அனுபவம் பேசுகிறது

Spread the love

எனது வயது 30. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக தூக்கமே சரியாக வருவதில்லை. தூக்க மருந்துகள் எடுத்துக் கொண்டதால் தான் தூக்கம் வருகிறது. ஆயுர்வேதத்தில் இதற்கான சிகிச்சை உண்டா?

பதில் – தூக்கமின்மைக்கு காரணங்கள் பல. முக்கிய காரணங்கள் Stress எனப்படும் மன அமுக்கம் / அழுத்தம் மற்றும் கவலைகள். இவற்றை போக்க நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். யோகா, தியானம் இவற்றில் ஈடுபடுவது அவசியம்.

ஆயுர்வேதத்தின் படி வாத, பித்த தோஷங்களின் பாதிப்பினால் தூக்கமின்மை ஏற்படும். நீங்கள் ஆயுர்வேத டாக்டரை அணுகுவது உசிதம்.

கீழே கொடுத்துள்ளவற்றை முயற்சி செய்யவும்.

  1. படுக்கப் போகும் முன் இதமான வெந்நீரில் குளிக்கவும்.
  • பால் குடிப்பது நல்லது. பாலுடன் ஒரு சிட்டிகை அரைத்த ஜாதிக்காய் விழுதை சேர்த்துக் கொள்ளவும். ஜாதிக்காய் சிட்டிகை அளவுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது. பாதாம் பருப்பு, ஏலக்காய் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். பூண்டைப் போட்டு (ஒரு பல் பூண்டு) காய்ச்சிய பாலையும் குடிக்கலாம்.
  • படுக்கப் போகும் முன் சிறிதளவு எண்ணெய்யை உச்சந் தலை மற்றும் பாதங்களில் தடவி, தேய்த்துக் கொள்ளவும். நல்லெண்ணை, பிரம்மி எண்ணை ஜடமான்சி எண்ணை போன்றவற்றை, இதற்காக உபயோகிக்கலாம். க்ஷீரபாலா தைலம் சிறந்தது.
  • ஆயுர்வேதத்தில் பிரம்மி சங்குபுஷ்பி, வசம்பு, நெல்லிமுள்ளி முதலிய மருந்துகளும், நித்ரோதய ரச, போன்ற மருந்துகளும் உள்ளன. ஆயுர்வேத மருத்துவரை அணுகவும். திருமணமானால் உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும் என்று நம்புகிறேன்?

கால் எரிச்சல் போயே போச்சு!

தனலெட்சுமி வயது 72, பெங்களூர்: நான் கடந்த 12 ஆண்டுகளாக நீரிழிவு (சர்க்கரை வியாதியால்) பாதிக்கப்பட்டு ஆங்கில (அலோபதி) மருந்துகள் சாப்பிட்டு சர்க்கரை அளவை கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளேன். எனக்கு வேறு எந்த பிரச்சனையும் கிடையாது ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இரவு நேரங்களில் என் இரண்டு பாதங்களும் எரிச்சல் எடுக்கின்றன. ஏதோதோ மருத்துவம் செய்து பார்த்து எந்த பயனும் இல்லை. இந்த கால் எரிச்சலினால் எனக்கு இரவு நேரங்களில் தூக்கம் வருவதே இல்லை. இதனால் என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்த சமயம் என் நண்பர் ஒருவர் மூலம் ஆயுர்வேதம்.காம் ஆசிரியர் Dr. S. செந்தில் குமார் அவர்கள் எழுதிய நீரிழிவு தெரிந்ததும் தெரியாததும் என்ற புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனடியாக M.O. மூலம் பணம் அனுப்பி அந்த புத்தகத்தை வாங்கிப் படித்தேன். அதில் மிக மிகத் தெளிவாக ஏன் கால் எரிச்சல் ஏற்படுகிறது அதற்கும் நீரிழிவிற்கும் என்ன சம்மந்தம் என்பதனைத் தெளிவாக டாக்டர் விளக்கியுள்ளார்.

