சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டடியவை

Spread the love

சர்க்கரை நோய் தொல்லை தரும் நோய்களில் ஒன்று. முற்றிலும் குணப்படுத்த முடியாத வியாதியான நீரிழிவை கட்டுப்பபாட்டில் வைக்க முடியும். அதற்கு முக்கிய தேவைகள் – மருந்துகள் மற்றும் உணவு, நீரிழிவிற்கு மருந்துகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உணவு. அதுவும் பத்திய உணவு.

சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணம் கணையம் இன்சுலீனை சுரக்க இயலாமல் போவது. இதனால் சர்க்கரை (க்ளூகோஸ்) சக்தி உடலில் சேராமல் போய் ரத்தத்தில் தங்கி விடும். ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

சர்க்கரை நோயில் இரு அடிப்படை பிரிவுகள் உள்ளன. தினமும் கட்டாயமாக இன்சுலீனை ஊசி மூலம் ரத்தத்தில் ஏற்றி கொள்ளும் நிலைமையான டைப் – 1 ஒன்றும், மாத்திரைகளாலேயே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தப்படும் நிலைமை டைப் – 2 என்றும் சொல்லப்படுகிறது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாட்டின் அவசியம் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதொன்று. உடல் பருமன் அளவுக்கு மீறி இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம்.

சர்க்கரை, இனிப்பு வகைகள், தேன், வெல்லம், ஜாம், தேங்காய் சட்னி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய், டால்டா, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, பூஸ்ட், கோகோ கோலா, பெப்ஸி, லிம்கா, மால்ட்டோவா, ஃபேண்டா போன்ற பானங்கள், டின், புட்டிகளில் விற்கும் பழச்சாறு கூடாது. வேர்க்கடலை, பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, உலர்ந்த பழங்கள், கேக், ஈரல், மூளை, ஆட்டுக்கால், மாம்பழம், அன்னாசிப்பழம், சப்போட்டா, சீதாப்பழம், பலாப்பழம், திராட்சை ஆகியவற்றை தவிர்க்கவும்.

நிறைய சேர்க்க வேண்டிய காய்கறிகள்: வாழைத்தண்டு, முள்ளங்கி, முட்டைகோஸ், வெண்டை, பீர்க்கை, வெள்ளைப்பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், காராமணி, கொத்தவரை, அவரை, பீன்ஸ், வெங்காயம், முருங்கை, நூல்கோல், வெள்ளரிக்காய், தக்காளி, கத்தரிக்காய், காலிஃபிளவர், பரங்கி, குடைமிளகாய், கோவைக்காய், டர்னிப், சௌசௌ.

சேர்க்க வேண்டிய கீரை வகைகள்: முருங்கை, மணதக்காளி, பசலை, கொத்தமல்லி, புதினா, சிறுகீரை, பருப்பு கீரை, அகத்தி கீரை, முளைக்கீரை, புளிச்சகீரை.

மிதமாக வாரம் ஒரு முறை சேர்க்கக் கூடிய காய்கறிகள்: பட்டாணி, சுண்டைக்காய், கேரட்.

மாதம் இருமுறை சேர்க்கக் கூடிய காய்கறிகள்: கிழங்கு வகைகள், சேனை, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, பலாக்கொட்டை, வாழைக்காய், டபுள்பீன்ஸ் விதை போன்ற வகைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு.

தினமும் சேர்க்கக் கூடிய பழ வகைகள் ஏதாவது ஒன்று மட்டும்: (சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்)

1/2 ஆப்பிள், 1 சாத்துக்குடி, பச்சை வாழைப்பழம் 1/2 மட்டும், தக்காளி 1 சிறியது, கொய்யாப்பழம் சிறியது 1, மலைவாழைப்பழம் 1, ஆரஞ்ச் 1.

வாரம் ஒரு முறை சேர்க்கக் கூடிய பழங்கள்: (சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்)

பச்சை திராட்சை 10 லிருந்து 15, பப்பாளி, தர்பீஸ், கிர்ணிபழம் – 100 கி, மாதுளை 1.

தாராளமாக சேர்த்துக் கொள்ளக் கூடியவைகள்: வெள்ளரி, எலுமிச்சம்பழம், மோர், வெஜிடேபிள் சூப், உப்பிட்ட ஊறுகாய் (எண்ணெய் இல்லாமல்)

பயன்படுத்தக் கூடிய எண்ணெய்கள்: நல்லெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ரீஃபைண்ட் எண்ணெய்.

அசைவம் சேர்த்துக் கொள்ளக் கூடியவைகள்: முட்டை 1 (வெள்ளைக் கரு 2 மட்டும்), மீன் 2 துண்டு அல்லது கோழிக்கறி ( தோல் நீக்கியது) 100 கிராம் (5 துண்டு) அல்லது ஆட்டுக்கறி 100 கிராம் ( 5 துண்டு).


Spread the love