ஆயுர்வேத தீர்வு ஹெபாடைடிஸ்

Spread the love

கல்லீரலை பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. இருப்பினும் வைரல் ஹெபாடைடிஸ் பாதிப்பு பொதுவான ஒன்று. கல்லீரல் அழற்சி என்கிற இந்த ஹெபாடைடிஸ் நோய் தாக்கத்தில் கல்லீரல் வீக்கம் அடைகிறது. இதனால் கல்லீரல் செல்கள் அழிக்கப்படுகின்றன. இந்த நோய் தாக்கத்திற்கு குறிப்பிட்ட காரணத்தை சொல்ல முடியாது. அனைத்து விதமான ஹெபாடைடிஸ் நோய்களுக்கு முக்கிய அறிகுறியாக மஞ்சள் காமாலை உள்ளது.

ஹெபாடைடிஸ் பாதிப்பு உள்ள நபருக்கு கல்லீரலில் பாக்டீரியா, வைரஸ் தொற்று உள்பட பல்வேறு, ஒழுங்கற்ற நிகழ்வுகள் இருக்கலாம்.

நச்சுத்தன்மையால் கல்லீரல் காயம் ஏற்படும் வழக்கமான ரத்த ஓட்ட நிகழ்வில் உறுப்புகளின் குறுக்கீடு காரணமாக கல்லீரல் சேதம் பெற்று இருக்கலாம்.

தனது உடல் உறுப்பின் நோய் எதிர்ப்பு முறையாலேயே தாக்கப்படும் நிலையை உணர்ந்திருக்கலாம்.

கல்லீரல் உள்ள வயிற்று பகுதியில், அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கலாம்.

ஹெபாடைடிஸ் தீவிரமாகவோ நீடித்த தன்மையுடனோ இருக்கலாம். தீவிரமான ஹெபாடைடிஸ், பொதுவாக வைரல் தொற்று காரணமாகவே ஏற்படுகிறது. அளவுக்கு மீறிய மருந்து ரசாயன பாதிப்புகளால் இந்த வகை ஹெபாடைடிஸ் ஏற்படலாம்.

6 மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் ஹெபாடைடிஸ் குரோனிக் அல்லது நீடித்த ஹெபாடைடிஸ் வகை எனப்படுகிறது.

ஹெபாடைடிஸ் பொதுவாக 3 வகை வைரஸ்களான ஹெபாடைடிஸ் ‘ஏ’ வைரஸ், ஹெபாடைடிஸ் ‘பி’ வைரஸ், ஹெபாடைடிஸ் ‘சி’ வைரசால் ஏற்படுகிறது.

ஹெபாடைடிஸ் ‘ஏ’

இந்த வகை ஹெபாடைடிஸ் குழந்தைகளிடம் காணப்படுகிறது. தொற்று வகை ஹெபாடைடிஸ் என்றும் இது அறியப்படுகிறது. ஹெபாடைடிஸ் ‘ஏ’ வைரஸ் (பிகிக்ஷி) சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை நீடிக்கலாம். இந்த வைரஸ் கெட்டுப் போன உணவு, கெட்டுப் போன பானங்கள் சாப்பிட்ட கழிவுகள் வழியாகவும், நபர் 1 ல் மிக அருகாமையில் தொட்டுக் கொள்ளும் போதும் பாதிக்கலாம்.

ஹெபாடைடிஸ் ‘ஏ’ பாதித்த 14 – 20, நாட்களுக்குப் பின்னரே அறிகுறிகள் ஏற்படலாம். இந்த வைரஸ் பாதிப்பு 6 மாதம் வரை நீடிக்கும் தன்மை கொண்டது.

நோய் தடுப்பு மருந்து

ஹெபாடைடிஸ் ‘ஏ’ நோய் தடுப்பு மருந்து 1 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. சில நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கும், அந்நோய் வருவதற்கு வாய்ப்புள்ள மக்களுக்கும், இந்நோய் தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

ஹெபாடைடிஸ் ‘பி’ (பிஙிக்ஷி)

ஹெபாடைடிஸ் ‘பி’ வைரஸ் பாதிப்பு, உலகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. சிறிய சுகவீனம் முதல் சில வாரங்கள் (தீவிர நிலை) மற்றும் நீண்ட கால சுகவீனத்தை ஏற்படுத்துவதாக இது உள்ளது. இந்த நோய் தாக்கத்தால் கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் புற்று ஏற்படுகிறது.

