இதய நோய்கள் உணவு மருத்துவம்

Spread the love

உலகிலேயே அதிகமாக மனிதர்கள் இறப்பதற்கு முதல் காரணம் மாரடைப்பு, ஏழை, பணக்காரன், ஆண், பெண் என்ற வித்தியாசம் ஏதுமின்றி எல்லோரையும் தாக்குகிறது இந்த “ஆட்கொல்லி” இருதய நோய். இதில் கவலையளிக்கும் செய்தி என்னவென்றால் அதிகமாக (75%) மாரடைப்பில் இறக்கிறவர்கள் 30 லிருந்து 50 வயதுக்குட்பட்டவர்கள். அதுவும் மாரடைப்பு திடீரென்றுதாக்கி மரணத்தை ஏற்படுத்துவது மனித சமுதாயத்திற்கு ஒரு சவாலாக இருக்கிறது.

மாரடைப்பு வருவதற்கு காரணங்கள்

அதிக கொலஸ்ட்ரால்ரத்த தமனிகளில் கொழுப்புகள், ட்ரைகிளிசரைடுகள் அதிகமாக இருப்பது பரம்பரை, புகைபிடித்தல், அதிக இரத்த அழுத்தம் இன்றைய அவசர வாழ்க்கையில் ஏற்படும் மன இறுக்கம், நீரிழிவு நோய் போன்றவை.

இருதய நோய்களை வருமுன் காப்பது நல்லது. இதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. இருதய நோயை சமாளிக்க பல வழிகளில் முனைய வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, நோய் வந்தால் சரியான சிகிச்சை, வாழ்வுமுறைகளில் மாற்றம், மன நிலையில் அமைதி என்ற பல வழிகளில் இந்த நோயை சமாளிக்க வேண்டும்.

ஆயுர்வேதத்தில் இருதய நோய்களுக்கு உன்னதமான மருந்துகள் உள்ளன. இம் மருந்துகளுடன், உணவுக்கட்டுப்பாடும் சேர்ந்தால் சிகிச்சை பலனளிக்கும். முதலில் உணவுமுறைகளைப் பார்ப்போம்.

சாப்பிடும் உணவு எவ்வளவு கலோரிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வயதாக வயதாக, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு, 1500 கலோரிகள் போதுமானது. எல்லோரும் அறிந்தது – உணவில் கொழுப்பை குறைப்பது நல்லது. வனஸ்பதி, வெண்ணெய் இவற்றை அறவே தவிர்க்கவும். சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் உண்ணும் உணவில் மொத்த கலோரிகளில், 30% மாத்திரம் கொழுப்பு இருக்கும்படி உண்ணுங்கள். உங்கள் எடை சரியாக இருந்தால் மாவுச்சத்து, கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகமாக்கி கொழுப்பை விட்டு விடுங்கள். நெய்யை தவிர எண்ணெய்யில் பொரித்தவை. வதக்கியவை போன்ற உணவுகள் உங்கள் மொத்த கலோரிகளின் தேவையில் 10% சதவீதத்திற்கு மேல் போகக் கூடாது. நெய் மற்றும் எண்ணெய்கள் உள்ள உணவுகள், 420 கலோரிகளுக்குள் கட்டுப்படுத்துங்கள்.

நார்ச்சத்தும், மாவுச்சத்தும் மிகுந்த கோதுமை, அரிசி, பீன்ஸ், ஒட்ஸ் மாவு, காய்கறி, பழங்கள் போன்ற உணவுகள் நல்லவை. சமையலில் ஆலிவ் எண்ணெய், தானிய எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கவும். 4 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 2 கிலோ எண்ணெய்க்கு மேல் உபயோகிக்க கூடாது. இல்லை, ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் போதுமானது.

குறைந்த கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். அதற்காக, ஒரேடியாக பால், சீஸ், கோழி, மீன், மாமிச உணவு இவற்றை நிறுத்தி விடாதீர்கள். இவை உங்கள் உடலுக்கு தேவையான மற்ற சக்திகள் நிறைந்தவை. இவற்றின் அளவை குறையுங்கள்.

உங்கள் தினசரி கொலஸ்ட்ரால் தேவை ஒரு நாளைக்கு 300 மில்லி கிராமை தாண்டக்கூடாது. ஐஸ்கிரீம், கேக், குல்ஃபி இவற்றை தவிர்த்திடுங்கள். இளநீர், பூண்டு, நெல்லிக்காய் சாறு இவை இதயத்திற்கு இதமளிப்பவை. தவிர வைட்டமின் “இ” இதயத்தை பாதுகாக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் “இ” மாத்திரைகளை சாப்பிடவும்.

பழங்களும், காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். முட்டைகோஸ், காலிஃப்ளவர், கேரட், வெள்ளரி, பூண்டு, வெண்டைக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு, பரங்கிக்காய், முள்ளங்கி, கீரைகள், முளைகட்டிய அவரை விதை வகைகள் இவைகள் உணவில் சேர்க்கவும். பழவகைகளில் ஆப்பிள், வாழைப்பழம், பேரீட்சை, அத்திப்பழம், எலுமிச்சம்பழம், ஆரஞ்சுப்பழம், பப்பாளி, மாதுளம்பழம், தர்பூசணி இவைகளை சேர்த்துக் கொள்ளலாம். கலோரிகளை குறைக்க, மாம்பழத்தை பாதிக்கு மேல் உண்ண வேண்டாம். (நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு மேற்கண்ட உணவு முறைகள் பொருந்தாது. அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவை). அடுத்தது உப்பு. உணவில் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவும். 2400 மி.கி. உப்பு (சோடியம்) ஒரு நாளுக்கு போதுமானது. முடிந்தால் இந்த அளவையும் குறைக்கவும். உடல் எடையை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஓர் வளையம்போல் வயிற்றை சுற்றி கொழுப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். சுறுசுறுப்பாக இருங்கள்.

உணவு நலம் ஜுன் 2011

இதய நோய்கள், உணவு, மருத்துவம், மாரடைப்பு, இருதய நோய், மாரடைப்பு வருவதற்கு காரணங்கள், கொலஸ்ட்ரால், ரத்த தமனி, கொழுப்புகள், ட்ரைகிளிசரைடுகள், புகைபிடித்தல், இரத்தஅழுத்தம், மன இறுக்கம், நீரிழிவு, இருதயநோய், சரியான உணவு, உடற்பயிற்சி, சிகிச்சை, ஆயுர்வேதம், மருந்துகள்உணவுக்கட்டுப்பாடு, மாவுச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, மாவுச்சத்து, சமையல், ஆலிவ் எண்ணெய், தானிய எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், மருத்துவர், வைட்டமின், , பழங்கள், காய்கறிகள், முட்டைகோஸ், காலிஃப்ளவர், கேரட், வெள்ளரி, பூண்டு, வெண்டைக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு, பரங்கிக்காய், முள்ளங்கி, கீரைகள், முளைகட்டிய நீரிழிவு வியாதி, உணவு முறைகள், மருத்துவ ஆலோசனை, மாரடைப்பு, சுறுசுறுப்பாக இருங்கள்,


Spread the love