மிகு எடையைக் குறைப்பதற்காக உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பலர் உணவு வேளை நெருங்க நெருங்க ஒருவிதமான பதட்டத்திற்கு உள்ளாகின்றனர். இது ஒரு தேவையற்ற மனத் தவிப்பு. நன்கு வசதியாக உட்கார்ந்து கொண்டு மூச்சை நன்கு இழுத்து விடுங்கள். உடல் தசைகளைத் தளரவிடுங்கள். லேசாகச் சோம்பல் முறியுங்கள். இதே நிலையில் சிறிது நேரம் இருந்த பிறகு மெதுவாக எழுந்திருங்கள். ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து உணவு மேஜை அருகில் செல்லுங்கள்.
அங்குள்ள நாற்காலியில் அமர்ந்ததும் மிகவும் கவனமாகச் செய்ப்படுகின்ற ஒரு சடங்கு போல் மெதுவாக உண்ணுகின்ற தட்டைக்கையில் எடுத்து அதில் தண்ணீர் சொட்டு ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். தண்ணீர் சொட்டு இருந்தால் தட்டைச் சாய்த்து நீரை கீழே விழச் செய்து விட்டு தட்டை மேஜை மேல் வையுங்கள். இலையில் உண்ணுவதாக இருந்தால் சில துளிகள் தண்ணீரை இலையின் மேல் தெளித்து இலையைக் கவனமாகச் சுத்தம் செய்யுங்கள். கைத்துண்டில் கையைத் துடைத்துக் கொள்ளுங்கள். டம்ளரில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை எடுத்து மெதுவாக இரண்டு வாய் குடியுங்கள். மிகு நிதானமாகத் டம்ளரைக் கீழே வையுங்கள்.
முதல் கவளம் உணவை எடுத்து வாயிலிட்டதும் மெதுவாக மெல்லுவதடறகுத் தொடங்குங்கள். நீங்கள் சற்று அதிகமாக மெல்லுகிறீர்கள் என்று அடுத்து உட்கார்ந்திருப் பவர்களுக்குத் தெரிந்தாலும் பரவாயில்லை. நன்கு மென்ற பின்னரே உணவை விழுங்குதல் வேண்டும்.
இரண்டாம் கவளத்தைக் கையில் அள்ளும் முன்னர் முதல் கவளம் முழுவதும் விழுங்கப்பட்டுவிடது என்று உறுதி செய்து கொண்டாக வேண்டும். அதன் பிறகு தான் இரண்டாவது கவளத்தை அள்ளி வாயினுள் இட வேண்டும்.
உணவு உட்கொள்ளும் மேஜைக்கு அருகில் முகம் பார்க்கும் பெரிய கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நிதானமாக, மென்று, சுவைத்து உண்ணுகின்றீர்ளா என்பதை இந்தக் கண்ணாடி உங்களுக்குக் காட்டிவிடும்.
கூடியவரை உண்ணுகின்ற செயல் மிகவும் மெதுவாக நடைபெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து உங்கள் தட்டில் இட்டுக் கொள்வது, சாம்பார் சாதத்தை முடித்து ரசத்திற்குச் சாதம் போட்டுக் கொள்வது, தயிர் போட்டுக் கொள்வது இடையிடையே தண்ணீர் குடிப்பது இது போன்ற காரியங்களை அவசரமே இல்லாது மிகவும் நிதானமாகச் செய்யுங்கள். இவ்வாறு செய்கின்ற போது உங்கள் உணவை நன்கு சுவைத்து உண்பதையும், நீங்கள் குறைவாகவே உண்டிருப்பதையும் உணருவீர்கள்.
உண்ணும் முறை விழிப்புணர்வு
உணவு மேஜையின் முன்பு நாற்காலியில் உட்கார்ந்தும் மூச்சைச் சீராகவும், மெதுவாகவும், நன்கு உள்ளிழுத்தும் சுவாசியுங்கள். மூச்சுப் பயிற்சி செய்வது போல் அதில் கவனம் செலுத்துங்கள். அப்போது உணவின் மீதுள்ள உங்கள் கவனம் குறையும்.
