நம் உடலில் நச்சுப்பொருட்கள் எவ்வாறு சேருகின்றன? சுற்றுப்புற சூழ்நிலையிலிருந்து உருவாகும் தூசி, மாசுகள் தவிர நாம் உண்ணும் உணவிலிருந்தும் நம் உடலில் குடிகொள்கின்றன. நச்சுப்பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுவதால், ஆரோக்கியம் சீரடைகிறது. ஆயுர்வேதம் தொன்று தொட்டு உடலை விஷப்பொருட்கள் இல்லாமல் வைப்பதின் அவசியத்தை வலியுறுத்தி விடுகிறது. அதற்காக சிறந்த சிகிச்சை முறையான “பஞ்சகர்மா” வை உருவாக்கியது. தவிர சிகிச்சை முறைகளின்றி உணவு முறைகளாலேயே நச்சுப்பொருட்களை விலக்கும் வழிகளையும் ஆயுர்வேதம் சொல்கிறது.
நச்சுப்பொருட்களை நீக்குவதால் உடலின் ஜீரணசக்தி மேம்படுகிறது. வயிறு உப்புசம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகளை உருவாக்கும். அஜீரணம் களையப்படுகிறது. தவிர அஜீரணம் களைப்பு, பசியின்மை, வாயில் துர்நாற்றம், பிரட்டல் இவற்றையும் உண்டாக்கும். ஆயுர்வேதம் கெடுதலை உண்டாக்கும் வேதிப்பொருட்களை உணவிலிருந்து தவிர்க்கவும். உடலை சுத்திகரிக்கும் உணவுகளையும் பரிந்துரைக்கிறது. நச்சுப்பொருட்கள் நீங்கினால் உடல், லேசாகி, வலிமை நிறைந்து, நல்ல ஜீரண சக்தியால் சுறுசுறுப்புடன் செயலாற்றும்.
ஆயுர்வேதத்தின் அடிப்படை தத்துவம் மூன்று தோஷங்கள் – வாதம், பித்தம், கபம். அந்தந்த தோஷங்களுக்கு ஏற்றவாறு, நச்சுப்பொருட்களை நீக்கும் சூப் வகைகளை கீழே தரப்பட்டுள்ளன.
வாததோஷத்திற்கேற்ற சூப்
தேவை
பாஸ்மதி அரிசி – 1/4 கப்
சுத்தமான தண்ணீர் – 6 (அ) 8 கப்
நறுக்கிய கீரை – 1/2 கப்
துருவிய கேரட் – 1/4 கப்
நறுக்கிய பீட்ரூட் – 1/4 கப்
துருவிய வெள்ளை முள்ளங்கி – 1 டே.ஸ்பூன்
கருமிளகு பொடி – 1/8 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/8 டீஸ்பூன்
தனியாப்பொடி – 1/8 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி தழை – 1 டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்
இந்துப்பு (அ) உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
அரிசியை கழுவி நீரை வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரிலிட்டு கொதிக்க வைக்கவும். அரிசி, காய்கறிகள், இஞ்சி, சீரகம், தனியா இவற்றை கொதிக்கும் நீருடன் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். பாத்திரத்தை மூடி சிறு தீயில் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் சமைக்கவும்.
உப்பையும், மிளகையும் சேர்க்கவும். ஒரு கரண்டியால் வெந்த காய்கறிகளை பாத்திரத்தின் பக்கவாட்டில் நன்றாக நசுக்கவும்.
வடிகட்டி கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.
கபதோஷத்திற்கேற்ற நச்சு அகற்றும் சூப்
தேவை
சுத்தமான தண்ணீர் – 4 – 6 கப்
துருவிய கேரட் – 1/4 கப்
நறுக்கிய கொத்தமல்லி தழை – 1/4 கப்
நறுக்கிய பச்சைக்கீரை – 1/2 கப்
கருமிளகு – 6 – 8
இஞ்சி – 1 – 2 சிறு மெல்லிய துண்டுகள்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மேற்சொன்ன அனைத்தையும் போட்டுக் கலக்கவும். கலவையை கொதிக்க வைக்கவும். இளந்தீயில் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் கொதிக்க விடவும். நன்கு வெந்த பின் காய்கறிகளை கரண்டியால் நசுக்கவும். வடிகட்டி உபயோகிக்கவும்.
