ஆண்டுக்கு ஒரு தடவை உயரத்தை அளந்து பாருங்கள். ஒரு சுவருக்கு எதிராக நேராக நில்லுங்கள். ஒரு சிறிய அட்டை அல்லது பென்சிலை உங்கள் தலையின்மேல் வையுங்கள். அட்டை அல்லது பென்சில் சுவற்றில் படுகின்ற இடத்தில் ஒரு புள்ளி வைத்துக் கொண்டு உயரத்தை அளந்துகொள்ளுங்கள். இயல்பாக நீங்கள் முன்பிருந்த உயரத்தை விடக் குறைந்திருந்தால் உங்களது உடலில் கால்ஷியக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது Osteoporosis எனப்படும் எலும்பு நொய்மையின் விளைவாகவும் இருக்கலாம். பெண்களிடையே இது அதிகம் காணப்படலாம்.
பருமன் என்பது ஒவ்வொரு வாரமும் ஏன் ஒவ்வொரு நாளும் கூட மாறலாம். பெண்களுக்கு மாதவிடாய்ச் சுழற்சியை ஒட்டி எடையில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். மாதம் ஒரு முறையாகிலும் உங்கள் எடையைச் சோதியுங்கள். உங்கள் கொழுப்பு / தசை தகவு சரியாக உள்ளதா என்பதை கிள்ளுப் பரிசோதனை மூலம் ஓரளவு அறியலாம். மேல் புஜத்தின் உட்புறத்திலும் அடிவயிற்றிலும், தொடையிலும் கிள்ளிப் பார்ப்பதற்கான இடங்களாகும்.
மேலும் தெரிந்து கொள்ள…