மூன்று தூண்கள் – உணவு, உறக்கம், முறையான வாழ்க்கை

Spread the love

உணவு, உறக்கம், முறையான வாழ்க்கை உடல் நலத்திற்கு பக்க பலமான மூன்று தூண்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கான தினசரி வழிமுறையாக கூறப்படுவது, ஒருவன் தூங்கும்போது இடதுபுறம் படுப்பது, இருமுறை உணவு உண்பது, சிறுநீர் ஆறுமுறை கழிப்பது, மலம் கழிப்பது இருமுறை, உடல் உறவில் மிதமான முறை இவற்றை கடைப்பிடித்தால், நூறு ஆண்டுகள் உயிர் வாழலாம். இவைதான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூண்களாக கூறப்படுகிறது. உணவு, உறக்கம், பிரம்மச்சார்ய், அதாவது முறையான வாழ்வு முறை.

ஒருவரது உடல் நலனிலும், வியாதிகளிலும், உணவு, நடத்தை, இவற்றின் பங்கு கூறப்படுகிறது.

உணவு :  உண்ணும் உணவு திட ரூபத்திலும் அல்லது திரவ ரூபத்திலும் இருப்பின் அது ஆஹார் (உணவு) என்று கூறப்படுகிறது. இது உடனடி திருப்தி, பலம், ஒருவரின் உடல் திடகாத்திரம் இவற்றிற்கு காரணமாகிறது.

நேரத்துடன் உண்ணும், பொருத்தமான, சுத்தமான உணவு, உடல் ஆரோக்கியத்தின் முக்கிய தூண்களாகிறது. இதில் அடங்கிய சத்துக்கள், முக்கிய வேலைகளான ஜீரணம் அதாவது உணவு செரிமானம், அத்துடன் செரித்த உணவின் சக்தியை உள்வாங்குவது இவற்றிற்கு காரணமாகிறது.

ஆயுர்வேத கொள்கைப்படி, உணவு என்பது புரோட்டீன் கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள் அடங்கியது மட்டுமல்ல, மனது, ஆத்மா இவற்றை சீராக்குவதும் ஆகும். ஆகவே உடல் நலனில் அக்கறையுள்ள மனிதன் சத்துள்ளதும், சரியான அளவில் அறுசுவை உணவை உண்ண வேண்டும்.

முழுமையான உணவு (ஹிதா) மனிதனை சம நிலையில் வைப்பது மட்டுமல்லாமல் எல்லா குறைபாடுகளையும் களைகிறது. ஆகவே சரியான உணவு, சரியான விகிதத்தில் உண்ணப்படும்போது, ஆரோக்கியமான உடல் நலன் தருவது மட்டுமல்லாமல் உடலையும், மனதையும் எந்த தொந்தரவும் இல்லாமல் பாதுகாக்கிறது.

ஆரோக்கியமான உணவு, தவறாமல், இருமுறை உண்ணும்போது, நல்ல உடல் நிலை, மனநிலை இவற்றை தருகிறது. (உணவுப் பழக்கத்திற்கு கடைப்பிடிக்க வேண்டிய எளிய கொளகை என்னவெனில், முழு உணவை உண்டபின் ஆறுமணி நேரத்திற்கு மேல் வயிற்றை காலியாக விடக் கூடாது. மறுமுறை சாப்பிட வேண்டியிருப்பின் குறைந்தது 3 மணி நேரமாவது கழித்து உண்ண வேண்டும். அதாவது நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்கும் பட்சத்தில் ஒரு உணவிற்கும், மற்ற முறை உண்ணுவதற்கும் இடையே நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இடைவெளி அவசியம்)

ஒரு நாளில் இருமுறை தான் உண்ணுவது நலம் என்பதை ஒருவர் மறக்கக் கூடாது, இருப்பினும், இருமுறை உண்ணுவதற்கு இடையே அதிக இடைவெளி இருப்பது வயிற்றிற்கு நல்லதல்ல. வயிற்றை காலியாக இருக்கவிடக் கூடாது. ஆகவே, இடைவெளியில் இருமுறை குறைந்த அளவு எளிமையான உணவு எடுத்துக் கொள்வது சுறுசுறுப்பாக வைக்க உதவும் என்று ஆயுர்வேதம் சிபாரிசு செய்கிறது. அந்த சிறிய உணவிற்கு ‘அந்த்தர் போஜன்’ என்று பெயர்.

