கல்லீரல் வலுப்பெற

Spread the love

உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படும்  பொழுது கல்லீரல் என்ற உறுப்பின் மீது அதிகக் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. உங்கள் உடல் பருமனைக் குறைக்க வேண்டும் கொலஸ்டிராலின் அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். இதயத்தின் இயக்கம் வலுவடைய வேண்டும் என்று நாங்கள் விரும்பும் பொழுது அதற்கு ஏற்ப நாங்கள்  தேவையான உடற் பயிற்சிகள், உணவுப்  பழக்க வழக்கங்கள்  மற்றும்  மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறார்கள். உடல் பருமனைக் குறைப்பது, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்கள் வைப்பது மற்றும்  இதயத்தை பலப்படுத்துவது போன்ற உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானது என்று அறிவினைப் பயன் படுத்துவதை பாராட்டும் அதே நேரத்தில் எத்தனை பேர் கல்லீரல் என்ற உறுப்பின் செயல்பாடுகள், ஆரேக்ககியம் பற்றி  தெரிந்து இருப்பதுடன் அதன் ஆரோக்கியத்திற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்றால் மிகச் சிலர் தான் விழிப்புணர்வு பெற்று இருக்கிறார்கள். நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளாகிய இதயம், மூளை, சிறுநீரகங்கள், மூட்டுகள் மற்றும் கண்கள் என்று ஒவ்வொரு உறுப்புகளும் கல்லீரலின் வலிமையான செயல்திறனால், மட்டுமே இயல்பாகவும், சீராகவும், ஆரோக்கியமாகவும் இயங்க இயலும் கல்லீரல் தனது பணியில் திறம்படச் செயல்பட இயலவில்லையெனில் நாம் ஆரோக்கியமான, வலிமையான இதயத்தைப் பெற இயலாது. கல்லீரலானது, செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற இயக்கங்களுக்கு காரணியாக அக்னி ஸ்தானமாக கருதப்படுகிற-து.

கல்லீரலின் இயக்கத்தில் சமநிலைத் தன்மை அல்லது வேறுபாடுகள் காணப்பட்டால் உடல் ஆரோக்கியம் கெடும் மற்றும் உடல் இயக்கங்கள் சரியான அளவில் செயல்பட இயலாமல் போய்விடும். உடலில் உள்ள ‘அக்னியின்’ சமநிலைத் தன்மை இல்லையெனில், எல்லா வியாதிகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது என்று ஆயுர்வேதம் தெளிவுபட கூறுகிறது.

கல்லீரல் செயல்பாடு ஆரோக்கியமாக அமைந்தால் மட்டுமே முழு உடலின் மொத்த இயக்கங்களும், உறுப்புகளும் சீராகவும், வளமையாகவும் இருக்கும் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் ஆரோக்கியமான கல்லீரலைப் பெற்றுள்ளீர்கள் என்பதை எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்? வழக்கமான மருத்துவப்பரிசோதனையும், மருத்துவரின் ஆலோசனை மூலமும் தெரிந்து கொள்ளலாம் இருப்பினும் கல்ல¦ரலை வலுப்படுத்தும், இயற்கை தரும் ஒரு சில மூலிகைகள் என்ன என்பதையும் அறிந்து  கொள்வது நல்லது.

1.தாவரவியல் பெயர்:

பைலாந்தஸ் அமரஸ் தமிழில் கீழாநெல்லி

பயன்கள்:

மஞ்சள் காமாலை, இரப்பைச் சவ்வு அலர்ஜி, நாள்பட்ட இருமல், நாள்பட்ட வயிற்றுப்போக்கு, நாள்பட்ட தாகம் ஈரல் அழற்சி

எவ்வாறு பயன்படுத்துவது?

கீழாநெல்லிச் செடியினை புத்தம் புதிதான ஒன்றை வேருடன் பிடுங்கி எடுத்துக் கொண்டு, சுத்தமான நீரினால் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொண்டு மை போல பசையாக அரைத்துக் கொள்ளவும். மேற் கூறிய கலவையை தயாரிக்கும் பொழுது சிறிதளவு பசுவின் பால் சேர்த்துக் கொள்ளவும். சுத்தமான பருத்தித் துணியின் மூலம் மேற்கூறிய அரைத்த கலவையை வடிகட்டிக்கொண்டு, தினசரி வெறும் வயிற்றில் 30 முதல் 50 மிலி உட்கொண்டு வரவேண்டும.¢

2.தாவரவியல் பெயர்:

ஆலோ வேரா தமிழில்_சோற்றுக் கற்றாழை

எவ்வாறு பயன்படுத்துவது?

