அழகும் ஆயுர்வேதமும்

Spread the love

எப்பொழுதுமே ஆயுர்வேதம் அக அழகுக்கும், புற அழகுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. இவை இரண்டும் நெருங்கி இணைந்தவை. புற அழகை உணவால், வாழ்க்கை முறையால், அழகு சாதனங்களால் மேம்படுத்தலாம். அக அழகை கட்டுப்பாட்டில் வைத்து, யோகா, தியானம் மற்றும் நற்செயல்களால் மேம்படுத்தலாம்.

சருமப் பாதுகாப்புக்காக ஆயுர்வேதத்தின் முதல் கட்டம் ஒருவர் எந்த ‘டைப்’ சருமத்தை உடையவர் என்பதை தெரிந்து கொள்வது.

வாத சருமம் வாத பிரகிருதி (சுபாவம்)

மெலிந்த, நுண்ணிய துவாரங்கள் (மயிர்க்கண்கள்) உடையது, கருத்த மேனி. குளிர்ச்சியான தோல், கை, கால்கள் அதிக குளிர்ச்சியானவை. உலர்ந்த சருமம். சீக்கிரமாக நீர்மச்சத்துகளை இழந்து விடும். சீதோஷ்ணம் சிறிது மாறினாலும் பாதிக்கப்படும். உலர்ந்த பலத்த காற்றினால் பாதிக்கப்படும்.

வாத விக்ருதி (பாதிப்பு, கோளாறுகள்) 

நிறத்தின் சாயை, (ஜிஷீஸீமீ) சருமப் பளபளப்பு குறைவு

எக்ஸிமா பாதிப்பு

காலாணி, தோல் கடினமாக, காய்த்து போதல், கால் வெடிப்புகள் சினைப்பு (ஸிணீsலீமீs)

பித்த சருமம் பித்த பிரகிருதி (சுபாவம்) 

அழகான, சிவந்த சரீரம் மருக்கள், பழுப்பு புள்ளிகள் உடைய சருமம் ரசாயன பொருட்களுக்கு எளிதில் பாதிப்படையும். உண்ணும் உணவாலும் எளிதில் பாதிப்படையும். பித்த விக்ருதி (பாதிப்பு) சினைப்புகள், தோல் அழற்சி, அரிப்பு

முகம் எண்ணெய் வழியும் சரியான காலத்திற்கு முன்பே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

பருக்கள், கரும்புள்ளிகள், எண்ணெய்  பசை நிறைந்திருக்கும்.

கப சருமம்

கபப்பிரகிருதி (சுபாவம்)

தடிமனான தோல், ஈரமான சருமம் நல்ல சரும சாயை, தொட மிருதுவானது குளுமையானது மெதுவாகத்தான் வயது பாதிப்புகளால் மற்றும். மற்ற இரண்டு தோஷங்களை விட சரும சுருக்கங்கள் குறைவு. கப விக்ருதி (பாதிப்பு), பொலிவு குறைந்த சருமம், விரிவடைந்த துவாரங்கள், கரும்புள்ளிகள், பருக்கள், எக்சிமா இவை மூன்றும் (அ) இரண்டும் கலந்த கூட்டு குணங்கள் உடைய பிரகிதி பிரிவும் உண்டு.

உங்கள் பிரகிருதியை தெரிந்து கொள்ள ஒரு முறையாவது ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.

எண்ணெய் கலவைகள்

தோல் பராமரிப்புக்கு எண்ணெய் மசாஜ், எண்ணெய் குளியல் அவசியம். இதனால் தோல் மிருதுவாகிறது. பிரகிருதிக்கேற்ப, உபயோகிக்க வேண்டிய தைலங்களை கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

வாதக் கலவை

அடிப்படை எண்ணெய், – நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், முளைகட்டிய கோதுமையின் எண்ணெய். மூலிகைகள் – அஸ்வகந்தா, பிரம்மி, இலவங்கப்பட்டை, வெந்தயம், கடுக்காய், துளசி, சதவாரி. கலவை எண்ணெய் – இலவங்கப்பட்டை, மல்லிகை, கஸ்தூரி, ரோஜா, சந்தனம்.

பித்தக் கலவை

அடிப்படை எண்ணெய் – தேங்காய் எண்ணெய், அரிசி உமி எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் மூலிகைகள் – நெல்லிக்காய், தனியா, மல்லிகை, மஞ்ஜிஷ்டி, சந்தனம் கலவை எண்ணெய் – கார்டெனியா (நிணீக்ஷீபீமீஸீவீணீ) மல்லிகை, லெமன் கிராஸ், புதினா, ரோஜா, வெட்டிவேர், சந்தனம்.

கபக் கலவை

அடிப்படை எண்ணெய் – ஆலிவ், பாதாம் எண்ணெய்கள், விட்டமின் ஏ எண்ணெய்கள். மூலிகை – அஸ்வகந்தா, வெந்தயம், கடுக்காய், வேம்பு, யூகலிப்டஸ், கஸ்தூரி

மேற்கண்ட எண்ணெய் கலவை அடிப்படை எண்ணெயையும், கலவை எண்ணெயையும் கலக்க வேண்டிய விகிதம் – 2 அவுன்ஸ் அடிப்படை எண்ணெய்க்கு 20 சொட்டு கலவை எண்ணெயை சேர்க்க வேண்டும்.

கீழ்க்கண்ட மூலிகை களிம்புகளை பயன்படுத்தலாம்

வாத பிரகிருதிகளுக்கு – ஓட்ஸ் (அ) மைசூர் பருப்பு + எள் (அ) கோதுமை (அ) விளக்கெண்ணெய் + பால்.

பித்த பிரகிருதிகளுக்கு – பார்லி (அ) அரிசி மாவு + சூரிய காந்தி எண்ணெய் + கற்றாழை சாறு (அ) எலுமிச்சை சாறு கபப் பிரகிருதிகளுக்கு – கம்பு மாவு + ஆலிவ் (அ) பாதாம் எண்ணை + சுனை நீர்.

                                                                                சத்யா


Spread the love
error: Content is protected !!