நாம் உணவை முன்னதாக, வயிறு காலியாவதற்கு முன் அதாவது மூன்று மணி நேரம் முன்னதாக எடுத்துக் கொள்ளும் உணவிற்கு ‘அதியாசனா’ என்று பெயர். அது அஜீரணம், உடல் பருமன், மந்த தன்மை போன்றவற்றை உண்டாக்குகிறது.

அதுபோல ஆறுமணி நேரத்தில் மேல் பசியோடிருந்தால் அதிக அமிலத் தன்மை, வாயுத் தொல்லை, அதிக அமிலத் தன்மையால் குடல், வயிற்றுப்புண் போன்ற உபாதைகளால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

பொதுவாக உணவு எப்படி இருக்க வேண்டுமெனில் 1) பிடித்தமானதாக, 2) சுத்தம் 3) முழுமையான உணவு (சத்துக்கள் நிறைந்தது) 4) புதியதாக சமைக்கப்பட்டது 5) மிதமான சூடு 6) சிறிதளவு எண்ணெய் சேர்க்கப்பட்டதாக அமைய வேண்டும். குளிர்ந்த உணவு, பழையது, காய்ந்தது, தவிர்க்கப்பட வேண்டும். மிகவும் குளிர்ந்த, மிகவும் சூடான, மசாலாக்கள் மிகுந்தது, கசப்பானது, உப்பு அதிகமுள்ளது போன்றவற்றை தவிர்ப்பது நலம். உணவு உண்ணும்போது அன்பானவர்கள், நெருங்கியவர்களுடன் சேர்ந்து உண்ணுவது சிறந்தது. உணவை மிகவும் வேகமாகவோ, மிகுந்த நேரம் எடுத்துக் கொண்டோ உண்ணக் கூடாது.

உணவின் அளவைப் பொறுத்து ஒருவர் வயிறு முட்டவோ அல்லது வயிறு காலியாக இருக்கும்படியோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுமாராக வயிற்றில் அரை பங்கு மட்டுமே உணவு எடுத்துக் கொள்ளவும். மிகுந்த 1/2 பங்கில் 1) சமமான அளவு நீர் 2) காற்றுப் புழங்குவதற்கு.

ஆயுர்வேதம் எந்த உணவுப் பொருள்களை சேர்ந்த மாதிரி ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று அறிவுரையுடன் வலியுறுத்துகிறது. இரு பொருட்கள் ஒன்றாக சாப்பிடக் கூடாது என்பதற்கு விருத திரவியாஸ் என்று பெயர். பொதுவான சில விருத ஆஹார் பின்வருமாறு:

பாலுடன் மீன் சேர்த்து உண்ணுதல், மாமிசத்துடன் ஏதாவது புளிப்புள்ள பழம், மீனுடன் பால் அல்லது இனிப்பு பண்டம் தேனுடன் நெய், தேனுடன் எண்ணெய்.  இவ்வாறு ஒவ்வாத பொருட்களை உண்டால் அவை திசுக்களில் விஷமாக வேலை செய்யும்.

உணவிற்கு இடையே சில மிடறுகள் நீர் பருகலாம். உண்ணும்போது நிறைய நீர் பருகுவதால் சத்துக்களை நீர்த்துவிட செய்வதோடு ஜீரணத்தையும் பாதிக்கும். உணவு உண்டு 1 மணி நேரம் கழித்து நிறைய நீர் பருகலாம் மிகவும் நல்லது. பசியாக இருக்கும்போது நீர்பருகுவது தவிர்ப்பது நலம். இது ஜீரண சம்பந்தமான சிக்கல்களை எற்படுத்தும்.

ஆயுர்வேதம் உணவிற்கு பிறகு வெற்றிலை, பாக்கு, சோம்பு போடுவதை ஆதரிக்கிறது. இது வாயை சுத்தப்படுத்துகிறது. உமிழ்நீர் சுரப்பதை அதிகரிக்கிறது. ஜீரண சக்தியையும் ஊக்குவிக்கிறது. வயிற்றை கெட்ட வாயுத் தொல்லையிலிருந்து விடுவிப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது.

