சிறுநீரகத்தைப் பாதுகாக்கும்உணவு முறை

Spread the love

நம் உடலில் முக்கியமானது சிறுநீரை வெளியேற்றும் பாகங்களான சிறுநீரகம், உவரிப்பை, சிறுநீரகங்களிலிருந்து உவரிப்பைக்கு சிறுநீரை கொண்டு செல்லும் (25 – 30) செ.மீ. நீளமுள்ள இரண்டு நீர் தாரைகள் குழாய்கள் மற்றும் உவரிப்பையிலிருந்து சிறுநீரை வெளிக்கொண்டு செல்லும் பாதை யுரித்ரா ஆகும். பாக்டீரியா தாக்கினால் கீழ்க்கண்ட உபத்திரவங்கள் உண்டாகும்.

அடிக்கடி சிறுநீர் கழிதல்

சிறுநீர் கழிக்கையில் உவரிப்பை, யுரித்ரா பாதைகளில் வலி

சிறுநீர் போகையில் எரிச்சலும், கடுப்பும் (நீர்க்கடுப்பு),குளிர் ஜுரம்

சிறுநீர் பரிசோதனையில் அதிக அளவில் சீழ் செல்கள், சிறிது இரத்தமும் காணப்படுதல்

இந்த உபாதைகளால் பெண்களே ஆண்களைவிட அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். காரணம் பெண்களின் சிறுநீர் தாரை அகலமாகவும், குறைந்த நீளமுடையதாக (3.5 செ.மீ.) இருப்பது தான். ஆண்களின் நீர்தாரை 20 செ.மீ. நீளமுடையது.

வீட்டு வைத்தியம்

தினம் 8 – 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மூத்திரக்காய்கள் கிட்னி தாம் உடலின் வடிகட்டிகள். நாம் குடிக்கும் தண்ணீரில் 60 சதவிகிதம் அவற்றின் வழியாகத்தான் செல்ல வேண்டும். தண்ணீர் தொற்றுநோய் பாக்டீரியாக்களையும் இதர நச்சுப் பொருட்களையும் வெளியேற்றும்.

கால் டம்ளர் வெங்காய சாறுடன், 1 தேக்கரண்டி சர்க்கரை கலந்து தினமும் குடிக்கவும். எரிச்சல் குறையும். அரை தேக்கரண்டி ஜீரகம் (பொடித்தது) 1 தேக்கரண்டி சர்க்கரை கலந்து தினம் இரு வேளை சாப்பிடலாம்.

25 மி.லி. முள்ளங்கி சாறை இரு வேளை தினமும் குடிக்கவும். ஒரு கோப்பை கொதிநீரில் அரையளவு எலுமிச்சை பழச்சாறு, ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும். ஒரு நாளைக்கு மூன்று கோப்பை இந்நீரை பருகினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இளநீர் குடித்தால் சாதாரண நீர்கடுப்பு உடனே சரியாகும். உணவும் வாழ்க்கை நெறியும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். இளநீர், பார்லி தண்ணீர், எலுமிச்சை பழ சர்பத் போன்றவைகளையும் சேர்த்துக் கொள்ளவும்.

காரசார உணவுகள், எண்ணை அதிகமுள்ள உணவுகள், டீ, காபி, மிளகாய் போன்றவைகளை தவிர்க்கவும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரகங்களில் கற்கள் தோன்றுவது இந்தியாவில் (குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில்) அதிகமாக காணப்படும் பிரச்சனை. இந்த கற்கள்சிறுநீரில் தென்படும் யூரிக் அமிலம், பாஸ்பேட்டுகள், கால்சியம், ஆக்ஸாலிக் அமிலம் இவற்றால் ஆனவை. 90 சதவிகித கற்கள் கால்சியத்தால் உருவானவை. இந்த கற்களின் அளவு மணல்சைஸிலிருந்து ஒரு பறவையின் முட்டை சைஸ் வரை இருக்கலாம்.

கற்கள் உருவாக காரணங்கள்

வயது

அடிக்கடி ஏற்படும் சிறுநீரக தொற்று நோய்கள்

கவுட்என்ற மூட்டு வியாதி உள்ளவர்கள்

தவறான உணவுமுறை கொழுப்பு, உப்பு அதிகம் உண்பவர்கள்.

குறைவாக தண்ணீர் குடிப்பது.

அதிக விட்டமின் சிமற்றும் டிஎடுத்துக் கொள்வது முதலியன.

அறிகுறிகள்

சாதாரணமாக அறிகுறிகள் தெரியாமல் போகலாம். சிறுநீரக பாதையில் கற்கள் சேரும் போது வலி ஏற்படும். வயிற்றில் அடிபாகம், தொடையில் கூட வலி ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதலிருக்கும். சிறுநீர் கழிக்கையில் வலி இருக்கும்

.

வீட்டு வைத்தியம்

மேலே சொல்லியபடி, இளநீர், பார்லி தண்ணீர், தர்பூசணி சாறு முதலியன நிவாரணமளிக்கும்.

உணவு

சிட்ரேட்டுகள் சிறுநீரகக்கற்கள் ஏற்படுவதை தவிர்க்கிறது. இவை கால்சியம் ஆக்ஸலேட் மற்றும் யூரிக் அமிலம் முதலியவை இணைந்து கற்களை உருவாக்கும் வாய்ப்பை குறைக்கின்றன. எனவே தினமும் 1 டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும் என்கின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மற்ற புளிப்பு சுவையுள்ள பழங்களும் பலன் கொடுக்கும் இருந்தாலும் ஆரஞ்சுப்பழம் தான் பெஸ்ட்‘.

தண்ணீர், இளநீர், பார்லி தண்ணீர், ஆரஞ்சு பழச்சாறு, நீர்த்த சூப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.

கால்சியம் அதிகமுள்ள காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, முட்டை, அத்தி, பால் (வெண்ணை, நெய் தவிர) பால் சார்ந்த உணவுகள் – இவற்றை தவிர்க்கவும்.

ஆக்ஸலேட் அதிகமுள்ள தக்காளி, பசலை கீரை, சீதாப்பழம், சபோடா, முந்திரி, சாக்கலேட், டீ முதலியவற்றை தவிர்க்கவும்.

யூரிக் அமிலம் உள்ள அங்க மாமிச உணவுகளை தவிர்க்கவும் (லிவர், கிட்னி, மீன்கள்).

உணவு நலம் ஜுலை 2010

சிறுநீரக, நோய்களுக்கேற்ற, உணவு, உடல், சிறுநீரகம், உவரிப்பை, யுரித்ரா, பாக்டீரியா, ஜுரம், மூத்திரக்காய்கள், கிட்னி, தொற்றுநோய், பாக்டீரியா, சிறுநீரக கற்கள், யூரிக் அமிலம், பாஸ்பேட்டுகள், கால்சியம், ஆக்ஸாலிக் அமிலம், சிறுநீரக தொற்று நோய்கள், கவுட், மூட்டு வியாதி, கொழுப்பு, விட்டமின் சி,

வயிற்றில் அடிபாகம், வலி, உணவு, லிவர், மீன்கள்,


Spread the love