கண்களைச் சிறிது மூடிய வண்ணம் அமைதியுடன் இருந்து உணவுகளிலிருந்து வருகின்ற இனிய மணத்தை மூக்கினால் நன்கு வாங்கிக் கொள்ளுங்கள். வாயில் உணவையிட்டதும் மெல்லத் தவங்குங்கள். முதலில் வாயின் இடப்பக்கம் மெல்லுங்கள். பின்னர் வலப்பக்கம் மெல்லுங்கள். நன்கு மென்ற பிறகு விழுங்குங்கள்.
உணவை வாயினுள் இட்டதுமே மென்று விழுங்கி விடாதீர்கள். உணவை வாயினுள் சிறிது நேரம் வைத்திருங்கள். வாயின் இருபுறத்திலும் மேலண்ணத்திலும் உணவு படுமாறு செய்யுங்கள். அதுவரை மெல்லுவதைத் தாமதப்படுத்துங்கள். ஒவ்வொரு கவளம் உணவும் உங்கள் வாயினுள் பல வினாடிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் உண்ணுகின்ற போது அன்போடு உரையாடுங்கள். உண்ணுவதைச் சிறிது நேரம் நிறுத்தி விட்டு அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனியுங்கள். சிக்கலான மற்றும் உண¬ச்சிவசப் படக்கூடிய பேச்சுக்களைத் தவிர்த்து விடுங்கள்.
உணவை முடித்து எழுகின்ற போது உணவுக்காக நீங்கள் எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு என்று பாருங்கள். ஒவ்வொரு நாளும் இதைச் சிறிதளவேனும் நீட்டிக்க முயலுங்கள்.
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் இதனால் எல்லாம் எடை குறைந்துவிடுமா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக இதனால் பலன் கிடைக்கும். இந்த முறைகளைப் பின்பற்றுகின்ற போது எடை குறைவதோடன்றி வேறு பல நன்மைகளும் ஏற்படும்.
இந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெறுகின்ற போது நீங்கள் அளவோடு உண்ணவும் அழகாக உண்ணவும் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இது தவிர மிகு உடல் எடை குறைப்பு என்பதை உணவுக் கட்டுப்பாடின்றி ஒரு நாளும் சாதிக்க இயலாது என்பதையும் உணருவீர்கள்.
முடிவாக ஒரு செய்தி. மிகப் பழைய செய்தி என்றாலும் அதை இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும். உங்கள் உணவை முடித்ததும், உணவு மேஜை அருகே ஒரு நொடியும் உட்காராதீர்கள். உடனே எழுந்து விடுங்கள். இதற்கு மிகுந்த மன உறுதி வேண்டும். உணவு முறைப் பயிற்சிகளிலெல்லாம் இதுவே மிகமிக அவசியமான பயிற்சி.
உடல் திறன் நிலை
உண்டு/இல்லை
ஒன்று அல்லது இரண்டு மாடி ஏறியதும் மூச்சு வாங்குகிறதா?
இலேசான உடலுழைப்பைச் செய்தல் கூடக் களைப்படைந்து
விடுகிறீர்களா?
உங்கள் பொழுது போக்கு டி.வி, சினிமா, பத்திரிகைகள் இவற்று
டன முடிந்து விடுகிறதா?
என்றாவது ஒரு நாள் உடற்பயிற்சி செய்துவிட்டு அதனால்
அவதியுறுவதுண்டா?
சிறிது நேரம் வெளியே போவதென்றால்கூட கார், ஸ்கூட்டர்
முதலியவற்றை நாடுவீர்களா?
நீங்களே செய்யக்கூடிய சிறிய வேலைகளுக்குக் கூட
வேலைக்காரர்களை அழைப்பீர்களா?
டெலிபோனை மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றவரா?
உலாவச் செல்லுதல், தோட்ட வேலை செய்தல் போன்றவற்றைக்
கூட தவிர்க்க முயல்பவரா?
உங்களது தினசரி அலுவல்கள் மாலை 7 மணிக்கு முன் முடி
வடைந்து விடுகிறதா?
உணவில் நாட்டம் மிக உள்ளவரா?
இவற்றில் 6 கேள்விகளுக்கு மேல் ஆம் என்ற விடை வந்தால் இப்போதே நீங்கள் மிகு உடல் எடை கொண்டவராக இருப்பீர்கள் அல்லது வெகுவிரைவில் மிகு உடல் எடை கொண்டவராக ஆகின்ற வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.