வேனல் கட்டியை விரட்ட..

Spread the love

கோடை காலத்தில் வந்து கொடுமைபடுத்தும் ஒரு உடல் உபாதை வேனல் கட்டி ஆகும். அதிக வெப்பத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து முகம் மற்றும் உடலில் வேனல் கட்டிகள் தோன்றுகின்றன. வேனல் கட்டி மறைய மற்றும் ஏற்படாமல் இருக்க முதலில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோடை காலங்களில், அதிக வெப்பத்தால், நீர்ச்சத்து இழப்பால் தோன்றும் அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

வேனல் கட்டிக்கு வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே நிவாரணம் பெறலாம். வேனல் கட்டி ஆரம்ப கட்டத்தில் மிகவும் வலியை ஏற்படுத்தும். அதற்கு சிறிது சுண்ணாம்புடன் தேன் குழைத்து கட்டி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கட்டி மறைந்து வலி குறையும். கற்றாழையை வெட்டி உள்ளே உள்ள ஜெல்லை எடுத்து வேனல் கட்டி ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வேனல் கட்டி மறையும்.

வேனல் கட்டி குணமாக மஞ்சளை கல்லில் உரசி அதை கட்டியின் மீது தடவ வேண்டும். இதன் மூலம் வேனல் கட்டியிலிருந்து நிவாரணம் பெறலாம். சந்தனத்தை உரசிக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்து கனமாக பத்து போட்டால் வேனல் கட்டி குணமாகும். சோப்பை தூளாக்கிக் கொண்டு அதனுடன் மஞ்சள் மற்றும் கல் உப்பை சேர்த்து குழைத்து வேனல் கட்டி ஏற்படும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வேனல் கட்டி மறையும்.

சூட்டினால் ஏற்படும் கட்டி மறைய வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் வேனல் கட்டி மறையும். நல்லெண்ணெய் உடல் உஷ்ணத்தை குறைக்கும். கடுகை அரைத்து வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில் பற்று போட்டாலும் வேனல் கட்டி மறையும். வெள்ளைப் பூண்டை நசுக்கி அதனுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில் பத்து போட்டு வந்தால் வேனல் கட்டி குணமாகும்.

இதெல்லாம் பக்க விளைவுகள் இல்லாத கை வைத்தியமாகும். வேனல் கட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் செய்து பாருங்கள். பலன் பெறுங்கள்.


Spread the love
error: Content is protected !!