இது பரவும் முறை

பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள திரவம் ஆன ரத்தம், நிணநீர், உமிழ்நீர், மனிதக் கழிவு, சிறுநீர் மூலம் பரவும்.

கெட்டுப்போன ரத்தம் ஏற்றுதல் காரணமாக வரும்.

மருந்து போடும் ஊசி அல்லது சிரிஞ்சுகள் கெட்டுபோன நிலையில் பயன்படுத்துவதால்

பிஙிக்ஷி பாதித்த நபருடன் பாலியல் உறவு கொள்வதால்

பிஙிக்ஷி பாதித்த தாயிடம் இருந்து புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த ஹெபாடைடிஸ் ‘பி’ வைரஸ் நோய் பாதிக்கிறது.

நோய் தடுப்பு மருந்து

அனைத்து திசுக்கள் மற்றும் வளர்ந்த குழந்தைகள், வளர் பருவத்தினர் (தடுப்பு ஊசி, ஏற்கனவே போடாதவர்கள்)

பிஙிக்ஷி தொற்று ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் பெரியவர்கள் நோய் தடுப்பு ஊசி போட வேண்டும்.

உலக அளவில் மிக அதிக அளவில் உயிர்களை கொல்லும் 10 வியாதிகளில் ஒன்றாக ஹெபாடைடிஸ் உள்ளது. ஹெபாடைடிஸ் ‘பி’ நோய் பாதித்த நோயாளிகள் இறப்பு எண்ணிக்கை, ஆண்டு தோறும் எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாகும். ஹெபாடைடிஸ் இந்தியாவில் பரவலாகவும், தீவிரமாகவும் உள்ளது.

ஹெபாடைடிஸ் ‘பி’ பாதிப்பால் 4 கோடி இந்தியர்கள் அவதிப்படுவதாகவும் ஹெபாடைடிஸ் ‘சி’ வைரஸ் தொற்றால் 1 கோடியே 10 லட்சம் பேரும், அவதிப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கல்லீரல் செயல் இழப்பு, கல்லீரல் புற்றுநோய்க்கு இவை காரணங்களாக உள்ளன. இந்தியாவில் மிக அதிக அளவில் ஹெபாடைடிஸ் ‘இ’ நோயாளிகள் உள்ளனர். இதையடுத்து ஹெபாடைடிஸ் ‘பி’ நோயாளிகள் உள்ளனர். இந்தியாவின் 4 சதவீத மக்களுக்கு பிஙிக்ஷி (ஹெபாடைடிஸ் ‘பி’ வைரஸ்) தாக்கியுள்ளது.

4 கோடி மக்கள் ஹெபாடைடிஸ் ‘பி’ வைரஸ் பாதிப்பில் உள்ளனர்.

1 சதவீத இந்தியர்கள் அதாவது 1 கோடியே 10 லட்சம் பேருக்கு ஹெபாடைடிஸ் ‘சி’ வைரஸ் பாதிப்பு உள்ளது. தற்போதைய கால கட்டத்தில் ஹெபாடைடிஸ் ‘ஏ’ மற்றும் ‘பி’ வைரஸ்கள் தடுக்க மருந்துகள் உள்ளன.

ஹெபாடைடிஸ் ‘சி’

ஹெபாடைடிஸ் ‘சி’ வைரஸ் பாதிப்பு (பிசிக்ஷி) சில நேரம் தீவிர சுகவீனத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட காலம் பாதிப்புத் தன்மையையும் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக சிரோசிஸ் என்ற நோய் தாக்கம் ஏற்பட்டு செல்கள் மோசமடைவதுடன் திசுக்களும் கடினமாகி விடுகின்றன. இது அபாயகரமான நோய். இதற்கு திறன் வாய்ந்த சிகிச்சை முறை இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஹெபாடைடிஸ் ‘சி’ வைரஸ் பரவும் முறை