உடற்பயிற்சி, கடினமான பயிற்சிகள், அல்லது உடலுறவு இவற்றை உணவு உண்டவுடன் தவிர்ப்பது மிகவும் நல்லது. இரவு உண்டபின் குறைந்த பட்சம் நூறு அடிகளாவது நடப்பது ஜீரணத்தை துரிதப்படுத்தும். சிறந்த முறை. உணவு உண்டபின் உடனே உறங்க செல்வது சாலச் சிறந்தது அல்ல.

ஒவ்வொருவரும் கீழ்வரும் 8 விஷயங்களை, உணவு உண்ணும்போது மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

1. உணவை சமைப்பதும், பதப்படுத்துவதும் ஆகியவற்றிற்கான முறைகள்

2. இரண்டு, மூன்று பொருட்களை கலக்கும்போது நியாய்படுத்துக்கொள்ளல்.

3. உணவின் அளவு

4. இடம், வெப்ப தட்ப நிலை, உடல்வாகு, இவற்றிற்கு பொருத்தமான உணவு.

5. நேர விகிதம், அதாவது இரவு அல்லது பகல், காலநிலை, வயது, உடல்நிலை.

6. உணவு விதிமுறைகளை கடைப்பிடித்தல்.

7. தனிமனித விருப்பு, வெறுப்பு.

உணவு மிகவும் நிதானமாகவும், மிகவும் வேகமாகவும் சாப்பிடக் கூடாது. உணவை விழுங்குவதற்கு முன் நன்றாகமென்று, உமிழ்நீர் கலந்து இருப்பது நலம்.

உறக்கம்

ஆழ்ந்த உறக்கம் நமக்கு அநேக வழிகளில் உதவுகிறது. அதாவது புத்துணர்ச்சியை தருகிறது. விழிப்புணர்வு, சந்தோஷத்தை கொடுக்கிறது. சத்துக்களை எல்லா உறுப்பு மண்டலங்களுக்கு ஒழுங்கான முறையில் செலுத்தப்படுவதை கண்காணிக்கிறது, கட்டுப்படுத்துகிறது. நீண்ட ஆயுளுக்கு புத்துணர்வுடன் உறுதி செய்கிறது.

உணவுக்கு அடுத்தபடியாக, உறக்கம் நல்ல விகிதத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உணவைப் போன்றே உறக்கமும், அடிப்படை உணர்வாகவும் வாழ்க்கைக்கு தேவையானதாகவும் அமைகிறது. மனதும், உடலும், அதிக ஒன்றில் ஈடுபடும்போது, சோர்வு ஏற்பட்டு, மந்த நிலை அடைகிறது. ஆதலால், உணர்வு உறுப்புகள் தற்காலிகமாக வேலை செய்வதை நிறுத்த, மூளை வேலை செய்வது குறைய, ஒருவர் சுற்றுபுறத்துடன் பேசுவது நின்றுவிடுகிறது. இதுவே உறக்கம் ‘சுசுப்தி’ என்று கூறுகிறது ஆயுர்வேதம்.

உறக்கம் முழுமையாக இருப்பின், பூர்ண ஒய்வாக இருப்பின் விழிக்கும்போது சுறுசுறுப்பாகவும், விழிப்புணர்வுடன் இருக்க இயலும். இதுவே ‘ஜாக்ரத்வாஸ்தா’ உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே உள்ள ஒரு நிலை, அதில் உடல் சோர்வாக மூளை சுறுசுறுப்£க இருக்கும். இதுவே கனவு ‘ஸ்வப்னா’ என்று கூறப்படுகிறது.

உறக்கத்தை ஊக்குவிப்பது. ‘தமஸ் அல்லது தமோகுணா’ உடல், உள்ளம் உலைச்சல் ஏற்படும்போது தமஸ் ஊக்குவிக்கப்படுகிறது. தமோகுணா மந்த நிலை, உற்சாகமின்மையை தருவது ஒரு பக்கம் மட்டுமல்லாமல், தற்காலிகமாக, உறக்கத்தின்போது ஒருவித சக்தியை இதயத்திற்கும் மூளைக்கும் தருவதால் மறு தினம் விழித்தபின் அதிகமான சுறுசுறுப்பும், விழிப்புணர்வையும் தருகிறது.

