உடம்புல மேஜிக்

Spread the love

வெறும் வயிற்றில் சுடுநீரில் மிளகு சேர்த்து ஒரு மாசம் குடிங்க…

உங்க உடம்புல இந்த மேஜிக் நடக்கும்

அடிக்கடி உங்களுக்கு உடம்பு சரியில்லாம போகுதா? அதற்குக் காரணமாக நாம் நினைப்பது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பது மட்டும் தான் காரணம் என்று. நீங்களே யோசித்துப் பாருங்கள். நம்முடைய உடலில் எல்லா நேரங்களிலும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்குமா என்று நாம் யோசிக்கலாம். அதன் உண்மைதான் என்ன?

உடல் ஆரோக்கியம்

பொதுவாக உடல்நிலை சரியில்லாத பொழுது நாம் மிகவும் அசௌகரியமாக உணர்கிறோம். நாம் நோயால் கஷ்டப்படுகிற பொழுது நம்முடைய உடலில் உள்ள ஆற்றல் மட்டுமே குறைந்து போவதில்லை. உங்களுடைய செயல்பாடுகளின் உற்பத்தியும் குறைந்து போகிறது. அதிலும் தற்போதைய சமூக நிலையில் உடல் ஆரோக்கியத்தை முறையாகப் பராமரிப்பது என்பது மிகவும் விலையுயர்ந்த ஆடம்பரமான ஒரு விஷயமாக மாறிவிட்டது.

நீங்கள் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் ஆவதற்கு, உங்களுடைய உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சீரின்றி மிகவும் பலவீனமாக இருப்பது தான் முதல் காரணம். ஆம். உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து இருக்கும்பொழுது நம்மால் நோய் தாக்குவதற்குக் காரணமான கிருமிகளை எதிர்த்துப் போராட முடியாது. அதற்காக என்ன இப்படி பயமுறுத்துகிறீர்கள் என்று இரவு பகலாக இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கவும் தேவையில்லை.

உணவே மருந்து   

நம்முடைய முன்னோர்கள் நம்மைப் போல உணவை ருசிக்காகவும், அதனால் ஏற்படும் பிரச்சனைக்காக மருந்தையும் சாப்பிடவில்லை. உணவையே மருந்தாக சாப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் நாம் உணவு எடுத்துக் கொள்ளும் அளவில் மருந்தையும் மருந்து சாப்பிடுகிற அளவில் உணவையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் நம்முடைய முன்னோர்கள் வழியிலேயே நம்முடைய கிச்சனில் இருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் என்னென்ன குணங்கள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அதைப் பயன்படுத்தி உங்களுடைய நோயைக் குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

யானை பலம்

குறிப்பாக, நம்முடைய வீட்டில் உள்ள ஒரே ஒரு பொருள் மட்டுமே போதும், நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை பல மடங்கு வலுப்படுத்துவதற்கு. மிளகு மட்டும் இருந்தாலே போதும் நம்மை பலமடங்கு வலுப்படுத்திக் கொள்ள முடியும். சுடுதண்ணீரில் சிறிதளவு மிளகைத் தூளைப் போட்டு கலந்து அதை வெறும் வயிற்றில் காலையில் குடித்தாலே போதும், உங்களுக்கு யானை பலம் உண்டாகிவிடும்.

சரி, காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் சிறிது மிளகைப் போட்டு தொடர்ந்து ஒரு மாதங்கள் குடித்து வாருங்கள். அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பட இந்த மிளகுத் தண்ணீர் உங்களுடைய உடலுக்குள் ஒரு பெரிய மேஜிக்கை உண்டு பண்ணும். உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். உங்களுடைய ரத்த செல்களுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சுடுதண்ணீரில் மிளகைப் போட்டுக் குடித்து வந்தால் செல்கள் அனைத்தும் புத்துணர்ச்சி அடையும். உடலில் நீர்ச்சத்தும் அதிகரிக்கும். நீர்ச்சத்து பற்றாக்குறையால் உண்டாகும் பாதிப்பை தடுத்து செல்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவி செய்யும்.