பல தரப்பட்ட குழப்பமான மனநிலையில் – மருந்து எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா? பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து எடுக்கும் பொழுது வேறு எதுவும் சிக்கல்கள் ஏற்படுமா? சர்க்கரை அளவு மிகவும் குறைந்து விடுமோ? பிற சிக்கல்கள் உண்டாகுமா? பக்க விளைவுகள் ஏற்படுமா? என பல தரப்பட்ட குழப்பமான மனநிலையில் டாக்டரை போன் மூலம் தொடர்பு கொண்டேன். டாக்டர் மிகவும் அன்பாக பிரச்சனையைத் தெளிவாக விளக்கினார்.

பின்னர் டாக்டரின் மேல் நம்பிக்கை ஏற்பட்டது. அதன் படி ஒரு மாத மருந்திற்கு ரூ. 800- அனுப்பி வைத்தேன். டாக்டர் 3 மாதங்கள் மருந்து சாப்பிட்டால் சரியாகி விடும் என்று கூறினார். அதன்படி ஒரு மாத மருந்திற்கு ரூ. 800 அனுப்பி வைத்தேன். டாக்டர் கூறிய படி 3 மாதங்களில் அல்ல சுமார் 40 நாட்களிலேயே எனது கால் எரிச்சல் போயே போச்சு இருந்தாலும் நான் தற்பொழுது வருடத்திற்கு ஓரு முறை மூன்று மாதங்கள் டாக்டர் மூலம் மாதத்திற்கு ரூ. 800 பணம் செலுத்தி மருந்து வாங்கி கடந்த 2 மாதங்களாக சாப்பிட்டு வருகிறேன். இப்பொழுது எந்த எரிச்சலும் இல்லை. எனது ஆங்கில அலோபதி, மருந்துகளை எப்பொழுதும் போல சாப்பிட்டுக் கொண்டே வருகிறேன். இப்பொழுதெல்லாம் என்னால் எனது வேலைகளை நானே சிரமமின்றி பார்த்துக் கொள்ள முடிகிறது.

நான் என் கால் எரிச்சலிலிருந்து விடுபட்ட மாதிரி நீங்களும் உங்கள் கால் எரிச்சலிலிருந்து விடுபட SK ஆயுர்வேதா, 31 தேவநாதன் தெரு மந்தைவெளி, சென்னை – 28. தொலைபேசி – 2461 6403. தபால் மூலம் பெற M.O.  அனுப்பலாம்.

உண்மைச் சம்பவம். பெயர் மாற்றப்பட்டுள்ளது. வெள்ளைத் தழும்புகள் மாயமாய் மறைந்தது!

ரமேஷ், வயது 27, திருமுல்லைவாயல், சென்னை: நான் கடந்த ஆறு ஆண்டுகளாக வெள்ளைத் தழும்புகளால் – லுயுகோடர்மாவால் மிகவும் அவதிப்பட்டு வந்தேன். எனது உதடு கை இருக்கு ஆண்குறி, கால்கள் என அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு வெள்ளைத் தழும்புகள் கடந்த ஆறு ஆண்டுகளாக இருந்தது. இது எனக்கு மிகவும் கேவலமாகவும், தன்னம்பிக்கை இல்லாமலும் தாழ்வு மனப்பான்மையாக இருந்தது. இதற்கு தமிழில் வெண்குஷ்டம் என்றும், ஆங்கிலத்தில் லுயுகோடர்மா எனவும் கூறுகிறார்கள். நான் பல பல டாக்டர்களிடம் காண்பித்து ஆங்கில மருத்துவமும், சித்த மருத்துவமும், ஹோமியோபதி மருத்துவமும் செய்து பார்த்தேன். ஆனால் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. பணம் விரயமானதும், காலம் தாமதமானதும், மனம் வேதனையடைந்ததுமே மிச்சம்.

இவ்வாறு இருக்கையில் என் அண்ணன் திருமணம் முடிந்ததும் அதனைத் தொடர்ந்து என் திருமணம் பேச்சு என் வீட்டில் ஆரம்பமானது. அவ்வளவு தான் வேதனையுடன் இருந்த என் மனம் மேலும் சுக்கு நூறாக உடைந்தது. அதனால் எனக்கு இரத்தக் கொதிப்பு ஆரம்பமானது. நெஞ்சு படபடப்பு அதிகமானது அதற்கும் ஆங்கில மருத்துவம் ஆரம்பமானது. இரவு நேரங்களில் தூக்கம் வராமல் வேதனைப்பட்டேன்.