சோற்றுக் கற்றாழையின் வெளிப்பக்கத் தோலை உரித்து விட்டு உள் உள்ள சதைப்பற்றுள்ள பகுதியைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். மேற்கூறிய கற்றாழைச் சாறு சுமார் பத்து முதல் இருபது மிலி அளவு எடுத்துக் கொண்டு சிறிதளவு கற்கண்டு,  மஞ்சள் பொடி அல்லது திரிபலா சூரணம் கலந்து உட்கொண்டு வரலாம்.

3.தாவரவியல் பெயர்:

டினோஸ் போரா கார்டிஃபோலியா தமிழ்_சீந்தில்

பயன்கள்:

காய்ச்சல், ஜீரம். குணப்படுத்த பயன்படுகிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

குறைந்த பட்சம் பென்சில் கனமுள்ள புதிதாக பறிக்கப்பட்ட சீந்தில் கொடியின் தண்டுகளை சுமார் இரண்டு அல்லது மூன்று அங்குல நீளமுள்ள அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நன்றாக இடித்து நசுக்கிக் கொண்டு, ஒரு கோப்பை நீர் விட்டு அதனைக் காய்ச்சவும். மேற்கூறிய கொதிக்க வைக்கும் கஷாயமானது பாதியளவாக சுண்டிக் காய்ச்சிய பின்னர் இறக்கி வடிக்கட்டிக் கொள்ளவும். மேற்கூறிய கஷாயத்தை சுமார் 30 முதல் 50 மிலி அளவு எடுத்து தினசரி காலை மாலை என இருவேளை வெறும் வயிற்றில் அருந்தி வர வேண்டும்.

4.தாவரவியல் பெயர்:

ஆன்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா தமிழ்_நிலவேம்பு

பயன்கள்:

மஞ்சள் காமாலை, வாந்தி, கர்ப்பகால குமட்டல் மற்றும் குமட்டல் உணர்வு

எவ்வாறு பயன்படுத்துவது:

புத்தம் புதிய நிலவேம்புச் செடியினை வேருடன் பிடுங்கி எடுத்துக் கொண்டு, சுத்தமான நீரில் அலசிக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சற்று நீர் விட்டு மை போல அரைத்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய கலவையுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து அல்லது நீர் விட்டு கரைத்து கஷாயமாக கொதிக்க வைத்து இறக்கி ஆறவைக்கவும் வடிகட்டிய சாறை தினசரி காலை மாலை சுமார் 50 முதல் 100 மிலி அளவு எடுத்து அருந்தி வரலாம் அல்லது மை போல அரைத்த கலவையை சர்க்கரை அல்லது தேன் கலந்து உட்கொள்ளலாம்.

5.தாவரவியல் பெயர்:

எக்லிப்டா ஆல்பா தமிழ்_கரிசாலை

பயன்கள்:

மஞ்சள் காமாலை, இரைப்பை அலர்ஜி, நீண்ட நாள் இருமல், சருமம் மற்றும் தலை முடிப்பிரச்சனைகள் குணமாகின்றன.

எவ்வாறு பயன்படுத்துவது:

புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட கரிசாலைச் செடியின் அனைத்துப் பாகங்களையும் (வேர், தண்டு, இலை, பூ) சுத்தமான நீர்விட்டு நன்கு அலசி, சிறு சிறு துண்டுகளாக்கிக் கொண்டு சற்றே நீர் விட்டு மை போல அரைத்துக் கொள்ளவும். மேற்கூறிய கலவையை சுத்தமான மெல்லிய பருத்தித் துணியில் வைத்துப் பிழிந்து எடுக்கப்பட்டச் சாறில் சுமார் 30 முதல் 50 மிலி அளவு எடுத்துக் கொண்டு தினசரி காலை வெறும் வயிற்றில் அருந்தி வர வேண்டும்.

