சத்தான சமையல் முறைகள்

Spread the love

தானிய அடை

தேவையான பொருட்கள்

கோதுமை                    – 1 கப்

கேழ்வரகு                    – 1 கப்

கம்பு                            – 1 கப்

சோளம்                       –            1 கப்

மிளகாய் வற்றல்         –           4

பூண்டு             –            4 பல்

சீரகம்                          – 1 டீஸ்பூன்

சோம்பு                        –            1 டீஸ்பூன்

உப்பு                           – தேவையான அளவு

கேரட்                          – 1

வெங்காயம்                 – 2

கொத்தமல்லி              – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை            –            சிறிது

எண்ணெய்                  – தேவையான அளவு

செய்முறை

கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம் முதலியவற்றை 4 மணி நேரம் ஊற வைத்து, மிளகாய், பூண்டு, சீரகம், சோம்பு, உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். கேரட், வெங்காயம் முதலியவற்றின் தோலை எடுத்து விட்டு பொடிப் பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள மாவுடன் கேரட், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சுட்டு எடுக்கவும்.

சத்து மாவு மிக்ஸ்

தேவையான பொருட்கள்

கம்பு                            – 150 கிராம்

கேழ்வரகு                    – 150 கிராம்

நாட்டுச் சோளம்          –            100 கிராம்

மஞ்சள் சோளம்          –            150 கிராம்

சிவப்பு அரிசி              – 50 கிராம்

பார்லி                          – 50 கிராம்

ஜவ்வரிசி                     – 50 கிராம்

வேர்க்கடலை              – 50 கிராம்

பாசிப்பயறு                 – 50 கிராம்

சோயா பீன்ஸ்            –            50 கிராம்

சம்பா கோதுமை         –            50 கிராம்

கொள்ளு                     – 50 கிராம்

பொட்டுக்கடலை        –            50 கிராம்

பாதாம்                                    – 10

முந்திரி                        –            10

ஏலக்காய்                    – 10

செய்முறை

எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது 2 டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி, பால், சீனி சேர்த்து அருந்தலாம்.

ராகி பக்கோடா

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு           –            1 கப்

வெங்காயம்                 – 1

பச்சை மிளகாய்          –            1

இஞ்சி                          – சிறிது

கொத்தமல்லி              – 1/4 கப்

உப்பு                           – தேவையான அளவு

கறிவேப்பிலை            –            சிறிது

செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேழ்வரகு மாவுடன் நறுக்கிய அனைத்தையும் சேர்த்து, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசறி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தண்ணீர் மிகுதியாகிவிட்டால் பக்கோடா கரகரப்பாக இருக்காது. அதனால் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும்.

கம்பு பொங்கல்

தேவையான பொருட்கள்

கம்பு                            100 கிராம்

வெல்லம்                     50 கிராம்

பாதாம்                                    2 டீஸ்பூன்

முந்திரி                                    -2 டீஸ்பூன்

நெய்                            1 டீஸ்பூன்

கன்டன்ஸ்டு மில்க்      1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்                    சிறிது

செய்முறை

கம்பை ஊற வைத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அடித்துக் கொண்டு அதை குக்கரில் போட்டு வேக வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டி அதை வெந்த கம்புடன் சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் கன்டன்ஸ்டு மில்க், ஏலக்காய் சேர்க்கவும். நெய்யில் பாதாம், முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்து பரிமாறவும்.

திருமதி. அன்னம் செந்தில் குமார்

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love