40 வயதைக் கடந்த ஆண்கள்

Spread the love

அழகாக, கம்பீரமாக மூப்படைவது என்பது சிலருக்கு கிடைக்கும் வரப்பிரசாதம். குழந்தைபருவம், வாலிபப்பருவம், நடுவயது மற்றும் வயோதிக பருவம் என்று படிப்படியாக உடல் நிலை மாறுவது, ஆரோக்கியமாக நிகழ்ந்தால் அது ஒரு பெரும் புண்ணியம் எனலாம்.

வயதாக வயதாக உடலின் செயல்பாடுகள் மந்தமடைந்து கொண்டுபோகும். மூப்பு ஆண்களில் பாலியல் உணர்வுகளை மெதுவாக பாதிக்க தொடங்கும். இதை ஆங்கிலத்தில் கிஸீபீக்ஷீஷீஜீணீusமீ என்பார்கள். ஆண்களுக்கு ஏற்படும் வயோதிக பாதிப்புகள் சுக்கில வலக வீக்கம், சிறுநீரக செயல்பாடுகள் சுக்கில வலகம் (றிக்ஷீஷீstணீtமீ ரீறீணீஸீபீ) என்பது ஆண்களுக்கு உரித்தான ஒரு உபரி பாலியல் அவயம். விந்துவின் பாகமாக ஒரு அல்கலைன் (ணீறீளீணீறீவீஸீமீ) திரவத்தை சுரக்கும். உறுப்பு. வயதானால் இது வீக்கமடையும். இது சிறுநீர்ப்பை (ஙிறீணீபீபீமீக்ஷீ) யின் ‘கழுத்தை’ அழுத்துவதால் சிறுநீர் போவது சிரமமாகும்.

சுக்கில வலகம் வீக்கத்தின் காரணம் வயதானதும் இந்த அவயத்தின் திசுக்கள் நார் தசைகளாக கடினமாகிவிடுகின்றன. இந்த நிலை ‘அநுகூலமான சுக்கில வலக வீக்கம்‘ (ஙிமீஸீவீரீஸீ றிக்ஷீஷீstணீtவீநீ லீஹ்ஜீமீக்ஷீtக்ஷீஷீஜீலீஹ்) எனப்படும். இது 50 சதவீத, வயதான ஆண்களுக்கு ஏற்படுகிறது. இதனால் சிறுநீர் பிரச்சனைகள் மற்றும் உடலுறவில் விந்து வெளியேறுதல் பாதிப்புகள் ஏற்படும். சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள் உண்டாகும். சிறுநீர் பை முற்றிலும் காலியாகாமல் இருப்பதால், சிறுநீர் திரும்பி சிறுநீரகத்தை சேருவதால், சிறுநீரகம் பாதிப்பையும். சுக்கில வலகமே நோய்களால் தாக்கப்படும். இதை றிக்ஷீஷீstணீtவீs என்பார்கள். சுக்கில வலக புற்று நோய் வயதானவர்களை அதிகம் தாக்கும். இந்த வகை புற்றுநோய் அதிகரித்து வருகிறது. தவிர சிறுநீர்பை புற்று நோயும் ஏற்படலாம்.

குழந்தை பெறும் திறன்

ஆண்களின் குழந்தை உண்டாக்கும் திறன் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். வயது மட்டும் அதற்கு காரணமாவதில்லை. சுக்கிலவலகம் எடுக்கப்பட்டாலும் ஆணின் பாலியல் திறன் பாதிக்கப்படாது. உடலுறவில் வெளியேறும் விந்தின் அளவு வாலிபத்திலும் வயோதிகத்திலும் ஏறத்தாழ ஒரே அளவாக இருக்கும். ஆனால் விந்துவில் உள்ள கருவுண்டாக்கும் ஆண்தாது (ஷிஜீமீக்ஷீனீ) குறைந்து விடும்.

