பூரிப்பு தரும் பூசணி

Spread the love

மார்கழி என்று சொன்ன உடனே நம் நினைவுக்கு வருவது  மஞ்சள் பூசணி தான். ஏனென்றால், மார்கழி மாதத்தில் காலையில் எழுந்தவுடன்  வாசலில் கோலம் போட்டு அதன் மீது  மஞ்சள் பூசணி பூவை வைக்கிறோம்.

மஞ்சள் பூசணியின் மற்றொரு பெயர் பரங்கிக்காய் என்பது ஆகும். இது நம் வீட்டில் கூட வளரக்கூடிய ஒரு கொடி தான். எளிதில் வளர கூடியது தான் இந்த மஞ்சள் பூசணி. இது மத்திய அமெரிக்காவை தாயகமாக கொண்டது.

தாவர பெயர் : cucurbita maxima

பயன்கள்

மஞ்சள் பூசணி அதற்கு மட்டும் பயன்படுவதில்லை அதை தாண்டி பலவற்றிற்கு பயன்படுகிறது.  அவை என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க…

· பூசணிக்காயை சமைத்து சாப்பிடுவதன் மூலம், நரம்பு சார்ந்த நோய்களின் தீவிரம் குறையும்.

· சிறுநீரக பிரச்னையை குறைக்க பூசணிக்காய்  உதவுகிறது.

· உடலில் வலி உள்ளவர்கள் பூசணிக்காயை சாப்பிட்டு வர உடல் வலி குறையும்.

· பூசணி விதையை நன்கு காய வைத்து, அதனை அரைத்து பாலில் கலந்து குடித்து  வர உடல் வலிமை பெறும்.

மருந்தும் மஞ்சள் பூசணியும்

· மஞ்சள் பூசணி  குளிர்ச்சி தன்மையை கொண்டது. உடல் சூடு உள்ளவர்கள் இதை வாரத்திற்கு ஒரு முறை  சாப்பிட்டு வந்தால், உடல் எப்போதும்  குளிர்ச்சியாக இருக்கும்.

·           பித்தம் உள்ளவர்கள் பூசணியை வாரத்திற்கு ஒரு முறை  சாப்பிட்டு வரலாம்.

· உங்கள் குழந்தை சரியாக உணவு உண்ணுவதில்லையா? இனி கவலை பட வேண்டாம். உங்கள் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை பூசணிக்காயை சமைத்து கொடுங்கள். பின்பு, அவர்களே உணவை கேட்டு உண்ணுவார்கள்.

· பூசணிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

· பூசணிக்காயை சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை  நன்கு தெரியும்.

பூசணிக்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்

பூசணிக்காய்          –            ½ கிலோ

தேன்                 –            2 தேக்கரண்டி

தண்ணீர்              –            3௦௦ மில்லி

செய்முறை

பூசணியின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் தண்ணீர் ஊற்றி அரைத்து தேன் கலந்து அருந்தலாம்.

அல்சர் பிரச்சனையால் அவதிபடுபவருக்கு இந்த பூசணி ஜுஸ் அருமையான மருந்தாக உதவுகிறது.  அதுமட்டுமல்லாமல் அதிக காரமான உணவு , நீண்ட நேரம்  உண்ணாமல் இருப்பதால்  ஏற்படும் அசிடிட்டி போன்றவைகளை போக்க இது உதவுகிறது.

இதயம் பலவீனமாக உள்ளவர்கள் பூசணிக்காயை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வருவதன் மூலம்  இதயம் பலமாகும்.

பூசணிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்

பூசணிகாய்           –        ½ கிலோ

வெங்காயம்          –          1

தக்காளி              –          2

பச்சை மிளகாய்       –          4

கடுகு                –          ¼  டீஸ்பூன்

மிளகாய் தூள்        –          ½ டீஸ்பூன்

தேங்காய்            –          ¼ மூடி

உப்பு                       தேவையான அளவு

எண்ணெய்           –           தேவையான அளவு

செய்முறை  

வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை  ஊற்றி காய்ந்த உடன் கடுகு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின் அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் வெட்டி வைத்துள்ள பூசணி காயை போட்டு சிறிது நேரம் கழித்து மிளகாய் தூள், உப்பு  மற்றும் சிறிது தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து, 5 நிமிடம் தட்டை வைத்து மூடி வேக விடவும்.

காய் வெந்து தண்ணீர் வற்றியவுடன் அதனை இறக்கி விடவும். பின் அதன் மேல் துருவி வைத்துள்ள தேங்காயை தூவி கிளறி விட வேண்டும்.

இப்போது ருசியான பூசணிக்காய் பொரியல் தயார்.


Spread the love