இந்த சமயத்தில் தான் ஆயுர்வேதம் டாக்டர் S. செந்தில் குமார் அவர்களைப்பற்றி அவரது ஆயுர்வேதம்.காம் மாத இதழ் மூலமாகத் தெரிந்து கொண்டு சென்னை – 28. மந்தைவெளி தேவநாதன் தெருவில் கதவு எண் 28 ல் அமைந்துள்ள SK ஆயுர்வேதாவிற்கு நேரில் வந்தேன். டாக்டர் அவர்கள் அன்பாக வரவேற்று எனது பிரச்சனைகளுக்கு காது கொடுத்தார். இதமாகப் பேசி இந்த வெள்ளைத் தழும்புகள் ஏன், எதனால் எப்பொழுது எங்கே ஆரம்பித்து எப்படிப் பெரிதாகிறது என்பதனை தெளிவாக விளக்கினார். அவர் சொல்லியதில் எனக்கு ஆரம்பத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை அவர் மேல் பூச்சு மருந்துகளும் உள்ளுக்கும் மருந்துகள் தருவதாகக் கூறினார். அலோபதி மருந்துகளுடனும் சேர்த்து உபயோகிக்கலாம் என்றார். நான் மறுத்து விட்டு வேண்டாம் என்று திரும்பிச் சென்று விட்டேன்.

திரும்ப வீட்டிற்குச் சென்று நன்கு யோசித்தேன். சரி இத்தனை ஆண்டுகள் பிற மருத்துவம் செய்து எந்த ஒரு முன்னேற்றமும் தான் இல்லையே டாக்டர் சொல்வதைத் தான் செய்து பார்ப்போமே என மீண்டும் ஒரு மாதம் கழித்து ஷிரி ஆயுர்வேதா டாக்டரை வந்து சந்தித்து பிரச்சனையை மீண்டும் எடுத்துச் சொல்லி மருந்துகள் வாங்கிச் சென்று 2 மாதங்கள் உபயோகித்தேன். தற்பொழுது வெள்ளைத் தழும்புகள் லேசாக மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்துள்ளன. சிறிய தழும்புகள் முழுவதுமாக மாறிவிட்டன. பெரிய தழும்புகள் அளவில் குறைய ஆரம்பித்து விட்டன.

வாழ்க்கையே வெறுத்து மன வேதனையுடன் இருந்த எனக்கு தற்பொழுது வாழ்க்கையில் நம்பிக்கையும் ஒரு பிடிப்பும் ஏற்பட்டுள்ளது. 2 மாதங்களிலேயே நல்ல முன்னேற்றம் தெரிந்தாலும் டாக்டர் சுமார் 2 வருடங்கள் சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி 2 வருடங்கள் என்ன 3 வருடங்கள் கூட மருந்துகள் சாப்பிடத் தயாராக உள்ளேன். நிரந்தரமாக குணமாகி வெள்ளைத் தழும்புகள் மறையும் என நம்புகிறேன். நல்ல முன்னேற்றமும் தெரிகின்றது. வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதித்து விட்டேன் எனக்கும் வருகின்ற ஐப்பசி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எனக்கு வாழ்வளித்த டாக்டர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

சம்பவம்: உண்மை முக்கியத்துவம்.

SK ஆயுர்வேதா, சென்னை, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

வாசகர் கடிதம்

டாக்டர், நான் தங்களது ‘நீரிழிவு தெரிந்ததும் தெரியாததும்’ நூலை வாங்கிப் படித்தேன். மிகவும் அற்புதம்! நான் நீரிழிவு சம்பந்தமாக பல புத்தகங்களைப் படித்துள்ளேன் ஆனால் பல புத்தங்களில் இல்லாத பல விஷயங்கள் உங்களது நூலில் உள்ளது. அது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தாங்கள் இது போன்று மேலும் பல புத்தகங்கள் வெளியிட வேண்டும் என விரும்புகிறேன்.

K. சுப்பிரமணியன்

வேளச்சேரி.

