பொதுவாக ஆண்களுக்கு அதிகளவு வழுக்கை தலை காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு முறை, வயது, புரதசத்து குறைவு, தலைப்பகுதியில் சரியான இரத்த ஓட்டம் இல்லாதது, பராமரிப்பு இல்லாமை, மரபணுக்கள், நம்முடைய அப்பா அல்லது முன்னோர்கள் என யாருக்காவது சிறு வயதிலேயே வழுக்கை வந்திருந்தால் அது அடுத்த தலைமுறைக்கும் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தையும் சமாளிக்க நம்முடைய உணவு முறையும் சிறந்ததாகும்.
சில உணவு வகைகளை எடுத்தால் சிறு வயதிலேயே வழுக்கை விழுவதை தடுக்கலாம். அவை என்ன என்பது பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
உணவு முறைகள்
பையோடின் என்னும் வைட்டமின் ஙி7 தான் முடியின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும். முட்டை, பால், நீலீமீமீsமீ, தயிர், என பால் சம்மந்தப்பட்ட பொருட்களில் வைட்டமின் ஙி அதிகம் உள்ளது. இவற்றை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை காணலாம். இதில் வைட்டமின் ஙி மட்டுமின்றி புரோட்டின், சிங்க், இரும்பு, ஒமேகா 6, கொழுப்பு அமிலம் ஆகியவையும் உள்ளது.
தினமும் காலையில் ஓட்ஸ் உண்பது மிகவும் நல்லது. இது உடல் எடையை சீராக வைக்கவும், வழுக்கை இல்லாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. இதற்கு காரணம் ஓட்ஸில் உள்ள வைட்டமின் ஙி, சிங்க், ஒமேகா 6, நார்சத்து ஆகியவை.
வால்நட், பாதாம் இவை இரண்டையும் தினமும் உட்கொள்வதால், வழுக்கை வராமல் பாதுகாக்கலாம். ஷிtக்ஷீணீஷ்தீமீக்ஷீக்ஷீஹ் -ல் உள்ள சிலிகா என்னும் மினரல்ஸ், முடி உதிர்வதை தடுத்து, முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. எனவே ஷிtக்ஷீணீஷ்தீமீக்ஷீக்ஷீஹ் சாப்பிடுவதும் நல்லது.
நெல்லிக்காய், கறிவேப்பிலை, பழங்கள் இவற்றை அடிக்கடி நாம் உண்ணும் தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலனை பெறலாம். முளைக்கீரையை வாரம் ஒருமுறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.
வைட்டமின் ஈ நிறைந்துள்ள உணவுகள் வழுக்கை வராமல் பாதுகாக்க உதவுகிறது. இது தலை சருமத்தின் அடியில் இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. பசலை கீரை, வேர்கடலை, பாதாம், கடுகு கீரை, ஆலிவ் ஊறுகாய், ப்ராக்கோலி, சிவப்பு குடைமிளகாய், உலர் மூலிகை ஆகியவற்றில் வைட்டமின் ஈ அதிகளவு நிறைந்துள்ளது. எனவே இவற்றை தினசரி உணவில் சேர்த்து வருவது நல்லது. இது முடியின் சுரப்பிகள் செழிப்பாக இருக்க உதவுகிறது.
வீட்டு குறிப்புகள்:
அதிமதுரம் : அதிமதுரத்தை நன்கு அரைத்து, அதனுடன் பால் மற்றும் குங்குமப்பூவைக் கலந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் இரவு தூங்குவதற்கு முன்பு தடவவும். பின் காலை எழுந்ததும் அதனை குளிர்ந்த தண்ணீரில் அலசி விடலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் வழுக்கை தலையில் முடி வளர்வதை காணலாம்.
ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகின்றது. முக்கியமாக இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள், ஸ்கால்ப் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.
இதை செய்ய தேவையான பொருட்கள்: பட்டை, ஆலிவ் ஆயில், தேன்.
செய்முறை:
முதலில் ஆலிவ் ஆயிலை சூடேற்றி, பின் அதனுடன் 1 டீஸ்பூன் பட்டை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்யவும், பின் 15 நிமிடம் ஊற வைத்து தலையை அலசவும். இதை அடிக்கடி செய்து வந்தால், ஸ்கால்ப்பில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, தலைமுடி விரைவில் வளர்ச்சியடைவதை காணலாம்.
வெங்காயச்சாற்றில் உள்ள சல்பர் முடி உதிர்வை தடுத்து, புதிய முடி வளர உதவுகிறது. சின்ன வெங்காயத்தை அரைத்து அதனை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வரவும், இவ்வாறு தொடர்ந்து செய்தால், முடி நன்கு வளர்வதை காணலாம்.
ஜோ.கி