பித்ததோஷத்திற்கேற்ற நச்சு அகற்றும் சூப்
தேவை
பாஸ்மதி அரிசி – 1/4 கப்
சுத்தமான தண்ணீர் – 6 – 8 கப்
நறுக்கிய கீரை – 1/2 கப்
துருவிய கேரட் – 1/4 கப்
பெருஞ்சீரகக் கிழங்கு நறுக்கியது – 1/4 கப்
பெருஞ்சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/8 டீஸ்பூன்
தனியாப்பொடி – 1/8 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி தழை – 1 டீஸ்பூன்
இந்துப்பு (அ) உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
அரிசியை கழுவி நீரை வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரிலிட்டு கொதிக்க வைக்கவும். அரிசி, காய்கறி, பெருஞ்சீரகம், சீரகம், தனியா இவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இளந்தீயில் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் கொதிக்க விடவும். ஒரு கரண்டியால் வெந்த காய்கறிகளை பாத்திரத்தின் பக்கவாட்டில் நன்றாக நசுக்கவும். வடிகட்டி கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.
இதர நச்சு அகற்றும் பொருட்கள்நச்சு அகற்றும் வாசனை திரவியங்கள் (மசாலா மிக்ஸ்) சில வாசனை திரவியங்கள் உடலிலிருந்து நச்சு அகற்றுவதற்கு மிகவும் உதவுகின்றன. இந்த மசாலாப் பொடிகளை காய்கறிகளிலும், சூப்புகளிலும் பயன்படுத்தலாம். இவற்றை ஒரு முறை செய்து கொண்டும் தினசரி உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முன் (பருப்பு, காய்கறிகளில்) நெய்யில் வறுக்கவும். ஒரு பாகம் மஞ்சள் பொடி, இரண்டு பாகம் சீரகப் பொடி, மூன்று பாகம் தனியாப்பொடி, நான்கு பாகம் பெருஞ்சீரகப்பொடி. இவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.
நச்சு அகற்றும் டீ
இவற்றை காலையில் எடுத்துக் கொள்வது நல்லது. அரை லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் கால் டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் தனியா, அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து பத்து நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.
வடிகட்டி ஒரு தெர்மோ பிளாஸ்கில் ஊற்றி நாள் முழுவதும் பயன்படுத்தலாம். நச்சு அகற்றும் பாகற்காய்.
பாகற்காய் உடலிலிருக்கும் நச்சுப்பொருட்களை நீக்குவதற்கு சிறந்த காய்கறி. பாகற்காய் சாறு, கற்றாழை சாறு, எலுமிச்சை சாறு, தேன் – இவை ஒவ்வொன்றிலும் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நன்றாகக் கலந்து குடிக்கவும்.
உணவு நலம் நவம்பர் 2010
உடல், நச்சுக்கள், நீங்கிட, சுற்றுப்புற சூழ்நிலை, தூசி, மாசுகள், நச்சுப்பொருட்கள், ஆயுர்வேதம், சிகிச்சை, பஞ்சகர்மா, ஜீரணசக்தி, வயிறு உப்புசம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, கோளாறுகள், அஜீரணம், களைப்பு, பசியின்மை, வாயில் துர்நாற்றம், பிரட்டல், உடல், லேசாகி, வலிமை நிறைந்து, ஆயுர்வேதா வாதம், பித்தம், கபம், வாததோஷத்திற்கேற்ற, சூப், செய்முறை, பாஸ்மதி அரிசி, நறுக்கிய கீரை, துருவிய கேரட், பீட்ரூட், வெள்ளை முள்ளங்கி, கருமிளகு பொடி, சீரகப் பொடி, தனியாப்பொடி, கொத்தமல்லி தழை, இஞ்சி, இந்துப்பு,
கபதோஷத்திற்கேற்ற, நச்சு, அகற்றும், சூப், செய்முறை, தண்ணீர், துருவிய கேரட்,
நறுக்கிய கொத்தமல்லி தழை, பச்சைக்கீரை, கருமிளகு, இஞ்சி, சீரகம், மஞ்சள்,
பித்ததோஷத்திற்கேற்ற, நச்சு, அகற்றும், சூப், செய்முறை, அரிசி, காய்கறி, பெருஞ்சீரகம், சீரகம், தனியா, நச்சு, அகற்றும், பொருட்கள், வாசனை திரவியங்கள், மசாலா மிக்ஸ், மசாலாப் பொடி, காய்கறி, சூப், பருப்பு, மஞ்சள் பொடி, சீரகப் பொடி, தனியாப்பொடி, பெருஞ்சீரகப் பொடி, நச்சு, அகற்றும், டீ,
சீரகம், தனியா, பெருஞ்சீரகம், தெர்மோ பிளாஸ்க், நச்சு, அகற்றும், பாகற்காய்,
பாகற்காய் சாறு, கற்றாழை சாறு, எலுமிச்சை சாறு, தேன்,