பரங்கிக்காய் போண்டா

Spread the love

தேவையான பொருட்கள்

பரங்கிக்காய்                                         – 1 கப் துருவியது

கடலைமாவு                                                   – 2 கப்

வெங்காயம்                                                       – 1

பச்சை மிளகாய்                           – 1

கொத்தமல்லி                                                – சிறிது

கறிவேப்பிலை                             – சிறிது

உப்பு                                                                           – தேவையான அளவு

தயிர்                                                                           – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய்                                                 – பொரிக்க

செய்முறை

                        பரங்கிக்காயை தோலை சீவி, நடுவில் உள்ளதை எடுத்து விட்டு துருவி 1 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவுடன் பரங்கிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, தயிர் தண்ணீர் சேர்த்து சிறிது தளர்த்தியாகப் பிசைந்து, ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் போண்டாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸ§டன் பரிமாறவும்.

8.                       வாழைப் பூ வடை

தேவையான பொருட்கள்

வாழைப் பூ                                                         – 1

துவரம் பருப்பு                              – 2 கப்

பெரிய வெங்காயம்                     – 1

மிளகாய் வற்றல்                          – 4

சோம்பு                                                       – 1 டீஸ்பூன்

பூண்டு                                                            – 2 பல்

உப்பு                                                                           – தேவையான அளவு

எண்ணெய்                                                 – பொரிக்க

செய்முறை

                        வாழைப் பூவை உரித்து நடுவில், உள்ள நரம்பை நீக்கவும். துவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு, துவரம் பருப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடைசியாக வாழைப் பூவையும் சேர்த்து ஒரு அடி அடிக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி இந்த மாவுடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பின்னர் இதனை வடைகளாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். (வாழைப்பூவை பொடிப் பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்). சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.

9. பீட்ரூட் வடை

தேவையான பொருட்கள்

பீட்ரூட்                                                               – 1

துவரம் பருப்பு                              – 1/4 கப்

கடலைப் பருப்பு                           – 1/2 கப்

மிளகாய் வற்றல்                          – 5

சோம்பு                                                       – 1 டீஸ்பூன்

சீரகம்                                                                         – 1/2 டீஸ்பூன்

இஞ்சி                                                                         – 1 இன்ச்

பூண்டு                                                            – 4 பல்

உப்பு                                                                           – தேவையான அளவு

வெங்காயம்                                                       – 1

கொத்தமல்லி                                                – சிறிது

எண்ணெய்                                                 – பொரிக்க

செய்முறை

                        பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பு, கடலைப் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து, மிளகாய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் பீட்ரூட், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து வடைகளாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். (மீடியம் தீயில் வைத்து பொரித்தெடுக்கவும்). சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.

10. புடலங்காய் வடை

தேவையான பொருட்கள்

புடலங்காய்                                                                           – 1/4 கிலோ

வெங்காயம்                                                                           – 1

கறிவேப்பிலை, கொத்தமல்லி  – சிறிது

துவரம் பருப்பு                                                           – 2 கப்

மிளகாய் வற்றல்                                                       – 5

சோம்பு                                                                                   – 1 டீஸ்பூன்

சீரகம்                                                                                                 – 1 டீஸ்பூன்

உப்பு                                                                                                   – தேவையான அளவு

மஞ்சள் பொடி                                                           – 1 டீஸ்பூன்

எண்ணெய்                                                                            – பொரிக்க

செய்முறை

                        புடலங்காய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புடலங்காயுடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும். துவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து மிளகாய், சோம்பு, சீரகம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன் புடலங்காயை பிழிந்து சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும். சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.

புடலங்காய் பஜ்ஜி

தேவையான பொருட்கள்

புடலங்காய்                                                        – 1

மஞ்சள் பொடி                              – 1/2 டீஸ்பூன்

மிளகாய் பொடி                           – 1/2 டீஸ்பூன்

உப்பு                                                                           – தேவையான அளவு

எண்ணெய்                                                 – பொரிக்க

மாவிற்கு

கடலை மாவு                                             – 200 கிராம்

அரிசி மாவு                                                –  50 கிராம்

மிளகாய் பொடி                           – 1/4 டீஸ்பூன்

பெருங்காயம்                                           – 1/4 டீஸ்பூன்

உப்பு                                                                           – தேவையான அளவு

சமையல் சோடா                          – 2 சிட்டிகை

தண்ணீர்                                                    – 1/2 டம்ளர்

செய்முறை

புடலங்காயை கனமான வட்டமாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து பிசறி ஊற வைக்கவும். கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் பொடி, பெருங்காயம், உப்பு, சமையல் சோடா, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். புடலங்காயைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். புடலங்காயை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். தீயை மீடியமாக வைத்துக் கொள்ளவும்.

1.                       கொள்ளு சுண்டல்

தேவையான பொருட்கள்

கொள்ளு                                                         – 1 கப்

தேங்காய்த்துருவல்                      – 1/4 கப்

மிளகாய்                                                            – 2

தனியா                                                       – 1 டீஸ்பூன்

பெருங்காயம்                                            – 1 சிட்டிகை

உப்பு                                                                           – தேவையான அளவு

எண்ணெய்                                                 – 1 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு                                                                          – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு                         – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை                             – சிறிது

மிளகாய் வற்றல்                          – 2

வெங்காயம்                                                       – 1

செய்முறை

                        கொள்ளை 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், தனியா, பெருங்காயம் மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். ஊறிய கொள்ளுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் போட்டு பதினைந்து நிமிடம் வேக விடவும். வெந்தவுடன் கொள்ளை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். (இந்த நீரை ரசம் செய்ய உபயோகப்படுத்தலாம்) ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளித்து, கொள்ளைக் கொட்டி ஒரு கிளறு கிளறி அரைத்து வைத்துள்ள பொடி, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி மேலே தூவி பரிமாறவும்.

கொள்ளு ரசம்

தேவையான பொருட்கள்

கொள்ளு                                                                                – 2 டேபிள் ஸ்பூன்

புளி                                                                                                     – சிறிய எலுமிச்சம் பழ அளவு

மிளகுத்தூள்                                                                           – 1 டீஸ்பூன்

சீரகத்தூள்                                                                              – 1 டீஸ்பூன்

தக்காளி                                                                                 – 1

பூண்டு                                                                                    – 2 பல்

மிளகாய் வற்றல்                                                       – 2

கடுகு                                                                                                  – 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு                                                       – 1/4 டீஸ்பூன்

பெருங்காயம்                                                                         – 1/4 டீஸ்பூன்

உப்பு                                                                                                   – தேவையான அளவு

எண்ணெய்                                                                            – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி  – சிறிது

செய்முறை

                        கொள்ளை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். வேக வைத்து கொள்ளை மசித்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் போட்டு தாளித்து, பின் தட்டிய பூண்டைப் போட்டு வதக்கி, பின் தக்காளி போட்டு வதக்கவும். பின்னர் வேக வைத்து மசித்த கொள்ளு, புளித்தண்ணீர், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு கொதிக்க விட வேண்டும். கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.


Spread the love