உடலுறவில் நாட்டம்

சில ஆண்களுக்கு வயதானதும் பாலியல் உந்துதல், உணர்வுகள் குறையலாம். பாலியல் செயல்பாடுகள் மந்த மடையும். இதன் காரணம் ஆண் ஹார்மோனான “டெஸ்டோஸ்டிரோன்” (ஜிமீstஷீstமீக்ஷீஷீஸீமீ) குறைந்து விடுதல். இதர காரணங்கள் மனோரீதியான வயோதிக பிரச்சனைகள், கவனிப்பார் இல்லாமல் போவது, முதுமையில் தனிமை, நோய்நொடிகள், போன்றவையும் ஆண்மையை வெகுவாக பாதிக்கும் காரணங்கள்.

ஆண் பீஜங்கள் பாதிப்பு, வயோதிகம் முதலில் பாதிப்பது ஆண் பீஜங்களைத்தான் (ஜிமீstவீபீமீs).

ஆண் ஹார்மோன் சிறிதளவு குறையலாம். ஆனால் விரையின் திசுக்களின் அடர்த்தி குறைந்து மாற்ற மடையும். விந்துவை வழிநடத்தும் “பாதைகள்” (tuதீமீs) நீண்டு சுருங்கும் “மீன்சக்தியை” (மீறீணீstவீநீவீtஹ்) கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கும். ஆண் பீஜங்கள் விந்து உற்பத்தியை தொடர்ந்து செய்தாலும், முன் சொன்னது போல் ஆண் தாதுப் பொருள் குறைந்து போகும். விந்து நாளங்கள் (ணிஜீவீபீவீபீஹ்னீவீs), சுக்கிலவலகம், ஆண் விந்து சிறுபைகள் (ஷிமீனீவீஸீணீறீ ஸ்மீsநீவீநீறீமீs) இவைகள் “வெளிப்பரப்பு” வயதினால் குறையலாம். ஆனால் விந்து தயாரிப்பு தொடரும்.

ஆண் உறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடு

என்ன இருந்தாலும் வாலிபத்திலிருக்கும் பாலியல் செயல்பாடுகள் வயதினால் சிறிதாளாவது குறைவது சகஜம். இயற்கையானது கூட ஆனால் மருத்துவ நிபுனர்கள். கூறுவது வயது மட்டும் காரணமல்ல. ஆரோக்கிய சீர் குலைவு மற்றும் மனோரீதியான பிரச்சனைகள் முக்கிய காரணங்கள் என்பது. 90 சதவிகித ஆண்மை கோளாறுகள் ஆரோக்கிய குறைவு, உடல் நல பாதிப்பால் உண்டாகின்றன. வயதினால் ஏற்படும் பாதிப்பு – ஆணுறுப்புக்கு ரத்தம் பாய்வது குறைந்து விடும்.

இந்து விறைப்பில்லா தன்மை ஏற்பட காரணம், உயர் ரத்த அழுத்தத்திற்காக சாப்பிடும் மருந்துகள் கூட இருக்கலாம். நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களும் ஆண்மைக்குறைவை உண்டாக்கும்.

வயோதிக பாதிப்புக்களை குறைக்க

உடலுறுப்புகளின் வயதினால் தளர்வதை தடுக்க முடியாது. ஆனால் குறைக்கலாம். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற தீவிர வியாதிகளை முற்ற விடாமல் ஆரம்பித்திலேயே உணர்ந்து தற்காப்பு முயற்சிகளை மேற்கொண்டால், பிற்காலத்தில் அவதிப்பட வேண்டாம். வயதானல் ஏற்படும் ஆண்மை குறைகளை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்ளலாம்.

ஒழுக்கமான வாழ்க்கையால் வயோதிக பாதிப்புகளை குறைக்கலாம். சமச்சீர் உணவு, நல்லொழுக்கம், உடற்பயிற்சி, யோகா, தியானம் இவைகளை தவறாமல் கடைப்பிடித்து வந்தால், முதுமையிலும் கம்பீரமாக, மகிழ்ச்சியாக வாழமுடியும். ஆயுர்வேதம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சிகிச்சை முறைகள், பக்க விளைவுகள் இல்லாத ‘சியவனபிராசம்“ போன்ற மருந்துகள் நிறைந்த வைத்திய முறை. ஆயுர்வேதத்தை நாடினால், வயோதிர்களும் வாலிபர்கள் போல் வாழ முடியும்.


Spread the love