மருந்து ஊசிகளை பகிர்தல்

முறையாக சுத்தம் செய்யப்படாத கருவிகளை (ஊசியை) பயன்படுத்தி உடலில் பச்சை குத்திக் கொள்ளும் போது

ரத்தம் மற்றும் உடல் திரவம் ஏற்றும் போது

தாயிடம் இருந்து புதியதாகப் பிறந்த குழந்தைக்கு வருதல்

பாலியல் உறவால் (பொதுவாக இந்த வகையில் குறைவாக வருகிறது)

தடுப்பூசி

ஹெபாடைடிஸ் ‘சி’ வைரஸ் பாதிப்பு தடுக்க தடுப்பு ஊசி இல்லை.

ஹெபாடைடிஸ் டி

ஹெபாடைடிஸ் டி வைரஸால் (பிஞிக்ஷி) தீவிரமான கல்லீரல் நோய் ஏற்படுகிறது. இது பெருக்கம் அடைவதற்கு பிஙிக்ஷி வைரஸை சார்ந்து இருக்கிறது. ஹெபாடைடிஸ் ‘பி’ வைரஸ் முன்னிலையிலேயே, இந்த பிஞிக்ஷி உள்ளது. தொற்று பாதித்த ரத்தம் மூலமாகவும், பிஙிக்ஷி பரவுவதைப் போலவே பரவுகிறது.

ஹெபாடைடிஸ் ‘இ’

ஹெபாடைடிஸ் ‘இ’ தீவிரமான கல்லீரல் நோய். தீவிரமான தொற்றால் ஏற்படுகிறது. நீண்ட காலம், இந்த நோய் நீடிப்பது இல்லை. குறிப்பிட்ட தருணத்தில் பரவும் தொற்று நோய் காரணமாகவும் பலரும் நாடுகளில் உள்ள பொதுவகை ஹெபாடைடிஸ் காரணமாகவும் இந்த வைரஸ் நோய் ஏற்படுகிறது.

ஹெபாடைடிஸ் ‘ஏ’ வைரஸ் பாதையைப் போல, மனிதக் கழிவு பாதை வழியாக இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. தூய்மை பராமரிப்பு இல்லாத நாடுகளில், மாசடைந்த தண்ணீரால் இந்த ஹெபாடைடிஸ் ‘இ’ வைரஸ் நோய் ஏற்படுகிறது.

ஆயுர்வேதம் நிலையில்

ஆயுர்வேதத்தில், ஹெபாடைடிஸ் ‘ஷாகஸ்ரிட கமலா’ (கல்லீரல் செல் மஞ்சள் காமாலை) எனப்படுகிறது. கபா, பித்த நீர் பாதையை தடுக்கும் போது ஏற்படும் விளைவாக இத்தகைய நிலை ஏற்படுகிறது. பித்த நீர் பாதை கோஸ்டா (குடல்) பகுதியை அடையும் வன, மனித கழிவின் பகுதி களிமண் போல் இருக்கிறது.

அனைத்து வகை ஹெபாடைடிஸ் நோய்களும், வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகளால் ஏற்படுகின்றன. பித்த நீர் பாதையை மேம்படுத்தும் மருந்துகள் துவக்கத்தில் தரப்படுகின்றன. உணவு வகைகளும் அதற்கேற்றார் போல அளிக்கப்படுகின்றன.

மனிதக் கழிவின் பகுதி களிமண் நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறும் வரை இவ்வாறு மருந்துகள் தரப்படுகின்றன. அதன் பின்னர் பித்த நீர் தீவிரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அறிகுறிகள்

சிலருக்கு ஹெபாடைடிஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தெரியாது. அவர்கள், பாதிக்கப்பட்டு இருப்பதையும் அறிவதில்லை. ஹெபாடைடிஸ் நோயின் துவக்கக் கட்டத்தில் ப்ளூ போன்ற அறிகுறிகள் காணப்படும்.

