வெதுவெதுப்பான நீரில் கலந்து பின்பு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளவும்.

2. தேன் பேக் :

முதலாவது பேக்கில் கூறியுள்ள செயல்முறை தான். ஆரஞ்சு பழச் சாறு சேர்த்துக் கொள்வதற்குப் பதிலாக எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.


Spread the love
error: Content is protected !!