தினசரி எளிதில் கிடைக்கக் கூடிய மற்றும் விலை குறைவாக உள்ள பழங்கள் தினசரியோ அல்லது வாரம் இரண்டு மூன்று முறையோ நாம் சாப்பிட்டு வந்தால் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தி விடலாம். உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் பாதிப்பின்றி இயங்குவதற்கு பழங்கள் மிகவும் நன்மையாக உள்ளது.
நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகி குடல் பகுதி கடந்து மலமாக, சிறுநீராக எளிதில் வெளியேறினாலே போதும். உடலின் பெரும்பலான வியாதிகளுக்கு காரணம் செரிமானமின்றி ஏற்படும். மலச்சிக்கல் தான். ஒவ்வொரு பழ வகையும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பலன் தருகிறது என்று பார்ப்போமா?
உடற்பருமன் குறைய தினசரி எட்டு வாழைப் பழங்களையும் நான்கு டம்ளர் பால் சேர்த்து அருந்தி வந்தால் எட்டு நாட்களில் இருபது கிலோ எடை குறையும் என்று உங்களுக்குத் தெரியுமா?
வாழைப் பழத்தைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, அத்துடன் சமளவு சர்க்கரை சேர்த்து அவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் கொதிக்கும் வரை எரிக்கவும். பிறகு மேற்கூறிய கலவையை தனியே எடுத்து ஆறிய பிறகு சாப்பிடவும். வறண்ட இருமல், தொண்டைப் புண், குருதிப் பித்தம், இரத்த சோகை போன்றவைகளிலிருந்து குணம் பெறலாம்.
பழுத்த வாழைப் பழங்கள் மிகவும் எளிதில் செரித்து விடும். வாழைப் பழத்தில் உள்ள மாவுப் பொருள் செரிக்கும் மாவுப் பொருள்களிலேயே சிறந்தது. உருளைக் கிழங்குடன் வைத்து சாப்பிடக் கூடியது. இந்த மாவுச் சத்து விரைவில் உடலில் சேரக் கூடியது. இதை உண்பதனால் சிறுநீர் சாரந்த நோய்கள் குணமாகும். ஸ்புரு என்னும் நோயினால் பாதிப்புள்ள குழந்தைகளின் குடல் நெகிழ்ச்சிக்கு சாதாரண அமிலமாக இப்பழம் உதவுகிறது. மற்ற பழங்களைக் காட்டிலும் நீர்ச் சத்துக் குறைவாகவே உள்ளது.
எலுமிச்சம் பழச் சாறு, பசுவின் தயிர், இளம் தென்னம் பூச்சாறு ஒவ்வொன்றும் 15 கிராம் ஒன்று சேர்த்து காலையிலும் மாலையிலும் கொடுத்து வர குழந்தைகளுக்கு களையினால் ஏற்படும் நீர்ச் சுருக்கு குணமாகும். எலுமிச்சை இலையுடன் நாரத்தை, வில்வ இலை, மகிழ இலை, கறிவேப்பிலை இலை அனைத்தையும் நிழலில் உலர்த்தி இடித்து கருக்கு உமியுடன் கலந்து சூரணம் போல செய்து பல் தேய்த்து வந்தால் பல் சம்பந்தமான நோய்கள் அணுகாது.
சொறி, கரப்பான் போன்ற தோல் நோயுள்ளவர்கள் பகல் நேரத்தில் ஓரிரு டம்ளர் எலுமிச்சம் பழச் சாறு குடித்து வர வேண்டும். மற்றவர்கள் தோல் நோய் வராமலிருக்க முன் பாதுகாப்பிற்காக அருந்தி வரலாம். எலுமிச்சம் பழச்சாறுடன் தேன் கலந்து உட்கொள்ள வாத நோய் நீங்கும். வென்னீரில் எலுமிச்சம் பழச் சாறு கலந்து குடித்தால் மூட்டு வலிகள் மறையும்.
பப்பாளிப் பால் ஒரு கரண்டி, தூய்மையான தேன் அரைக் கரண்டி, வென்னீர் 62 கிராம் அனைத்தையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கி, குளிர்ந்த பின்பு அருந்தி, அதன் பின்பு இரண்டு மணி நேரம் சென்ற பின் ஆமணக்கு எண்ணெய் 30 கிராம், பப்பாளிச் சாறு 60 கிராம் கலந்து அருந்தினால் வயிற்றில் உள்ள நோய் நுண்ணுயிரிகள் அழிந்து விடும்.
உலர்த்திய பப்பாளிப் பழம் அல்லது உப்பிட்டு உலர்த்திய பப்பாளிப் பழத்தை உணவுடன் சேர்த்து உட்கொண்டு வர, ஈரலின் வீக்கம் குறையும். தாய்ப் பால் மிகுதியாகச் சுரக்கும்.
பப்பாளி பழத்தை தினசரி சாப்பிட்டு வர சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதில் உள்ள பெப்சின் என்ற வேதிப் பொருள் மலச் சிக்கலை நீக்கி, குடலைச் சுத்தம் செய்து குடல் நோய் வராமல் தடுக்கிறது.
ராகவேந்திரன்