மஞ்சள் காமாலை (தோல், கண்கள் மஞ்சள் நிறம்)

வலது ஹைபோகோண்ட்ரியாவில் வலி (அடிவயிற்றின் மேல் வலதுப் பகுதி)

தீவிரமானச் சோர்வு

வாந்தியெடுப்பதை போல சுகவீனம்

மலைய்ஸ் (பொது சுகவீன உணர்வு)

வாந்தி எடுத்தல்

அடிவயிற்று வலி

பசி உணர்வு குறைதல்

இலேசான காய்ச்சல்

கல்லீரல் நோய் தாக்கத்தில் இருக்கும் போது அறிகுறிகள் வருகின்றன. அப்போது கல்லீரலில் சுரக்கும் ரசாயனங்கள் ரத்தத்தில் சேரும் போது.

மஞ்சள் காமாலை

தவறான சுவாசம்

வாயில் கசப்பு

கருமையான அல்லது தேனீர் நிறத்தில் சிறுநீர்

வெண்மையான, வெளிநிற அல்லது கருநிற மலக்கழிவு

இவை ஒழுங்கு நிலையை அடைய பல மாதம் முதல் ஒரு வருடம் வரை கூட ஆகலாம்.

தொற்றும் தன்மை

ஹெபாடைடிஸ் ஏ, பி, சி வைரஸ் தொற்று நோய் வகையைச் சார்ந்தது ஆகும். பாதிப்பு ஏற்பட்ட நபரை தொட்ட பின்னர் கைகளை கழுவ வேண்டும். ஹெபாடைடிஸ் ‘ஏ’ வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளுக்கு பயணம் செய்யும் போது உங்கள் குழந்தைக்கு ஹெபாடைடிஸ் ‘ஏ’ வைரஸ் தடுப்பு மருந்து 2 டோஸ் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்.

தடுப்பு நடவடிக்கை

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் கைகளை, டாய்லெட் சென்று வந்த பின்னர் நன்றாக கழுவ வேண்டும்.

நல்ல ஆரோக்கிய சூழ்நிலையை கடைபிடிக்க வேண்டும். ஆரோக்கியமற்ற வாழும் சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும்.

டாய்லெட் சமையல் பாத்திரங்கள் அலம்பும் பகுதி, படுத்த படுக்கையில் பயன்படுத்தப்படும் கழிவுக் கலம் ஆகியவற்றை ஆன்டி செப்டிக் க்ளீனர் மூலம் தூய்மைப்படுத்த வேண்டும்.

பாலியல் உறவு மூலம், ஹெபாடைடிஸ் வைரஸ் பரவுவதை தடுக்க பாதுகாப்பான பாலியல் உறவு மேற்கொள்ள வேண்டும்.

மன இறுக்கம் அதிகரித்தல், காற்று மாசு, உணவு மாசு மற்றும் தூய்மையற்ற தண்ணீர் ஆகியவற்றால் கல்லீரலின் பணி கடுமையாகிறது. கல்லீரலுக்கு, முறையற்ற நிகழ்வு ஏற்படும் அதன் சமிக்ஞை உடல் மற்றும் மூளைப்பகுதியில் ஏற்படுகிறது. என்ன பாதிப்பு என்பதை உடனடியாக கண்டறியாத சூழலில், விபரீதமான, சிக்கலான துன்பங்கள் ஏற்படுவதுடன், செலவினங்களும் மிக அதிகாமாகி விடுகின்றன.

ஹெபாடைடிஸ் உணவு முறை

கல்லீரலை பாதுகாக்க மது அருந்துதல், காபின் பொருட்கள் உள்ள காபி போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும். மூலிகை பானங்கள் அருந்தலாம்.

ஆல்கஹால் (மது)

மது அருந்துவதை தவிர்க்கும் போது, ஹெபாடைடிஸ் வைரசால் பாதித்த நோயாளிகளின் கல்லீரல் விரைவாக குணமடையும். கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும் அபாய காரணியாக மது அருந்துதல் உள்ளது.

கொழுப்பு

கல்லீரல் நோயில், உடல் பருமன் என்பது அபாய காரணியாக உள்ளது. ஏனெனில் கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளும் கொழுப்பை பெறுபவையாக உள்ளன. கொழுப்புச் செல்கள் ஊடுருவி கல்லீரலில் சிரோசிஸ் நிலையை ஏற்படுத்தலாம். உடல் எடையை குறைக்க சரியான உணவு முறை, மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் கல்லீரல் நலனுக்கு நல்லதாகும்.