டாக்டர், நான் தங்களது வெளியீடுகளை நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் காண நேர்ந்தது. மிகவும் ஆவலாக இருந்தது. எவ்வாறு நான் இவ்வளவு நாட்கள் உங்கள் வெளியீடுகளை கவனிக்காமல் இருந்தேன் என்றே தெரியவில்லை. உங்கள் ஆயுர்வேதம் . காம் மூலிகை மருத்துவ மாத இதழ் மிகவும் உபயோகமாக உள்ளது. உடனடியாக ஒரு வருட சந்தா கட்டிவிட்டேன்.

வி. செல்வராஜ்

கும்மிடிபூண்டி.

டாக்டர், நான் கடந்த இரண்டாண்டுகளாகத் தங்களது ஆயுர்வேதம் காம் இதழை வாங்கிப் படித்து வருகிறேன். எங்கள் குடும்பத்தில் அனைவருமே விரும்பிப் படிக்கின்றோம். அதிலும் கடந்த டிசம்பர் மாத இதழில் வந்த கட்டுரைகள் அனைத்தும் நல் முத்துக்கள் பாராட்டுக்கள்.

கி. நல்லசிவம்

திருச்சி – 8.

டாக்டர், தங்களது தயாரிப்புகளையும் மருத்துவமும் இங்கு பெங்களூரில் பெற எவ்வாறு பணம் அனுப்ப வேண்டும். M.o. ஆக அனுப்பலாமா? எப்படி அனுப்ப வேண்டும். இங்கு பெங்களூரிலிருந்து வங்கியில் பணம் கட்டுவது எப்படி? விளக்குக.

S. ஷஃபிஅஹ்மத்

பெங்களூர் – 86.

எங்களுக்கு பணம் அனுப்புவது மிகவும் சுலபம். வங்கியில்லாத சிறிய ஊர்களிலும் கிராமங்களிலும் வசிப்பவர்கள் M.o. மூலமாக S. K. ஆயுர்வேதா என்ற பெயருக்கு பணமாக அனுப்பலாம். பெரிய நகரங்களிலும் டவுன்களிலும் வசிப்பவர்கள் M.o. அனுப்புவதை விட பாரத ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் எவ்வாறு உங்கள் கணக்கிற்கு பணம் சலான் எழுதி கட்டுவீர்களோ அதே போல எங்கள் கணக்கிற்கு சலான் எழுதி பணமாக உங்கள் ஊர் கிளையிலேயே கட்டலாம். இதற்கு வங்கிச் சார்ஜ் ரூ. 25- கணக்கு எண் 2000 8259 106 – எஸ். செந்தில்குமார் State Bank Of India, R.A. Puram, Chennai – 28. வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இணைய தள வசதி உடையவர்களும் நேரடி ICICI பேங்க் கணக்கில் காசோலையாகவோ அல்லது இணையதள மாற்றலாகவோ பணம் செலுத்தலாம். இக் கணக்கில் பணம் கட்டக் கூடாது காசோலை அல்லது இணையத் தள மாற்றம் மட்டுமே செய்ய வேண்டும்.

ICICI பேங்க் – நந்தனம், சென்னை கணக்கு எண் 602 801505 397. எஸ். செந்தில்குமார். வங்கி மூலமாக பணம் செலுத்திய பின்னர் பணம் செலுத்தியவுடன் 94453 10692 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் சொல்லி பெயர் விலாசம் போன்றவற்றையும் என்ன தேவை என்பதனையும் தெரிவித்தால் உடனடியாக சப்ளை செய்யப்படும். உள்நாடாக இருப்பின் ஓரிரு நாட்களிலும் வெளிநாடாக இருப்பின் 5-15 நாட்களிலும் வந்து சேரும்.

பணம் செலுத்தும் முறை மிக எளிமையானது ஒரு முறை செய்து பார்த்தால் விபரம் புரியும்.

நீங்கள் கேட்டவை

உங்களுடைய கேள்விகளுக்கு ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில்குமார் அவர்கள் பதில் அளிக்கிறார்கள். உங்கள் கேள்விகளை ஷி. ரி. ஆயுர்வேதா 31 தேவநாதன் தெரு மந்தைவெளி, சென்னை – 28 என்ற விலாசத்திற்கோ அல்லது doctor @ chennai ayurveda.com என்ற ஈமெயில் மூலமோ அனுப்பலாம்.