6.தாவரவியல் பெயர்:

ஓபெர்குலினா டர்பேதும் தமிழ்_சிவதை;

பயன்கள்:

மஞ்சள் காமாலை, உடல் உள் அழற்சி உடல் பருமன் சார்ந்த பிரச்சனைகளில் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது பெருங்குடல் மற்றும் வாய்வை வெளியேற்ற உதவுகிறது.

எவ்வாறு பயன்படுத்துவது:

சிவதை வேரினை அலசி சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சவும் ஒரு கைப்பிடி அளவு வேர் போதுமானது. ஒரு கோப்பை நீர் விட்டு சுண்டக் காய்ச்சிய பின்பு அரை கோப்பையளவுக்கு வந்த பின்பு இறக்கிக் கொள்ளவும். மேற்கூறிய சிவதை வேர் கஷாயத்துடன் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணம் சேர்த்துக் கலந்து, தினசரி காலை, மாலை என இரு வேளை அருந்தி வர மஞ்சள் காமாலை குணமாகும். இம்மருந்து உட்கொள்ளும் காலம் பால், தயிர,¢ மோர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

7.தாவரவியல் பெயர்:

கிளைச்சிரியா கிளாபிரா தமிழ்_அதிமதுரம்,

பயன்கள்:

ஈரல் அழற்சி, இயற்கை மலமிளக்கி, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, ஆஸ்துமா, அலர்ஜி, வைரஸ் நோய்த் தொற்றுக்கள் போன்றவைகளை குணப்படுத்துகிறது. நுரையீரல் மற்றும் காசம் குணப்படுத்தவும், மன இறுக்கம் சார்ந்த சிக்கலை தீர்க்கவும் பயன்படுகிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

அதிமதுரத்தின் வேரை சுத்தம் செய்து, நிழலில் உலர வைத்து இடித்து, வடிகட்டி பொடி செய்து கொள்ளவும். மேற்கூறிய பொடியினை -சுமார் அரை தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு, ஒரு கோப்பை நீர் விட்டு 5 முதல் (தேனீராகக் தயாரிக்கவும்) 10 நிமிடம் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டிக் கொள்ளவும் மேற்கூறிய தேனீர் பானத்தை தினசரி ஒரு வேளை என ஒரு வாரம் வரை தொடர்ச்சியாக அருந்தி வரவும். ஒரிரு வாரம் இடைவெளி விட்டு விட்டு, மீண்டும் இத்தேனீரை புதிதாக தயாரித்து அருந்தி வரவும்.

8.தாவரவியல் பெயர்:

போயரவியா டிப்பூயூசா தமிழ்_மூக்கரட்டை

பயன்கள்:

சிறுநீர்ப் பெருக்கி, கல்ல¦ரல் செயல்பாடுகளில் முன்னேற்றம் காண உதவுகிறது. மஞ்சள் காமாலை, உள் அழற்சி உடல் வலி, நோய் எதிர்ப்பு ஊக்கியாக, விரைவில் முதுமை அடைவதை தடுக்க உதவுகிறது. மூட்டுகளில் காணப்படும் அலர்ஜி மற்றும் வலியினைப் போக்குகிறது. பாக்டிரியாத் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கிறது.

எவ்வாறு பயன்படுத்துவது:

இதன் சாறு, கஷாயம், ஆவி பிடித்தல் மற்றும் பொடி, நீர் விட்டு மை போல அரைத்த கலவை என பல வித வகைகளில் பயன்பாடாகிறது.

9.தாவரவியல் பெயர்:

விதானியா சோமினிஃபெரா தமிழ்_அமுக்கரா

பயன்கள்:

கல்லீரல் ஆரோக்கியம், நரம்புக்கோளாறுகள், குடல் தொற்றுகள் மற்றும் தொழுநோய் குணப்படுத்துகிறது. மது சாராத கல்லீரல் நோய்களை இது குணப்படுத்துகிறது.

எவ்வா-று பயன்படுத்துவது:

அஸ்வகந்தா சூரணம்/பொடியினை நீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயமாக தயாரித்த அல்லது அஸ்வகந்தா சூரணத்துடன் பால் அல்லது மோர் அல்லது சுத்தமான வெண்ணெய் அல்லது தேன் கலந்து கொள்ள வேண்டும். இதனை தினசரி இருவேளை காலை மாலையென தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் வரை உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தலாம்.


Spread the love