ஆழ்ந்த உறக்கம் நமக்கு பலவகைகளில் உதவி புரிகிறது. என்னவெனில் புத்துணர்ச்சி, விழிப்புணர்வு சந்தோஷம், சத்துக்களை சமமாக எல்லா உறுப்பு மண்டலங்களுக்கும் தர உதவுகிறது. நீண்ட நாள் வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கிறது. தூக்கமின்மை, தடைப்பட்ட தூக்கம், எரிச்சல், எடை குறைவு, வருத்தம், துன்பம், மனநோய் தருவதோடு, விரைவில் மரணத்தை உண்டாக்குகிறது. நரம்பு தண்டுவட பாதிப்பு, முதுமை, கடினமான உடல் உழைப்பு, கடினமான பயிற்சிகள், பட்டினி, ஒழு ங்கற்ற, வசதியான படுக்கையின்மை, எதிர்பார்ப்பு, பயம், கவலைகள், படபடப்பு ஆகியவை தூக்கமின்மை அல்லது இன்சோமனியாவிற்கு காரணமாகிறது. ஆயுர்வேதிக் பஞ்சகர்மா தெரபி தடைப்பட்ட தூக்கத்திற்கு காரணமாகிறது.

சில எளிய முறைகள் நல்ல உறக்கத்திற்கு & உடலை மசாஜ் செய்வது (சம்வாஹன) உடம்பை கைகளால் நீவிவிடுதல் நீண்ட நேர ஷவர்பாத், இதமான களிம்புகள் கண்களின் மேல் தலை, முகத்திற்கு, வசதியான படுக்கை, கைக்குத்தல் அரிசி தயிருடன் மிதமான சூட்டில் பால் அருந்துவது, சூப், குளிமையான இருண்ட இடத்தில் வசதியாக ஓய்வெடுப்பது.

அதிகப்படியான உறக்கமும், சில தொல்லைகளை தருகிறது. அதாவது உடல் பருமன், இதய சம்பந்தமான தொந்தரவுகள், சர்க்கரை வியாதி கற்பனை சக்தியை குறைப்படும். றிரண சம்பந்தமான குறைபாடுகளை தோற்றுவிக்கிறது. கடினமான உடற்பயிற்சி, இரத்தம் செலுத்துதல், உண்ணாவிரதம் முதலியவற்றால் மேற்கண்ட குறைபாடுகளை நீக்கலாம்.

இரவு ஷிப்ட் வேலை செய்பவர்கள், கோடைக் காலம் இவற்றை தவிர பகலில் தூங்கும் பழக்கம் கபா குணத்தை அதிகப்படுத்தி, தலைவலி, மந்த தன்மை, அஜீரணம், மூச்சுக் குழாய் சம்பந்தப்பட்ட வியாதிகள், முக்கியமான நரம்பு சம்பந்தப்பட்ட வேலைகள் செய்யும் உறுப்புகள் பலஹீனப்படுத்துகிறது. பகல் தூக்கத்தை உடல் பருமன் உள்ளவர்கள் கபா ப்ரக்ருதி மனிதர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போதை பொருளுக்கு அடிமையானவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மற்றபடி பகல் தூக்கம், குழந்தைகளுக்கு, வயதானவர்களுக்கு, உடல் நோய்வாய்பட்டவர்களுக்கு, கடின உழைப்பாளர்கள், மன அழுத்தம், அதிக உடலுறவு கொள்பவர்களுக்கு ஏற்றது. வெகுதொலைவு பயணம் செய்தவர்கள், இரவு ஷிப்ட் வேலை செய்பவர்கள் தூக்கம், இவற்றின்போது பகல் உறக்கம் பாதகமானதல்ல. சுசர்தாவின்படி அளவான இரவு தூக்கம், இரவு வெகுநேரம் கண்விழித்து வேலை செய்தல், பகல் உறக்கத்தை தவிர்ப்பது இவற்றால் ஒருவன் பல வியாதிகளிலிருந்து விடுபடுகிறான், உடல் உறுதி, விழிப்புணர்வு ஏற்படுகிறது. முகம் தெளிவடைகிறது. நிறம் கூடும். உடல் உறுதியை சரியான விகிதாசாரத்தில் ஏற்படுத்துகிறது.

