அரிசி, கோதுமை, சிறு தானியங்களான கம்பு, கேப்பை (கேழ்வரகு), சோளம், தினை, துவரை, பாசி பயறு, தட்டை பயறு, உளுந்து, கொள்ளு, மொச்சை போன்ற அனைத்தையுமே தோல் நீக்காமல், பதப்படுத்தாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இவற்றின் தோல் பகுதியில் உள்ள மாவுப்பகுதியைச் செரித்து உடலில் எளிதாக கிரகிக்கச் செய்வதற்குரிய சத்துக்கள் அடங்கியுள்ளன. தோலை நீக்கி உண்பதால், ஜீரணத்திற்கு வேண்டிய சத்துக்கள் உடலின் சேமிப்பில் இருந்து திருடப்பட்டு சர்க்கரை வியாதி போன்றவை எளிதாக ஏற்படுகின்றன. உணவில் சரிபாதி எப்பொழுதும் கீரை, காய்கறிகள் இருக்கும் படி பார்த்துக் கொள்வது அவசியம்.
சமையல் எண்ணெய்கள்
மனிதனுக்குத் தேவையான கொழுப்புச் சத்து எண்ணெய் வித்துக்களில் தேவைக்கு கூடுதலாகவே இருக்கின்றன. தேங்காய், எள், நிலக்கடலை, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, சூரியகாந்தி விதை, பூசணி விதை போன்றவைகளிலிருந்து நமக்கு எண்ணெய் கிடைக்கின்றன. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட எண்ணெய் வகைப் பயிர்களின் விதைகளை மரச் செக்கில் ஆட்டி, நாமே தயாரித்துக் கொள்வது நல்லது.
ஒரு முழுத் தேங்காயை அப்படியே சாப்பிடுவது மூலம் செரிமான ஆவதற்கும், தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை செரிமானம் ஆவதற்கும் ஒரே அளவு தோல் இல்லை. மாறுபடும் தேங்காயில் அடர்த்தி குறைந்தும், எண்ணெயில் பல மடங்கு அடர்த்தி அதிகமாகவும் காணப்படுவதால், செரிமான இயக்கத்தை பாதிக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை அறவே ஒதுக்கி விட வேண்டும். ஏனெனில் சுத்திகரிக்கப்படும் பொழுதும், பதப்படுத்தப்படும் பொழுதும், எண்ணெய்களில் உள்ள இன்றியமையாத கொழுப்பு அமிலங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. இந்த அமிலங்கள் இல்லாத எண்ணெய்களை உபயோகிப்பதனால், உடலில் செரிமானம் ஆவது சிரமம் என்பதுடன், இருதயம் சார்ந்த பலவித உடல் சிக்கல்களும் ஏற்படுகின்றன.
கிழங்குகள், சர்க்கரை, உப்பு தவிர்க்கவும்
மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மிகவும் தவிர்க்கப்பட வேண்டிய கிழங்குகள் ஆகும். நீருள்ள கிழங்குகள் எனப்படும் சேனைக் கிழங்கு, சேம்பு, கருணை கிழங்கு பச்சையாக, சட்னியாக, பச்சடிகளாக சாப்பிட தீங்கில்லை. உடல் உழைப்பு அதிகம் ஈடுபடுபவர்கள், சிறு வயதினருக்கு கிழங்குகள் உணவாக உட்கொள்ளலாம். எனினும், மலச்சிக்கலை உருவாக்கும் என்பதால் குறைந்த அளவே உட்கொள்வது நல்லது.
சுவைக்காக உப்பைச் சேர்ப்பதால், பலவித ஆரோக்கியக் கேடுகள் உடலில் ஏற்படுகின்றன. இரத்தம் கெட்டியாகி விடும். உஷ்ணம் அதிகரிக்கும். தோல் காய்ந்து போகும். பரபரப்பு, டென்ஷன், கோபம் அதிகரிக்கும். இதன் மூலம் இரத்த அழுத்த வியாதியும் தோன்றக் காரணமாகிறது. உடலில் உப்பு அதிகமாக இருப்பவர்கள், எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொள்வதால், அதிகமான காரத்தன்மை காரணமாக கெட்டியாகி விட்ட இரத்தத்தை இளகச் செய்து, இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. கொடி வகைக் காய்கள், கீரைகள், இளநீர், அருகம்புல் சாறு, வில்வம், துளசி இலை போன்றவற்றில் உப்புச் சத்துகள் அதிகம் கிடைக்கின்றன.