இரும்புச்சத்து

கூடுதல் இரும்புச்சத்தை சேர்ப்பதன் மூலம் கல்லீரல் சேதம் ஏற்படலாம். ஹெபாடைடிஸ் ‘சி’, வைரசால் பாதித்தவர்கள் இரும்புச்சத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இணை உணவுகள்

முளை கட்டிய தானியங்கள், என முளைகட்டிய கோதுமை மற்றும் தானிய வகைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் செயல்பாட்டுத்திறனை மேம்படுத்த முடியும். ஜீரணத் திறனை மேம்படுத்த மோர் வெகுவாக உதவும். பழுப்பு அரிசி, காய்கறிகள், பீன்ஸ், பருப்பு, பட்டாணி, முழுகோதுமை, பிரட், காய்கறிச் சாறு, மூலிகை தேனீர், வீட்டில் செய்த காய்கறி சூப் பழங்கள் நல்ல பலன் தரும். ரத்தத்தை தூய்மைப்படுத்த பச்சைக்காய்கறிகள் மற்றும் முளைகட்டிய தானியங்கள் உதவும். கல்லீரலை பலப்படுத்த மூங் பீன்ஸ் உதவும்.

தீவிரமான, ஹெபாடைடிஸ் நிலை சிகிச்சையின் போது சூடான, மசாலா நிறைந்த, புளிப்பான, உப்பு கலந்த உணவு, இறைச்சி, மீன், பாலாடைக்கட்டி, எண்ணெய், வறுத்த உணவு, இனிப்பூட்டிய பொருட்கள் பால், நெய் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

சிகிச்சை

ஹெபாடைடிஸ் நோய் குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பின்னர், தானாக குணமாகும் நோயாகும். இதற்கு என, பிரத்யேக சிகிச்சை முறைத் தேவை இல்லை. நீண்ட கால பாதிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வைரஸ் ஹெபாடைடிஸ் பாதிப்பு உள்ளவர்கள் கீழ்கண்ட முறையை கடைபிடிப்பது நல்லது.

ஹெபாடைடிஸ் பாதித்த முதல் வாரம் அல்லது மலக்கழிவு, பழுப்பு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறும் வரை.

திரிகடு சூரணம்

1 டீஸ்பூன் அளவு தினமும் 2 முறை மிதமான சூடு உள்ள தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

வெள்ளரி, பீட்ரூட், கேரட், வெங்காயம் மற்றும் எலுமிச்சையை தண்ணீர் அல்லது தண்ணீர் இல்லாமல் பிழிந்து, இதன் அதிக அளவு சாறுகளை அருந்த வேண்டும்.

இந்தியன் கற்றாழை (அலோ பார்பெடன்சிஸ்) கல்லீரல் செயல்பாட்டை தூண்டக் கூடியதாகும். கற்றாழையின் ஒற்றை இலையை கறுப்பு உப்பு மற்றும் இஞ்சியுடன் அரைத்து 10 நாட்களுக்கு சாப்பிடலாம். உடல் அழற்சி, வீக்கம், போன்றவற்றை தடுக்க கிராம்பு, பூண்டு வகைகள் சேர்க்கலாம்.

தினமும் இதனை உணவில் சேர்ப்பது நல்லது.

எதை சாப்பிடக் கூடாது?

பர்கர், பிட்சா பேஸ்ட்ரி, சாக்லெட், சான்விட்ச், வறுக்கப்பட்ட பொருட்கள், கார்பனேட் செய்யப்பட்ட குளிர்பானங்கள், மசாலா உணவுகள், குழாய் தண்ணீர், செயற்கை இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும்.

ஹெபாடைடிஸ் உணவு முறையில் குறைந்த கொழுப்பு, குறைந்த சர்க்கரை, குறைந்த புரதம் இருக்க வேண்டும். அதே நேரத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஹெபாடைடிஸ் நோயில் குணமடைந்த பின்னரும் கொழுப்பு, வறுத்த உணவுகள் ஆகியவற்றை ஒரு ஆண்டுக்கு தவிர்ப்பது நல்லது.


Spread the love
error: Content is protected !!