நிலா முகம் வேண்டுமா: மூலிகை பவுடர் பயன்படுத்துங்கள்…

Spread the love

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது, மிகவும் முக்கியமான பழமொழி. முகத்தை அழகாக்க வைத்துக் கொள்வதற்கு, எத்தனையோ வழிகள் இருக்கின்றன. தற்போது, புதுப்புது க்ரீம்கள், அழகு சாதனப் பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன. விலை அதிகம் என்றாலும், அதைத்தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு, அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால், பக்கவிளைவுகளும் ஏற்படலாம். இயற்கை முறையில், மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பவுடரை முகத்தில் பயன்படுத்தி வந்தால், உங்களது முகம், நிலா போன்று தெளிவான, மற்றும் பளிச்சென்று மாறும். இயற்கை முறையில், எளிய செலவில், மூலிகைகளைக் கொண்டு முகத்தை அழகாக்குவது எப்படி என்று, சித்தவைத்தியர் பாலு கூறுகிறார்.

முகப்பொலிவு தரும் மூலிகைகள்:

முகம் பளபளப்பாகவும், எப்போதும் நிலவு போல இருப்பதற்கும், பல்வேறு வழிகளில், அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். எளிய முறையில்,மூலிகைகள் மூலம் முகத்தை பொலிவானதாக மாற்ற முடியும். எண்ணற்ற மூலிகைகள் இருந்தாலும், அவற்றில் குப்பைமேனி, சோற்றுக்கற்றாழை, நாயுருவி, அருகம்புல்,சீமை அனத்திபூ, ஆவாரம்பூ, அகத்திப் பூ, கருஞ்செம்பை இலை,  ஊசித்தகரை,கஞ்சாவிலகாரை போன்றவை முகத்திற்கு பளபளப்பை தரும்.

பளபளப்பு தரும் மூலிகை பவுடர்:

முல்தானிமட்டி, பூலாங்கிழங்கு, கோரைக்கிழங்கு,கார்போக அரிசி போன்றவற்றை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை நன்கு வெயலில் காய வைத்து, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.இந்த பொடியை தண்ணீரில் குழைத்து, முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தெளிந்த தண்ணீரால், கழுவி விடுங்கள்.

இந்தபவுடரை பயன்படுத்திய பிறகு, உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள், தேவையற்ற தேமல்.முகத்தில் நெடுநாட்களாக மறையாத கரும்புள்ளிகள்,எண்ணெய் பசை போன்றவை இருக்காது. உங்கள் முகம் குளிர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

முகத்தை அழகாக்க மூலிகை காம்பினேஷன்:

1.முல்தானிமட்டி, நாயுருவி இலை, ஜாதிக்காய் போன்றவற்றை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை நன்கு வெயிலில் காய வைத்து, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.இந்த பொடியை தண்ணீருடன் குழைத்து காலை, மாலை வேளைகளில், முகத்தில் பூச வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து, முகத்தை தெளிந்த தண்ணீரால் கழுவிட வேண்டும்.

பயன்கள்:

இந்த மூலிகைபவுடரை முகத்தில் பூசி வருவதால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து விடும். மேலும், முகம் பளப்பாகவும், தெளிவாகவும் காணப்படும்.

2.அருகம்புல், முல்தானிமட்டி, போன்றவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை தேவையான அளவு எடுத்து சிறிது பன்னீர் சேர்த்து முகத்தில்,பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து, தெளிந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

பயன்கள்:

இவ்வாறு, செய்தால், உங்களது முகம் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். முகப்பொலிவு கூடும். சருமம் சம்பந்தமான பிரச்னைகள் அகலும்.

3.அகத்திக்கீரை, ஆவாரம்பூ, ஜாதிக்காய், முல்தானிமட்டி, சோற்றுக்கற்றாழை போன்றவற்றை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை அரைத்து, முகத்தில் பூசி வர வேண்டும்.

பயன்கள்:

இவ்வாறு காலை,மாலை என இரண்டு வேளைகளில், செய்து வந்தால், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள்,தேமல்,சொறி போன்றவை மறைந்து, உங்கள் முகம் எப்போதும், பளபளப்பாக காணப்படும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love