இந்தியாவில் அதிகமாக மக்களை தாக்குவது இதயநோய். ஆனால் உணவுக்கட்டுப்பாடு இருந்தால், இந்த வியாதியை வெல்லலாம். முக்கியமாக கட்டுப்படுத்த வேண்டியது-கொழுப்பு. இதில் இரண்டு வகை ஒன்று செறிந்த கொழுப்பு இன்னொன்று செறியாத கொழுப்பு முதல் வகை கொழுப்பு கொலஸ்ட்ராலை ஏற்றும். இவ்வகை கொழுப்பு, மாமிசம், வெண்ணெய், மாட்டிறைச்சி, சீஸ், பால் இவற்றில் உள்ளது. தவிர பாமாயில், தேங்காய் எண்ணெய், கோகோ, வெண்ணெய் இவற்றிலும் உள்ளது. அடுத்தபடி இதய நோயாளிகள் தவிர்க்க வேண்டியது உப்பு. “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பார்கள். ஆனால் “உப்பிடாதவரை உள்ளளவும் நினை” என்பதே புது இதயமொழி. அதிகமாக பழங்கள், காய்கறிகள் இவற்றை உண்பது அவசியம். கொலஸ்ட்ராலை குறைக்க நார்ச்சத்து மிகுந்த ஒட்ஸ், அரிசி, கோதுமை, பார்லி, பீன்ஸ் இவை உதவும்.
இதய நோயாளிகள் செய்ய வேண்டியது
ஆடை, கொழுப்பு செறிந்த பாலை விட்டு, கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உபயோகிக்கவும்.
சீஸை தவிர்க்கவும். இல்லை குறைந்த கொழுப்புள்ள சீஸை உபயோகிக்கவும்.
உப்பை குறைக்கவும்.
காய்கறிகளை வதக்குவதை விட வேக வைக்கவும்.
கேக், கிரீம் பிஸ்கட்டுகளுக்கு பதில் பழங்களை சாப்பிடவும்.
எண்ணெய், கொழுப்பை குறைக்கவும். தோல் நீக்கிய கோழி இறைச்சியை உபயோகிக்கவும். மாமிசம் போன்றவற்றை சமைத்தவுடன் மேலேழும்பும் கொழுப்பை நீக்கவும்.
நான்-ஸ்டிக் பாத்திரங்களை உபயோகித்தால் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.
சமைக்கும் முறையில் வதக்குவதை தவிர்த்து, ஆவியில் சமைப்பது, வேக வைப்பது, எண்ணெய்யில்லாமல் ரோஸ்ட் செய்வது இவற்றை கையாளவும்.
பழங்கள், காய்கறிகள், பாதாம் பருப்பு, சோயாபீன் பருப்பு, தானியங்கள் “வெள்ளை” இறைச்சி (கொழுப்பு குறைந்த) இவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
இந்தியாவில் அதிகமாக மக்களைத் தாக்கும் நோய் இதயநோய் தான். ஆனால், இதய நோயை உணவுக் கட்டுப்பாட்டால் எளிமையாக வெல்லலாம்.
உணவு நலம் ஜுன் 2011
இதயம் காக்கும் உணவு, இதய நோய், உணவுக்கட்டுப்பாடு, கொழுப்பு, கொலஸ்ட்ரால், கொழுப்பு, மாமிசம், வெண்ணெய், மாட்டிறைச்சி, சீஸ், பால், பழங்கள், காய்கறிகள், ஒட்ஸ், அரிசி, கோதுமை, பார்லி, இதய நோயாளிகள், செய்ய, வேண்டியது, ஆடை, கொழுப்பு, சீஸ், உப்பு, கேக், கிரீம், எண்ணெய், கோழி இறைச்சி, ஆவியில் சமைப்பது, வேக வைப்பது, பழங்கள், காய்கறிகள், பாதாம் பருப்பு, சோயாபீன் பருப்பு, தானியங்கள், வெள்ளை இறைச்சி, இந்தியா, நோய், இதயநோய், உணவுக் கட்டுப்பாடு,