பெண்மை போற்றப்பட வேண்டிய தன்மை. பெண்கள் பல பொறுப்புகளை சுமக்கின்றனர். மகளாக, மனைவியாக, தாயாக என்று பல ரூபங்களை எடுக்கும் பெண்ணிற்கு, அதிகப்படி சத்து உணவுகள் தேவை. பூப்பெய்திய பருவம், கர்ப்ப காலம், பாலூட்டும் காலம், நிரந்தரமாக மாதவிடாய் நிற்கும் காலம் இந்த ஒவ்வொரு நிலையிலும் பிரத்தியேக உணவுகள் தேவை. இன்றைய கால பெண்மணிகளுக்கு ஏற்படும் பொதுக்கோளாறுகள் களைப்பு, மனச்சோர்வு மற்றும் உடல் வலி. இவை வேலைக்கு செல்லும் பெண்களை மட்டுமல்ல இல்லத்தரசிகளையும் பாதிக்கின்றன.
களைப்பு
ஒயாத உடலுழைப்பு, ஓய்வில்லாத வாழ்க்கை இதன் காரணங்கள். இந்த ஆயாசம் தொடர்ந்திருந்தால் வைத்தியரை அணுகுவது உசிதம். ஒயாத ஆயாசம் வரப்போகும் நோய்களுக்கு அறிகுறியாக இருக்கலாம். நீரிழிவு, சோகை, இதய நோய்கள், சிறுநீரக கோளாறுகள் முதலிய நோய்கள் ஏற்படும் என்பதின் முன் அறிவிப்பாக தீராத களைப்பு இருக்கலாம். போஷாக்கற்ற உணவுகளும் களைப்பை உண்டாக்கும். எப்போதும் சுணங்கியிருப்பது, ஜுர உணர்வு, வேலையில் கருத்தின்மை இவைகளும் காரணமாகலாம்.
களைப்பை களையும் உணவுகள்
பெண்கள் சோர்ந்து, களைப்படைய முக்கிய காரணம், அவர்களின் மாதாந்திர போக்கினால், இரத்தத்தை இழப்பது. ரத்தத்தை விருத்தி செய்யும் உணவுகள். பேரீச்சை, உலர்ந்த கருப்பு திராட்சை, மாதுளம் பழம், கேரட், பீட்ரூட், பசலைக்கீரை, கொத்தமல்லி, மட்டன் (அ) சிக்கன் சூப், பயத்தம் பருப்பு, பசுவின் பால், தயிர், வெண்ணெய் பசும் நெய், குங்குமப்பூ, தேன், ஆப்பிள், ஆரஞ்சு முதலியன. உணவுடன் பால் அருந்த வேண்டாம். ஜீரணம் பாதிப்படையும். காபி, டீயை குறைக்கவும்.
உடல் வலிகளுக்கான சில உணவுகள்
பாதாம் முதலிய கொட்டைகள், கீரைகள், முழுத்தானியங்கள், ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு முதலியன.
மனச்சோர்வு
தன்னை மற்றவர்கள் நிராகரித்து விட்டார்கள் என்ற சுய பரிதாபம், விரக்தி இவை மனச்சோர்வுகள். எல்லா செயல்களிலும் தீமையையே எதிர்நோக்குதல், தனிமைப்படுத்திக் கொள்வது முதலிய நெகடிவ் சிந்தனைகள் அலை மோதும். மனச்சோர்வுக்கு, சத்துணவு குறைபாடு தான் காரணம் என்கிறது ஆயுர்வேதம். நல்ல உணவு, ஒழுக்கமான, கட்டுப்பாடான தினசரி நியமங்களை செய்தல், உடற்பயிற்சி முதலியன மனச்சோர்வை எதிர்கொள்ளும் ஆற்றலைத் தரும்.
