இதய நோய்

Spread the love

இதயநாள் நோய்களுக்கு முக்கிய காரணம் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு தான். எஸ்.டி.எல். கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் பொழுது, அது இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துக் செல்லும். தமனியின் உட்புறச் சுவர்களில் படிகிறது. இவ்வாறு படியும் எஸ்.டி.எல் கொலஸ்ட்ரால், அதிவினை புரியும் ஆக்ஸிஜன் வகைகள் மூலம் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து பின்பு மேக்ரோ பேஜஸ்களால் விழுங்கப்பட்டு போம் செல்களாக இரத்தத் தமனிகளில் படிந்து தமனித் துடிப்பை உண்டு பண்ணுகிறது.

இது மேலும், வளர்ந்து நார்த் தன்மையுள்ள ஒன்றாக மாற்றம் அடைந்து இரத்தம் சீராக செல்வதை தடுக்கிறது. இதனால், இதயத்திற்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் இதயம் சரியாக வேலை செய்வதில்லை. மேலும், தட்டை அணுக்களால் தூண்டப்பட்டு அடைப்பு ஏற்பட்டு, மாரடைபு வரை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதய நோய்களைத் தடுக்கும் உணவுகள் என்ன?

இதய் நோய்களைத் தடுப்பதற்குரிய முக்கியமான விஷயம் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருப்பது அவசியம். கொலஸ்ட்ரால் ஆக்ஸிகரணமடையச் செய்வதைத் தடுத்தும், தட்டை அணுக்கள் ஒன்று சேர்வதைத் தடுத்தும், அழற்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்துடன் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகளை சாப்பிடுவதும் அவசியம். உணவில் உள்ள பல்வேறு தாவர வேதிப் பொருட்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

1.            கேட்டச்சின் என்னும் தாவர வேதிப் பொருள் தேயிலை, கோகோ, ஆப்பிள், கருப்பு திராட்சை, பேரிக்காய், கருப்பு சாக்லேட்டில் உள்ளன.

2.            ஐபோஃபிளேவின் என்னும் தாவர வேதிப் பொருள் சோயாபீன்ஸ், வெண்டைக்காய், நிலக் கடலையில் அதிகம் காணப்படுகின்றன.

3.            ரெஸ்வெரட்ரால் என்னும் தாவர வேதிப் பொருள் சிவப்புத் திராட்சை, சிவப்பு ஒயின், நிலக்கடலை மற்றும் நாவல் பழத்தில் உள்ளன்.

4.            குர்க்குமின் என்னும் வேதிப் பொருள் மஞ்சளில் உள்ளது.

5.            கேப்சைஸின் என்னும் வேதிப் பொருள் குடை மிளகாய், சாதாரண மிளகாயில் உள்ளது.

6.            லைக்கோபின் என்னும் வேதிப் பொருள் தக்காளி, தர்பூசணி, பப்ளிமாஸ், சிவப்பு கொய்யா, பப்பாளியில் அதிகம் உள்ளது.

7.            தாவர சிங்ரால் சோள எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய், ஆலீவ் எண்ணெயில் உள்ளது.

8.            ஒரைசனால் அரிசித் தவிட்டு எண்ணெயில் உள்ளது.

9.            டோகாடிரையினால் ஓட்ஸ், பார்லி மற்றும் அரிசி தவிட்டிலும் காணப்படுகிறது.

10.          கரிம கந்தக வேதிப் பொருட்கள் பூண்டு, வெங்காயத்தில் உள்ளது.

11.          சல்ஃபோரபேன் என்னும் வேதிப் பொருள் முள்ளங்கி, சிவப்பு முட்டைக் கோஸ் மற்றும் புரகோலியில் உள்ளது.

12.          நார்ப் பொருளானது பீன்ஸ், பேரிக்காய், ஓட்ஸ், சோயாபீன்ஸ், கொய்யாப்பழம், ப்ளம்ஸ், பாதாம், பிஸ்தா, ஆப்பிள், நெல்லிக்காய் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது.


Spread the love