டாக்டர், என் வயது 34, எனது கணவரின் வயது 37, எங்களுக்குத் திருமணமாகி சுமார் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இது நாள் வரை இதுவரை எங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை குடும்பத்தில் இதனால் சில சிக்கல்கள் வர ஆரம்பித்துள்ளது. எங்களது குடும்ப டாக்டரைச் சந்தித்தோம் அவர்கள் ஏதேதோ டெஸ்ட் செய்யச் சொல்லி எழுதிக்கொடுத்துள்ளார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பயமாகவும் உள்ளது. ஆயுர்வேத முறையில் டெஸ்ட் எதுவும் எடுக்காமல் மருத்துவம் செய்ய விரும்புகின்றோம். இது சரியா? தயவு செய்து ஆலோசனை வழங்கவும்.

 லி. லலிதா

குரோம்பேட்டை

பொதுவா, பெண்களுக்கு 28-30 வயதிற்கு மேற்பட்டும் ஆண்களுக்கு 35-40 வயதிற்கு மேற்பட்டும் குழந்தை பெறுகின்ற வாய்ப்பு குறைய ஆரம்பிக்கின்றது. அது இன்னும் வயது ஏற ஏற இன்னும் குறைந்து கொண்டே போகும். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட படியால் நீங்கள் இருவருமே அலோபதி மருத்துவர்கள் கூறுகின்ற அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து கொள்ளலாம். செய்து கொள்ள வேண்டும். உங்கள் கணவர் விந்து அணு பரிசோதனை செய்து விந்தணுக்களின் எண்ணிக்கை, அளவு, நகரும் விகிதம் போன்றவற்றை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி பரிசோதனைகள் அனைத்தையும் – உருவம், வளர்ச்சி மற்றும் செயல்பாடு சம்பந்தமான அனைத்து பரிசோதனைகளும் செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் எவ்வகை மருத்துவம் செய்து கொள்ள முடிவு செய்தாலும் ஏன் இந்த குறைபாடு, யாரிடம் இந்தக் குறைபாடு போன்றவற்றை முடிவு செய்ய பரிசோதனைகள் மிகவும் அவசியம் எனவே உங்கள் குடும்ப டாக்டர் கூறுவது போல அனைத்துப் பரிசோதனைகளும் செய்து கொள்வது அவசியம். அப்பொழுது தான் அதற்கேற்ப மருத்துவம் செய்து கொள்ள முடியும்.

டாக்டர் என் வயது 19, நான் இப்பொழுதுதே 54 கிலோ எடையிருக்கின்றேன் எனக்கு எடையைக் குறைக்க வேண்டும் போல தோன்றுகிது. சிலர் தேன் சாப்பிட்டால் எடை குறையும் என்கிறார்களே இது சரியா? சரியானால் தேனை எவ்வாறு சாப்பிட வேண்டும்.

ஷி. ஸ்ரீமதி

மைலாப்பூர்

காலை எழுந்தவுடன் தேன் சாப்பிடுவது உடலில் உள்ள தேவையற்ற தசைகளையும் கொழுப்பையும் கரைத்து இரத்தத்திர் சேர்த்து நாம் செய்கின்ற வேலைகளுக்கு எரிபொருளாக உபயோகிக்கச் செய்யும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே காலை எழுந்தவுடன் 1-2 ஸ்பூன் (10-15 I.L) தேனை ஒரு டம்ளர் (175 I.L) சுடு தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் பருகிவந்தால் எடை குறையும். ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறையும் கூட சேர்த்துப் பருகலாம். இது தவிர சாக்லேட், இனிப்பு, கொழுப்பு, இறைச்சி, பால் பால் சார்ந்த பொருட்கள், முட்டைக் கரு போன்றவற்றையும் தவிர்ப்பது அவசியம்.

டாக்டர், என் அக்கா பொண்ணிற்கு, வயது 3, சில சமயங்களில் மூக்கில் இரத்தம் வருகிறது, இது சில்லி மூக்கு உடைந்து விட்டது என்கிறார்கள். சில்லி மூக்கு என்றால் என்ன?

N. சுதா

மதுரை – 9.

