கர்ப்பிணிகளின் சில சந்தேகங்கள்

Spread the love

அதிக சத்துக்காக எடுத்துக் கொள்ளும் டானிக் மற்றும் மாத்திரைகளால் கருவிலிருக்கும் குழந்தையின் எடை அபரிமிதமாக பெருகி விடும். இதனால் பிரசவம் கடினமாகவும், வலி நிறைந்ததாக ஆகி விடும். குழந்தையின் அளவும் எடையும், பாரம்பரியம், பெற்றோர்களின் உடல்வாகு இவற்றைப் பொருத்தே அமையும். தாய் கர்ப்ப காலத்தில் உண்ணும் உணவுக்கும் குழந்தையின் எடை வளர்ச்சிக்கும் சம்மந்தம் இல்லை.

·இரும்புச் சத்தை உட்கொண்டால் கறுப்பாக குழந்தை பிறக்கும். குழந்தை கறுப்பாகாது ஆனால் அளவுக்கு மீறிய இரும்புச் சத்து தாயை ஒரளவு கருமையாக்கலாம்.

·கால்சியம் தொடர்ந்து உட்கொள்வது நல்லதல்ல. கர்ப்ப காலத்தின் கடைசி 4 வாரங்களின் போது கால்சியம் அளவை குறைப்பது நல்லது. இல்லாவிட்டால் குழந்தையின் எலும்புகளின் வளர்ச்சி அதிகமாகி, பிரசவத்தின் போது சிக்கல்கள் உருவாகலாம்.

கர்ப கால உணவு முறை – 2

வைட்டமின் ரி – (Phylloquinone)

அடிபட்டால் வரும் ரத்தம் உறைய உதவுவது வைட்டமின் ரி – பிரசவத்தின் போது ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு 65 முதல் 80 மைக்ரோ கிராம் தினசரி தேவை. கோதுமை தவிடு, பச்சை காய்கறிகள், கீரை, தக்காளி, காலிஃப்ளவர், சோயாபீன் எண்ணை, தாவிர எண்ணைகள் மற்றும் லிவர்.

தாதுப் பொருட்கள்

உடலுக்கு தேவையான சமச்சீர் உணவுகளில் ஒன்றான தாதுப்பொருட்கள் குறைந்த அளவே தேவைப்பட்டாலும் அதிக பலன்களை தருபவை. கர்ப்பிணிகளுக்கு தேவையான தாதுப்பொருட்கள்.

கால்சியம்

அனைவருக்கு தெரிந்தது – எலும்புகளின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் அவசியமானது கால்சியம். கர்ப்பிணியின் கரு எட்டு வார வளர்ச்சியடைந்த உடனேயே அதன் எலும்புகளும் பற்களும் உருவாக தொடங்கி விடும். பற்களும், எலும்புகளும் உருவாக, உருவாகி வளர கால்சியம் தேவை. கர்ப்பிணிகளுக்கு தினசரி 1000 மி.கி. கால்சியம் தேவை. தேவையான கால்சியம் கிடைப்பதற்கு எளிய வழி பால் குடிப்பது. இரண்டு டம்ளர் பால் குடித்தால் 1200 மி.கி. கால்சியம் கிடைக்கும். கர்ப்பிணிகள் தினமும் அரை அல்லது ஒரு லிட்டர் பால் குடிப்பது நல்லது. கால்சியம் இருக்கும் இதர பொருட்கள், சீஸ், மீன், (Bread), சோயா, வெந்தய கீரை, முருங்கைக் காய், கீரைகள், பீட்ரூட், அத்திப்பழம், திராட்சை, தர்பூசணி, சோளம், தினை, எள், சீரகம், முதலியவை.

பாஸ்பரஸ்

பாஸ்பரஸ்ஸும், கால்சியமும் இரட்டைப் பிறவிகள் போன்றவை. கால்சியமும், பாஸ்பரஸ்ஸும் இணைந்து கால்சியம் பாஸ்பேட்டாக எலும்புகளில் சேர்ந்துள்ளன. பாஸ்பரஸின் தினசரி தேவை 700 லிருந்து 800 மி.கி. பாஸ்பரஸ் செறிந்த உணவுகள் – பால், சீஸ், உலர்ந்த பழங்கள், சோயா பீன்ஸ், பேரீச்சம் பழம், கேரட், கொய்யா, நவ தானியங்கள், முட்டை, மீன், இறைச்சி, கொட்டைகள் முதலியன. 

