ஓட்ஸ், தயிர், வாழைப்பழம் அதோடு கொஞ்சம் கிரீன் டீ……

Spread the love

உடலை ஆரோக்கியமாக  வைத்திருக்க தினமும் நிறைய உணவு குறிப்புகள் தெரிந்துகொண்டு வருகிறோம். அதில் சில உணவுகள் அனைவராலும் வாங்கி பயன்படுத்த முடியவில்லை. ஆனால் இந்த ஓட்ஸ், தயிர், வாழைப்பழம், கிரீன் டீ இவையனைத்தும் மிகவும் எளிமையாக கிடைக்கும். 

கிரீன் டீயை கடையில் வாங்கி குடிப்பதை விட வீட்டிலேயே தயாரித்து குடிக்கலாம். தயிரில் இருக்கும் புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட், உடலுக்கு புத்துணர்ச்சியை தந்து களைப்பை நெருங்க விடாது. தினமும் ஒரு வேலை உணவில் தயிர் சேர்த்துக்கொள்ளலாம். தயிரில் இருக்கும் புரோபயோடிக் செரிமானத்தை சீராக வைக்க உதவும்.

அடுத்து வாழைப்பழம், களைப்பை விரட்ட கூடிய ஆற்றல் வாழைப்பழத்தில் இருக்கிறது. இதில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, நார்சத்து, கார்போஹைட்ரேட், ஒமேகா 3 மற்றும் இதில் இருக்கும் கொழுப்பு அமிலம், உடல் சோர்வை நீக்குவதோடு, மனசோர்வையும் நீக்கி, உடலுக்கு தெளிவான ஆற்றலை வழங்குகிறது.  குறிப்பாக இரவு சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். 

காலை உணவிற்கு அதிசிறந்த உணவு ஓட்ஸ். இது மூளைக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் வழங்கும். இதில் இருக்கும் புரோட்டீன், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உடல் ஆற்றலை அதிகரிக்கிறது. ஓட்ஸ் சாப்பிட்டு அந்த நாள் முழுவதும் சோர்வே இல்லாமல் இருக்கலாம்.செரிமான அமைப்பை சரி செய்து வயிற்று கடுப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். 

உணவில் எந்த ஏற்றத்தாழ்வு இருந்தாலும், அந்த நாளின் முடிவிலே சோர்வுக்கு முடிவு கட்ட, ஒரே ஒரு கிரீன் டீ குடித்தால் சோர்வு நீங்கிவிடும். இதில் இருக்கும் பாலிஃபினால் Stress விரட்டி, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. முடிந்தால் கிரீன் டீயில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டு வர உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கலாம்.  



Spread the love