பழ வகைகள்
பழங்கள், கீரை வகைகள், காய்கறிகள் போன்றவை அதிக அளவில் தினசரி உணவுகளாகச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஆரஞ்சு, திராட்சை, மாதுளை போன்ற பழங்களினை பிழிந்தால் சாறு அதிகம் வரும். நீர் அதிகமாகவும், சக்கை குறைவாகவும் இருக்கும். பழங்கள் கனிந்து இனிப்புச் சுவை உள்ளவனாக இருக்குமாறு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆப்பிள், மாம்பழம், கொய்யா போன்ற பழங்களில் சுமார் 40 சதவீதம் நீராகவும், சுமார் 60 சதவீதம் சதையாகவும் இருக்கும். இயல்பிலேயே இவை ஒவ்வொன்றும் சுவை, அழகு, நிறம் போன்றவற்றினால் ஈர்க்கும். மேற்கூறிய பழங்களை உட்கொள்வதால், அவைகள் உடல் கழிவுகளை நீக்கிச் சுத்தம் செய்து விடும்.
கீரை வகைகள்
கீரை உணவுகளில் தான் அதிக அளவு தாது உப்புகள், வைட்டமின்கள், புரதச் சத்துக்கள் காணப்படுகின்றன. மற்ற அனைத்து வகை உணவுப் பொருள்களை விட கீரை வகைகளில் காரத்தன்மை அதிகம் உண்டு. பல வகையான கீரைகளை மாறி, மாறி தினசரி சாப்பிடுவதால், உடல் கழிவு நன்கு வெளியேறும். குடல் பலம் பெறும். செரிமானக் கோளாறுகள் இருக்காது. புத்தம் புதியதாக அன்றாடம் கீரைகளை வாங்க வேண்டும்.
காய்கறிகள்
புடலங்காய், பீர்க்கங்காய், சாம்பல் பூசணிக்காய், சுரைக்காய் போன்ற கொடியில் காய்க்கும் காய்களில் அதிக அளவு தாது உப்புகள், விட்டமின்கள் மற்றும் சுவைகள் அதிகம் உண்டு. இக்காய்களை பச்சடி உணவாக தினசரி சேர்த்துக் கொள்ளுங்கள். வெண்டைக்காய், கத்திரிக்காய். பீன்ஸ் போன்ற காய்களிலும் அதிக அளவு சத்துக்கள் உள்ளன.