ஹீமோகுளோபின் அளவை கூட்டும் இயற்கை உணவுகள்..

Spread the love

நாம் இந்த உலகத்தில் ஆரோக்கியமாக இருக்க, இரத்தத்திற்கு தான்  பெரிய பங்கு உள்ளது. அதிலும், குறிப்பாக ஈமோகுளோபின் மிக முக்கிய பங்கை வகிக்கிறதினால், இரத்தத்தில் அதை சரியான அளவில் பராமரிக்கின்றது. அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஈமோகுளோபின், நம் சிவப்பு இரத்த அணுக்களில் இருக்கும் இரும்பு சத்து நிறைந்த ஒரு புரதம். நம் உடலில் முழுக்க ஆக்சிஜனை எடுத்து செல்லும் பொறுப்பு இந்த புரதத்திற்கு தான் உள்ளது. ஈமோகுளோபின் அளவு ஆண் பெண் இரண்டு பேருக்கும் மாறுபடக்கூடியதாக உள்ளது.

வயது வந்த ஆண்களுக்கு 14-ல்ல இருந்து 18 m/g per deciliter- ம், வயது வந்த பெண்களுக்கு 12-ல் இருந்து 16 m/g per deciliter -ம், இருக்க வேண்டும். இதற்கு கீழே இருக்கும் போது உடல் வலிமையை இழந்து, ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்கான திறன் இல்லாமல் போகவும், அனிமியா போன்ற பல நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 

ஈமோகுளோபின் அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான  வழி இயற்கை உணவில் அதிகமாகவே உள்ளது. போலிக் அமில குறைபாடு இருந்தால் ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். அதனால் போலிக் அமிலம் அதிகமாக இருக்கும் பச்சை இலை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, சத்தூட்டப்பட்ட தானியங்கள், கடலை, வாழைப்பழம், போன்ற உணவுகளை சாப்பிட்டு வருவது அவசியம்.

பீட்ரூட், இதற்கு நல்ல பயன் தரும். இதில் இரும்பு சத்து, போலிக் அமிலம், நார்சத்து, மற்றும் பொட்டாசியம்,  சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்க உதவும். அதை தொடர்ந்து தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ஈமோகுளோபின் அளவை சீராக வைக்கலாம். முடிந்தால் கிரீன் ஆப்பிள் எடுத்து கொள்ளலாம்.


ஈமோகுளோபின் குறைவதற்கு, இரும்பு சத்து ஒரு பொதுவான காரணாமாயிருக்கும். அதனால், சிகப்பு இறைச்சி, இறால், கீரைகள், பாதாம் , பேரிச்சம்பழம், பயறு , கடல் சிப்பி, அஸ்பாரகஸ் போன்ற இரும்பு சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். வைட்டமின் சி குறைபாட்டாலும் ஈமோகுளோபின் அளவு குறையும். அதனால் , வைட்டமின் சி நிறைந்த, பப்பாளி, ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்டராபெரி, குடை மிளகாய், ப்ராக்கோலி, பப்ளிமாஸ், தக்காளி இதையும் சாப்பிடலாம்.

குறிப்பாக,  மாதுளம்பழத்தில், இரும்புசத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்சத்து நிறைந்திருக்கும். இதில் இருக்கும் ஊட்டச்சத்து, இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவை சரியான விகிதத்தில் பராமரிக்கலாம். அதோடு தினமும்  உடற்பயிற்சி செய்வதும் நல்லது தான். ஏனென்றால்? நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உடலுக்கு தேவையான ஆக்சிஜனை  உங்கள் உடல் உற்பத்தி செய்யும். அதனால் மிதமான அளவில் இருந்து கடினமான அளவு வரை ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளை செய்யலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆயுர்வேதம். காம்Spread the love