சில ஆரோக்கிய உணவு

Spread the love

உணவு நிபுணர்கள் பல சத்துள்ள உணவு வகைகள் ஆரோக்கிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர். இவற்றில் எளிதில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. பீட் – ரூட் கிழங்கு:- இரும்புச்சத்துடன், பொட்டாசியம், சோடியம் மற்றும் மக்னீசியம் அடங்கியது. புற்றுநோயை எதிர்க்கும் காய்கறி.  உண்ணும் முறை – சூடாக்கினால் ஆன்டி – ஆக்ஸிடன்ட் தனிமையை இழப்பதால் கூடிய வரை பச்சையாக உண்பது நல்லது.
  • முட்டை கோஸ்:– சல்ஃபோராபேன் என்ற புற்று நோயை எதிர்க்கும் வேதிப்பொருள் அடங்கியது முட்டைக்கோஸ். விட்டமின் ‘சி’ செறிந்தது. உண்ணும் முறை – காய்கறியாக சமைத்து அல்லது பச்சையாக வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் சமைத்து சாப்பிடவும்.
  • இலவங்கப்பட்டை:– உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரை இவற்றை மட்டுப்படுத்தும்.  உண்ணும் முறை – பொடியாக்கி காப்பி (அ) இதர உணவுகளின் மேல் தூவிக்கொள்ளவும்.
  • மாதுளம் பழச்சாறு:– ‘ஆன்டி ஆக்சிடன்ட்’ பொருட்கள் செறிந்தது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். உண்ணும் முறை – அப்படியே (சாறாக) குடிக்கவும்.
  • பரங்கி விதைகள்:– பரங்கிக்காயின் விதைகள் மிகுந்த சத்துள்ளவை. மக்னீசியம் செறிந்தவை. ஆயுளை நீடிக்கும். உண்ணும் முறை – வறுத்து சாப்பிடலாம். பொடித்து ‘ஸலாட்’ மேல் தூவி சாப்பிடலாம்.
  • மஞ்சள்:- ‘மசாலா’ வில் சிறந்தது. புற்றுநோயை எதிர்க்கும்.

உண்ணும் முறை – முட்டை ஆம்லெட்டில் அல்லது எல்லா சமைத்த காய்கறிகளுடன்.

  • பரங்கிக்காய்:– குறைந்த கலோரிகள் கொண்ட காய்கறி. நார்ச்சத்து  மற்றும் விட்டமின் ‘ஏ’ அடங்கியது.

உண்ணும் முறை – சிறிது வெண்ணை அல்லது லவங்கப்பட்டை, ஜாதிக்காய் சேர்த்து சாப்பிடலாம்


Spread the love
error: Content is protected !!