இரும்பு

இரும்பு கர்ப்பிணிகளுக்கு கட்டாயமாக தேவைப்படும் தாதுப் பொருள். கர்ப்பிணி மட்டுமல்ல, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தேவை. ரத்தத்தின் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபினின் உள்ள முக்கிய பொருள் இரும்பு. உடலின் பாகங்களுக்கு ஆக்சிஜனை கொண்டு சென்று செல்களுக்கு சேர்ப்பதற்கு ஹீமோகுளோபினுக்கு உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு நேர்ந்தால் செல்களுக்கு ஆக்சிஜன் போகாது. கார்பன் – டை – ஆக்ஸைடையும் உடலிலிருந்து வெளியேற்ற முடியாது. ரத்த சோகை ஏற்படும். சிவப்பணுக்களின் ஆயுள் 120 நாட்கள் தான். அவை “இறந்த”வுடன் புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய இரும்பு பயன்படும். தசைகளிலும் இரும்பு மையோகுளோபினாக தசை செல்களின் ஆக்ஸிஜன் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இதைத் தவிர பல முக்கியமான பணிகளுக்கு இரும்புச்சத்து தேவை. சாதாரண சமயங்களில் தேவைப்படும் இரும்புச்சத்தை விட, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரு மடங்கு அதிகம் தேவை. எனவே மகப்பேறு மருத்துவர் இரும்புச்சத்தை தாய்க்கு பரிந்துரைப்பாள். கர்ப்பிணிகள் பலருக்கு இரும்புச்சத்து சாப்பிட்டால் குழந்தையின் எடை கூடி விடும் மற்றும் கருப்பாக பிறக்கும் என்ற தவறான கருத்துகள் உள்ளன. தாயின் உணவில் இரும்புச் சத்து குறைந்தால் குழந்தை மூளை குறைபாடுகளுடன் பிறக்கலாம். எனவே இரும்புச் சத்து நிறைந்த கீரைகள் (குறிப்பாக வெந்தய கீரை, புதினா) பருப்புகள், வெல்லம், பேரீச்சம் பழம், வித்துக்கள், சோயா பீன்ஸ், முட்டை, இறைச்சி (ஈரல்), மீன், முதலியவற்றை உட்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவர் பரிந்துரைத்த இரும்பு மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளுக்கு தினசரி தேவை – 27 மி.கிராமிலிருந்து 38 மி.கி.

இதர தாதுப் பொருட்கள்

மேற்சொன்னவை தவிர, கர்ப்பிணிகளுக்கு தேவைப்படும் இதர தாதுப் பொருட்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

தாதுப் பொருள் பயன் தினசரி தேவை இருக்கும் உணவுப் பொருட்கள

1. மக்னீசியம்          எலும்பு, பற்கள் உருவாக உதவுகிறது. நரம்பு தசைகளின் நார்மல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. என்ஜைம்களை ஊக்குவிக்கிறது. 280 மி.கி. லிருந்து 320 மி.கி. வரை    பால், தானியங்கள், கொட்டைகள், கீரை, உலர்ந்த பழங்கள், இறைச்சி.

2. அயோடின் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு தேவை.    0.14 மி.கி. அயோடின் கலந்த உப்பை உபயோகித்தாலே போதும். கடல் மீன்கள், பச்சைக் காய்கறிகள், (முட்டைக்கோஸ், காலிஃப்ளவர்)    

3.  துத்தநாகம்    ஆரோக்கிய சர்மத்திற்கு, காயங்கள் ஆறுவதற்கு மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவை.  8 முதல் 15 மி.கி.  மாமிச உணவுகள் (லிவர்), கடல் உணவுகள், முட்டை.  

5.   சோடியம்   உடலின் நீர்மச்சத்துக்களின் அளவை சீரகாக வைப்பதில், நார்மல் நரம்பு தசை செயல்பாடுகளுக்கும் தேவை. 1000 மி.கி.  உப்பு, மாட்டு மாமிசம், சீஸ், உருளை, சிப்ஸ், கடல் உணவுகள்.         

6.  பொட்டாசியம்     சோடியத்துடன் இணைந்து செயல்படுகிறது.  3.5 கிராம்  பால், வாழைப்பழம், தக்காளி, ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, கீரைகள், உலர்ந்த திராட்சை.       

மேற்கண்ட பட்டியலைத் தவிர, செம்பு, செலீனியம், ஃப்ளோரின், மாலுப்டீனம், கோபால்ட் போன்ற பல தாதுப்பொருட்கள் குறைந்த அளவில் கர்ப்பிணிகளுக்கு தேவைப்படும்.

வைட்டமின்களும் சரி, தாதுப்பொருட்களானாலும் சரி, தேவையான, சரியான அளவுகளை மீறக்கூடாது. இவற்றின் குறைபாடுகள் உண்டாக்கும் கெடுதியைப் போலவே அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டாலும் ஆபத்து தான். எனவே எல்லா சத்துக்களும் சரிவர கிடைக்க, உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்கவும். நீங்களாகவே அல்லது வீட்டில் உள்ளவர்கள் சொல்படி மருந்துகளையோ, டானிக்குகளையோ எடுத்துக் கொள்ள வேண்டாம்.


Spread the love