உடல் அசதி

சுடுதண்ணீரில் மிளகை போட்டு காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பசியின்மையைப் போக்கும். சரியாக உணவை சரியான நேரத்தில் சாப்பிட்டாலே முறையாகத் தூங்கி சரியான நேரத்தில் எழுந்திருக்க முடியும். இல்லையென்றால் உடல் அசதி உங்களைப் போட்டு அசத்தும். இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் காலையில் கட்டாயம் குடித்துப் பாருங்கள். அப்புறம் பட்டாம்பூச்சியை விட வேகமாக பறக்க ஆரம்பிச்சிடுவீங்க…

சரும வறட்சி

வெந்நீரில் மிளகு சேர்த்து குடித்து வருவது சருமத்தில் உள்ள வறட்சியைப் போக்கி நீர்ச்சத்தினை அதிகரிக்கச் செய்யும். சருமத்தின் வறட்சி நீங்கி, உடலைப் புத்துணர்வோடும் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கச் செய்யும். உடல் வலிமை எப்போது நீங்கள் இந்த மேஜிக்கல் ட்ரிங்கை குடிக்க ஆரம்பிக்கிறீர்களோ, அந்த நாள் முதலே உங்களுடைய உடல் வலிமை கூடிக்கொண்டே போவதை உணர ஆரம்பிப்பீர்கள். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உங்கள் உடல் வலிமையாக இருப்பதை உங்களை உணரச் செய்யும்.

மலச்சிக்கல் தீர

நம்முடைய உடலுக்குள் கழிவுகள் தேங்குவதற்கும் நோய்க் கிருமிகள் பெருகுவதற்கும் மிக முக்கியக் காரணங்களில் ஒன்று இந்த மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் ஜீரணக் கோளாறுகளால் தான் ஏற்படுகிறது என்பது நம் எல்லோருக்குமே தெரியும். இதை சரிசெய்துவிட்டால் போதும், நம்முடைய உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும். இப்படி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் அற்புத மருந்தாக இந்த மிளகும் சுடுதண்ணீரும் பயன்படும். இதை குடிக்கத் தொடங்கியதும் வயிறு கடமுட பிரச்சனைகள் குறைவதை உங்களால் நன்கு உணர்ந்து கொள்ள முடியும். மேலும் அது உடல் கழிவுகளை வெளியேற்றும். மூலம் மற்றும் மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகள் தீர ஆரம்பிக்கும்.

எடை குறைய

உடல் எடையைக் குறைப்பதற்கு ஆண்களை விடவும் பெண்கள் அதிகமாக டயட் ஃபாலோ செய்கிறார்கள். அதேசமயம் அவர்கள் தான் அதிக சிரமப்படவும் செய்கிறார்கள். அதற்காக அவர்கள் நிச்சயம் ஒரு மார்னிங் ட்ரிங்கை முயற்சி செய்கிறார்கள். அதுபோன்று உடல் எடையை வேகமாகக் குறைக்க வேண்டும் என்று முயற்சியில் ஈடுபடுகிறவர்கள் மிக எளிதான இந்த மார்னிங் ட்ரிங்கை முயற்சி செய்யலாம். இது உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்கச் செய்து நீங்கள் விருப்பப்படும் எடையை உங்களுக்குக் கொடுக்கிறது.

சரும அழகு

கருப்பு மிளகும் சுடு தண்ணீரும் உடலில் உள்ள கழிவை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும். அதனாலேயே உங்களுடைய சரும அழுக்குகளும் வெளியேறி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு சரும நிறத்தைக் கூட்டி கிளியர் ஸ்கின்னாக வைத்திருக்க உதவுகிறது.

உடல் கழிவுகள்

இயற்கையாகவே கழிவுகளை நீக்கும் அற்புத குணங்கள் சுடு தண்ணீரிலும் இருக்கிறது. மிளகிலும் இருக்கிறது. எங்கெங்கெல்லாம் உடலில் கழிவுகள் சேர்ந்திருக்கின்றனவோ அந்த இடங்களில் எல்லாம் தேடிப்போய் சுத்தம் செய்து உடலை இயற்கையாகவே ஆரோக்கியமாக வைத்திருக்கும் பண்பு இந்த பானத்துக்கு உண்டு. என்ன மக்களே! நாளைக்கு காலையில இருந்தே இத குடிக்க ஆரம்பிக்க போறீங்களா?… குடிச்சுப் பார்த்துட்டு உங்களோட மகிழ்ச்சியை எங்களோட பகிர்ந்துக்கோங்க.

கி. ராஜகோபாலன்


Spread the love