பெண்கள் ஆரோக்கியத்திற்கு உதவும் சிறந்த உணவுகள்….!

Spread the love

பொதுவாகஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. காரணம்வீடு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் அசுத்தங்களை சுத்தமாக்கும்வேலைகளை பெரும்பாலான பெண்கள் செய்கிறார்கள். அதோடு அவர்களுக்கு தேவை வலிமை…இதற்கு தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், இதில் இருந்து கிடைக்க கூடிய Flavoringமற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட் உங்கள் உடலிற்கு தொற்றுகளால் உருவாககூடிய நோய்களுக்குஎதிராக போராடகூடிய திறன்களை உங்களுக்கு கொடுக்கின்றது.


அடுத்துதேவை இரும்புசத்து, இது சிறிய உணவுகளாக இருக்ககூடிய பயிறு வகைகளில்நிறைந்திருக்கும். இதில் கலோரிகள் குறைவாகவும் இரும்புசத்து அதிகமாகவும் இருக்கின்றது.அதனால் கொழுப்பு பற்றி கவலை இல்லை. இது அதிகமான பெண்களுக்கு ஏற்படும் அனேமியாஎன்று சொல்லகூடிய ரத்த சோகை வராமல் தடுக்கின்றது. அடுத்து ப்ரோக்கொலி இதில்இருந்து வைட்டமின் சி, சருமத்தை பாதுகாப்பதோடு உடலிற்கும் உயிர் சத்தாகஅமைகின்றது.
இதில்இருக்கும் பீட்டா-கரோட்டீன் நமது தோலில் இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்களைஉருவாக்குகின்றது. அதனால் ப்ரோக்கோலியையும் சாப்பிட்டு வருவது நல்லது.

அடுத்து உங்களுக்கு தேவை கொழுப்பை எதிர்க்கும் ஊட்டச்சத்து உருளைகிழங்கில் இருக்கும் ஸ்டார்ச்சத்து, உங்கள் எடையை சீரான அளவில் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல்இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தி, இதய கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கின்றது.அதனால் அன்றாட உணவில் உருளைகிழங்கை எடுப்பது நல்லது. பெண்களின்ஆரோக்கியத்திற்கு அதிக ஊட்டச்சத்துகள் தேவைப்படுகிறது. அது பச்சை கீரைகளில்அதிகமாக இருக்கின்றது.

அதனால் உங்கள் உணவு பட்டியலில் கீரைகளையும் சேர்த்துகொள்ளவும். இதில் உள்ள வைட்டமின் கே, மினரல்ஸ், கால்சியம் மற்றும் மெக்னீசியம்  பெண்களின் எலும்புகளை உறுதியாகவும்,வயதாகும்போது ஏற்படகூடிய எலும்பு பிரட்சனைகளையும் தடுக்க உதவுகிறது. அதனால் இந்தஎளிய உணவுகளோடு சாக்லெட், கேன்சர் செல்களை அழிக்க கூடிய மஸ்ரூம், மீன், வெண்ணெய், குடைமிளகாய்இவையனைத்தையும் சாப்பிட்டு வருவது நல்லது.    


Spread the love