Tuberculosis-ன் சுருக்கமான பெயர் தான் TB. 2௦-ம் நூற்றாண்டில் அதிக உயிரிழப்பிற்கு காரணம் இந்த காசநோயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. TB-க்கு காரணம் மைக்கோபாக்டீரியம் டியூபெர்குளோசிஸ் என்ற பாக்டீரியா தான். இது முதலில் நுரையீரல் affeet செய்து அப்படியே படிப்படியாக உடலில் இருக்கும் மற்ற பாகங்களையும் தாக்கும். இதன் ஆரம்பத்தில் இருமும் போது இரத்தம் வெளிப்படும். தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு மேல் இந்த பிரட்சனை இருப்பது, பலவீனம், மார்புவலி, காய்ச்சல், உடல்மெலிவு, இரவில் வியர்த்து போவது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
இப்போது கூறும் உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம் என்றால், வாழ்நாள் முழுக்க காசநோய் நெருங்க விடாமல் பார்த்துகொள்ளலாம். காசநோயின் தீவிரத்தை குறைக்க விட்டமின் D உணவுகளான மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டை அவசியம். இந்த விட்டமின் D, TB பாக்டீரியாக்களால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்குவதை தடுக்க முடியும். TB செல்கள் ஏற்படவும், விட்டமின் D-யின் குறைபாடும் காரணம்.
அடுத்து கிரீன் டீ, இதை தயாரிக்கும் போது அதில் ஒரு டீஸ்பூன் தேனை சேர்க்கவும், கிரீன் டீ–யில் இருக்க கூடிய பாலிப்பெனோல்ஸ், Tuberculosis பாக்டீரியாவை அழிக்க கூடிய நம்பகத்தன்மையை கொண்டிருக்கின்றது. தினமும் இரண்டு முறை கிரீன் டீ குடித்து வாருங்கள். காசநோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, இல்லை அதற்கென்று சோதனை எடுத்தாலும் அந்த சிகிச்சையோடு, காலை வெறும் பூண்டு பற்களை மென்று சாப்பிட்டு வரவேண்டும். இதில் இருக்கும் Anti microbial Properties ஆன அலிசின் TB பாக்டீரியாவை வளர விடாமல் அழிக்கும். இந்த கசப்பான சுவையோடு தினமும் 2 ஆரஞ்சு பழச்சாறு குடித்தால் மிகவும் நல்லது.
அதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் இந்த வியாதிக்கு நல்ல மருந்து. இதில் இருக்கும் வைட்டமின்ஸ் மாறும் மினரல்ஸ் இருமலை கட்டுபடுத்தும், அதி சீக்கிரமாகவே காசநோயில் இருந்து விடுபடலாம். இதே முறையில் நெல்லிக்காய் ஜுஸ், வால்நெட்ஸ் மிளகோடு எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடித்து வரும் கசாயம் TB-யை விரைவில் குணமாக்கும்.