மனச்சோர்வடைந்த பெண்களுக்கேற்ற உணவுகள்
கம்பு
கடலைப்பருப்பு
உளுந்து
சோயாபீன்ஸ்
அரிசித் தவிடு
இளம் சோளம்
பார்லி
அரிசி
வாழைப்பழம்
பசும்பால்
பசுநெய்
மோர் (தயிர் வேண்டாம்)
அங்கக மாமிசம்
ஆட்டு லிவர்
சிக்கன் லிவர்
ஆட்டு இறைச்சி
மீன்
கோதுமை மாவு
பாதாம், வால்நட் பருப்புகள்
தேங்காய்
சாத்துக்குடி, ஆரஞ்சு பழச்சாறுகள் (தேனுடன்)
கொய்யாப்பழம்
கருமிளகு
சுக்கு
சீஸ்
கோழி முட்டை
வேர்க்கடலை
சூரியகாந்தி எண்ணெய்
உலர்ந்த அத்திப்பழம்
காரணங்கள்
ஹார்மோன்கள் கோளாறு
கர்பப்பையில் ஃபைராய்ட்
கர்பப்பை கழுத்தில் பாலிப்ஸ்
கர்பப்பை சுவற்றில் பாலிப்ஸ்
இடுப்பெலும்பு கூட்டில் தோன்றும் தொற்றுநோய்கள்
கர்பப்பை கழுத்தில் உண்டாகும் புற்றுநோய்
குடும்பக் கட்டுப்பாடு லூப் போன்றவை
சில ரத்தக் கோளாறுகள்
மாதவிடாய் உதிரப்போக்கு குறைவு (அ) இல்லாமல் போவது
அமிநோரியா – மாதவிடாய் ஏற்படாமலே போவது. சிலருக்கு 30 வயதிலேயே மெனோபாஸ் ஏற்பட்டு விடும்.
அனோரெக்சியா நர்வோசா – எனும் உணவு விரும்பாமை நோய், ஹார்மோன்கள் கோளாறு, அதிக உடல் பருமன் முதலியன காரணமாகலாம்.
மாதவிடாய் வரும் முன் ஏற்படும் உபாதைகள்
இதன் அறிகுறிகள்
மார்பகங்கள் மிருதுவாக மென்மையாகி விடுவது
முதுகு (அ) அடிவயிறு வலி
மனச்சோர்வு
தலைவலி
அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றங்கள்
ஆயாசம்
உடல் எடை கூடுதல்
காரணங்கள்
சில பெண்கள சிறு அளவு ஹார்மோனைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் போகும் நிலை.
தேவையான அளவு போஷாக்கின்மை
தொற்றுகள்
டிஸ்மெனோரியா
வலி வேதனையுடன் கூடிய மாதவிடாய்
அறிகுறிகள்
அடிவயிற்றில் வலி, இசிவு, இந்த வலி தொடைகளுக்கும், கீழ் முதுகுக்கும் பரவும்.
வலியுடன் கூடிய வாந்தி, பிரட்டல், பேதி, மலச்சிக்கல், தலை சுற்றும் உணர்வு. இந்த வலி இரண்டு (அ) மூன்று நாட்களுக்கு தொடரலாம்.
டீன் – ஏஜ் பருவத்திலுள்ள மங்கைகளுக்கு வலி அதிகம் இருக்கும்.
காரணங்கள்
பரம்பரை
அதிகமான உடற்பயிற்சி
அதிக காரமான மசாலா செறிந்த உணவுகளை உட்கொள்ளுதல்
உணவு முறை
வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்கவும்
மாதவிடாய் சுழற்சியின் கடைசி வாரம் முக்கியமானது
இந்த வாரத்தில் ஜீரணிக்க கடினமான சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மஞ்சள் பரங்கிக்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் இவற்றை தவிர்க்கவும்.
வெள்ளை பரங்கிக்காய், பப்பாளி, முருங்கைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய் இவைகளை எடுத்துக் கொள்ளலாம்.
பூண்டு மிகவும் நல்லது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.