வாய்விட்டு சிரிச்சா மட்டும் தான் நோய் விட்டு போகுமா?

Spread the love

வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல, மனம் விட்டு அழுதாலும் கூட, நோய் விட்டு போகும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? சிரிப்பை போலவே அழுகையும் ஓர் வரம் தான். ஏனெனில், இதுவும் நம் உடல்நலனுக்கு நன்மை விளைவிக்க கூடியது தான்.

மகிழ்ச்சியில் சிரிக்காமல் இருப்பதை விட, துன்பத்தில் அழாமல் இருப்பது தான் பெரும் நோய். நீங்களே கூட சிலரை உங்கள் நட்பு / உறவுகளில் பார்த்திருக்கலாம். அல்லது “அட, என்ன ஒரு கல் நெஞ்சுக்காரன் துளி கூட அழாம இருக்கான்.” என்று நீங்களே கூட யாரையேனும் கூறியிருக்கலாம் அல்லது யாரோ உங்களை கூறியிருக்கலாம்.

சிலருக்கு எவ்வளவு துன்பம் வந்நாலும் அழுகை வராது. இதுவும் ஒருவகையான குறைபாடு தான். அந்த வகையில் நீங்கள் ஏன் கட்டாயம் அழ வேண்டும் என்று இனி தெரிந்துக் கொள்ளலாம்.

கண்ணீர் வெளிப்படும் போது கண்கள் சுத்தமாகிறது, கண் இமைகள் மற்றும் விழிகள் இமைக்கப்பட்டு சுத்தமாகிறது, பார்வையை தெளிவாகிறது.

கண்ணீரானது லைசோசைமைக் (Lysozyme) கொண்டுள்ளது. இது கண்ணில் இருக்கும் 90 – 95% பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி வாய்ந்த திரவம் ஆகும்.

அழுவதால் உடலில் இருக்கும் பெருமபாலான நச்சுக்கள் அகற்றப்படுகிறது. இதை நாமே சில சமயங்களில் உணர்ந்திருக்கலாம், நாம் அழுது முடித்த சில நிமிடங்கள் கழித்து உடல்நிலை மற்றும் மன நிலை இலேசானது போல உணர்ந்திருப்போம்

நம் மன நிலை மேலோங்கவும், மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் வெளியேறவும் அழுகை உதவுகிறது. தோல்வியில் துவண்டிருக்கும் சிலர் மனம் விட்டு அழுத பிறகு, தன்னம்பிக்கையுடன் திகழ இதுதான் காரணம்.

மாங்கனீஸ் சத்தை குறைக்கிறது, மாங்கனீஸ், மனிதர்களின் மன நிலையில் பாதிப்பை / தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அழும் போது மாங்கனீஸ் குறைவதால், மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது.

இயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தை சீராக்க சிறந்த வழியாக திகழ்கிறது அழுகை. அழுத பிறகு, உடலின் இரத்த அழுத்தம் சம நிலைக்கு திரும்பி. உடலை இளகிய நிலையில் உணரவும் இது பயன் தருகிறது.

அழுவது நம் மன அழுத்தத்தை குறைக்கிறது. இது கொஞ்சம் கடினம் தான், மன அழுத்தம் ஏற்படும் போது அதை குறைக்க உடனே அழ முடியாது, இடம், பொருள், ஏவல் எல்லாம் பார்க்கவேண்டும். ஆனால், அழுகை வரும் போது அடக்குவதும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் சொல்வதுண்டு.


Spread the love