ஒழுக்கமுள்ள வாழ்க்கை முறை

ஒழு ங்கான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறவர்களுக்கு, நல்ல உடல்நிலை ஏற்படுகிறது. நல்ல பழக்க வழக்கங்கள், பாதுகாப்பு, சட்டென புரியும் தன்மை, கவர்ச்சிகரமான தோற்றத்தையும் ஏற்படுத்தும். சுருக்கமாக கூறுவது எனில், முறையான வாழ்க்கை நல்ல ஆரோக்கியத்தை தந்து, உடல் சம்பந்தப்பட்ட, மனது சம்பந்தப்பட்ட குறைகளை அறவே நீக்குகிறது.

தினசரி வாழ்வில், ஒழுக்கத்திற்கு நன்றாக உறங்கி விடியும் முன்பு எழுந்திருப்பது, இரவில் விரைவில் உறங்க செல்ல வேண்டும். முதலாவது நித்திய கடன்கள் ஒழுங்காக முடித்துவிட்டு படுக்க செல்ல வேண்டும். முக்கியமாக கட்டாயப்படுத்தி மலம் கழிக்கக் கூடாது. உடல் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உணர்வு ஏற்படும்போது உடனடியாக வெளியேற்றிவிட வேண்டும். தேவைப்படின் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் நீர் (முடிந்தால் செப்பு பாத்திரத்தில் வைக்கப்பட்டது) பருகினால், வயிற்றில் உந்துதல் ஏற்பட்டு மலம் கழிப்பது எளிதாகிவிடும்.

அடுத்தபடியாக, பல், நாக்கு சுத்தப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். வேம்பு, அரசு மரக் குச்சிகளை பல் துலக்க பயன்படுத்தலாம். மருத்துவ குணம் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.

கண்கள் பராமரிப்பிலும் கவனம் தேவை. ஆன்டிமனிசல்பைடு என்ற களிம்பை கண்ணின் உட்புறம் தடவலாம். கண்களில் நீர் கசியும் தொந்தரவு இருப்பின்.

(உணவின் இடையே சிறிதளவு நீர் அருந்துவது அனுமதிக்கப்பட்டாலும், ஒருவர் அதிகப்படியான நீர் உணவுக்கிடையே அருந்தும்போது உணவு சத்துக்களை நீர்த்துவிட செய்வதோடல்லாமல், ஜீரணத்தையும் பாதிக்கிறது)

உடலில் சிறந்த எண்ணைய் தடவும்போது, உடல் நாற்றம் அசதி, விரைப்புத் தன்மை இவற்றை நீக்குகிறது. மயிர்க் கால்களுக்கு இடையே எண்ணெய் தடவும்போது, மயிர்க் கால்களை உறுதிச் செய்வதோடு, தலை வலியை நீக்கி, இரவில் நல்ல தூக்கத்தை தருகிறது. காதுகளுக்கு வாரம் ஒருமுறை எண்ணெய் விடுவது, மருத்துவ சம்பந்தப்பட்ட எண்ணெய் செலுத்துவது அல்லது மருத்துவ குணம் நிரம்பிய சில தாவரங்களின் ஜுஸ் விடுவது இவற்றை செய்வதால் காதுகள் சுத்தமாக்கப்படுவதுடன் கேட்கும் திறனும் அதிகரிக்கிறது.

முக்கியமாக தினசரி செய்ய வேண்டியது. உடற்பயிற்சி, நேரப் பயிற்சி முறை, ஒருவருக்கொருவர் மாறுபடும். உடற்பயிற்சியானது ஜீரணத்தை ஒழுங்குப்படுத்து கிறது, கொழுப்பை குறைக்கிறது, உடல்வலிமையாகவும், எடை குறைவாகவும் செய்கிறது. உற்சாகத்தையும் தருகிறது. எதிரிடையான விளைவுகளான எடை குறைப்பு கடுமையான வியாதியஸ்தர்களை பாதித்துவிடும். ஆகவே டாக்டர் ஆலோசனைப்படி உடலுக்கு ஏற்ற பயிற்சிகள் செய்து வருவது நலம்.