சில்லி மூக்கு என்று எதுவும் கிடையாது சில சமயம் சிறு குழந்தைகளுக்கு அதிகமாக அடிக்கடி சளித் தொல்லை இருக்கும் பொழுது சில சமயம் மூக்கிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பிக்கும் இதற்கு சிறிதளவு மூக்கை அழுத்திப்பிடித்துக் கொண்டாலோ அல்லது சிறிது பஞ்சை மூக்கில் வைத்து அழுத்தப் பிடித்துக் கொண்டாலோ இரத்தம் வருவது நின்று போகும். சளிக்கு முழுமையான மருத்துவம் செய்து சளிப்பிடிப்பதை தடுத்து விட்டால் இரத்தம் வருவதும் நின்று போகும்.

என் வயது 28, எனது தலைமுடி தினசரி அதிகமாக உதிர்கிறது இது ஏன் என்றே தெரியவில்லை. இப்பொழுதே வயதான தோற்றம் வந்துவிட்டது இதனைக் கட்டுப்படுத்தி மேலும் முடி வளர என்ன செய்யலாம்.

சி. சுரேஷ் கண்ணன்

கோவை.

முடி அதிகமாக உதிர்கிறது என்றால் அது நமது உடலில் வேறு ஏதோ ஒரு பிரச்சனையிருப்பதையே காட்டுகிறது என்று அர்த்தம். அதன் காரணங்களைக் கண்டறிந்து அதனை சரிபடுத்த முயற்சிகள் மேற்கொண்டால் முடி உதிர்வது முற்றிலும நின்றுவிடும். புதிய முடியும் வளர ஆரம்பிக்கும். முடி உதிர்வதற்கான காரணங்கள்.

  1. பித்தம் அதிகமாக இருந்தால் முடி உதிரும். பித்தம் அதிகமாவதற்கு காரணங்கள், உடலில் நச்சுப்பொருட்கள் அதிகமாக உள்ளதேயாகும். இதற்கு முக்கிய காரணங்கள், வாழ்க்கை முறை, மது, புகை, போதைப் பொருட்கள், பிற மருந்துகளின் உபயோகம், டீ, காபி, சுற்றுப்புற சூழல் சீர்கேடு போன்றவையாகும்.
  • குறைந்த போஷாக்கு, அல்லது போஷாக்கின்மை பிற நோய்களின் தாக்கம், பிற உடல் நலக் கேடுகள் போன்றவை கூட முடி உதிர்வதற்குக் காரணமாக அமையலாம். அவற்றைக் கண்டுபிடித்து உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
  • முடியை நன்றாக பராமரிப்பது மிகவும் அவசியம். முடிந்தவரை இயற்கை பொருட்களையே முடி பராமரிப்பிற்கு பயன்படுத்துவது நல்லது. தினசரி எண்ணெய் தடவ வேண்டும். ஈரமான முடியில் எண்ணெய் தடவாமல் உலர்ந்த முடியில் எண்ணெய் தடவ வேண்டும். எந்த எண்ணெய்யாக இருந்தாலும் பரவாயில்லை. தரமான தயாரிப்பாளர்களின் எண்ணெய்யாக இருப்பது அவசியம். எண்ணெய் தடவும் பொழுது விரல் நுனிகளால் தலையில் படுமாறு உராய மென்மையாக தடவ வேண்டும். முடிந்தால் எண்ணெய் தடவி விட்டு சூடான நீரில் ஒர் துண்டை நனைத்துப் பிழிந்து தலையில் கட்டிக் கொள்ளலாம். 10-15 நிமிடங்கள் கழித்த பின்பு குளிக்கலாம். குளிப்பதற்கு முன் எண்ணெய் தடவுவதே சிறந்தது.
  • செயற்கைக் உணவுகளைத் தவிர்த்து இயற்கையான போஷாக்களிக்கும் உணவுகளை உண்பது மிக அவசியம். அதிகமான இரும்புச்சத்து நிறைந்த கறிவேப்பிலை, பப்பாளி, பேரீச்சம்பழம் போன்றவற்றையும் பச்சைக்காய்கறிகளும் பழங்களும் முடிக்கு போஷாக்கு தருபவை. அப்பொழுது தான் புதிய முடி வளரும். இருக்கின்ற முடி உதிராது.

Spread the love