தவறாது காலையில் நன்றாக குளிப்பது, வியர்வை, அழுக்கு தூசி, அரிப்பு தரும் உணர்வு ஆகியவற்றை நீக்கிவிடும். குளியல் உள் உறுப்புகளை ஊக்குவித்து, பசியை தூண்டும், உறுதி, பலம் தரும், மனதையும் உற்சாகப்படுத்தும். ஒருவர் குளிர் நீர், சூடான நீர் அல்லது மிதமான சூடுள்ள நீர் பரிந்துரைக்கப்பட்டபடி குளிக்கலாம். தலையில் குளிர்ந்த நீர் செலுத்துவது நலம், ஏனெனில் ரோமம் கொட்டுவது தடுக்கப்படுவதோடு, இள வயதில் சொட்டை விடுவதை தடுக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், வியாதியஸ்தர், சைனஸ் தொல்லை உள்ளவர்கள், கடுமையான சளி தொல்லை உள்ளவர்கள் தினமும் குளிப்பதை தவிர்த்து வெந்நீரில் ஸ்பாஞ்ச் நனைத்து சுத்தம் செய்யலாம்.

உணவு, உறக்கம் பற்றிக் கூறப்பட்டது. இன்னும் சில, மாலையில், உணவு உண்ணுதல், உடலுறவு, உறக்கம், படிப்பு ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். மாலைவேளை, ஓய்வாக இருக்க பரிந்துரைக்கப்பட்டது. மாலையில் தவிர்க்கப்பட வேண்டியது. விடியல் முந்திய காலையிலும் தவிர்க்கப்பட வேண்டும். படிப்பும் உணவும் பகலிலும், உடலுறவு, தூக்கம், இரவிலும் சாலச் சிறந்ததாக கூறப்படுகிறது.

மிகவும் முக்கியமான மற்றொரு விஷயம் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது என்னவெனில் (வேகா) இயற்கையாக ஏற்படும் நிகழ்வுகளை கட்டுப்படுத்தக் கூடாது. அது கடுமையான நோய்களுக்கு கொண்டு சென்று விடும். அவையாதெனில், மலம் கழிக்க தூண்டும் உணர்வு, கொட்டாவி, தும்மல், தாகம், கண்ணீர், தூக்கம், சிறுநீர்கழித்தல். சில விஷயங்களை கட்டுப்படுத்த வேண்டும். அவையாதெனில் அதிக ஆர்வம் உடலுறவில், அளவுக்கதிகமாக உண்பது, முறையற்ற தூக்கம், பயம், கவலை, கோபம், கடுமையான சொல், யோசனை செய்யாமல் எடுக்கும் முடிவு ஆகியவை. தினசரி வாழ்க்கை முறையை செம்மை படுத்த நினைப்பவர்கள் தன்னுடைய வயது, உடல் நலம், சீதோஷ்ண நிலை, கால நிலை முதலியவற்றை கருத்தில் கொண்டு வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு கருத்துக் கூறப்படுகிறது. ஒருவர் தனது இடது பக்கத்தில் படுத்து உறங்க வேண்டும். இரண்டு தடவை உணவை உண்ண வேண்டும். சிறுநீர் ஆறுமுறை (6) கழிக்க வேண்டும். மலம் இருமுறை கழிக்க வேண்டும். உடலுறவு அளவுடன் இருக்க வேண்டும். இப்படி கடைப்பிடித்தால் நூறு வயது உயிர் வாழலாம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூண்களாகிறது எனப்படுவது, நல்ல உணவு, ஆழ்ந்த உறக்கம், பிரம்மச்சரியம் அதாவது முறையான வாழ்வுமுறை. உடல் சம்பந்தமான இலக்கியங்களும், உடற்கூறு வல்லுனர்களும், எல்லாவிதமான மன மகிழ்ச்சிக்கும் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பது மிகவும் சாலச் சிறந்தது என்று பரிந்துரைக்கின்றனர்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love