பளிங்கு பாதங்கள் பெற

Spread the love

அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ செயல்களை செய்கிறோம். ஆனால் அத்தகைய செயல்களை செய்யும் போது, பாதங்களை மட்டும் யாரும் முறையாக கவனிப்பதில்லை. உண்மையில் அழகு முகத்தில் மட்டும் இல்லை, அனைத்து பாகங்களுக்கும் உண்டு. அதிலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக சருமத்தினால் உடனே ஒத்துழைக்க முடியாது. இதனால் முதலில் பாதிக்கப்படுவது கால்கள் தான். அதிலும் வெயிலில் நடப்பவர்கள் என்றால், அதிகபடியான வெயில் கால்களில் படுகிறது. இதனால் கால்கள் எளிதில் வறண்டு விடுகிறது, மேலும் கால்களில் உள்ள எண்ணெய் பசையையும் வெயில் உறிஞ்சிவிடுகிறது. அதனால் கால்களின் மென்மை தன்மையை இழந்துவிடுகிறோம்.

பாத பாதிப்பு

உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் இரண்டு வேலைகளை செய்ய மூளையால் தூண்டப்படுகிறது. இதன் முக்கிய வேலை தொடு உணர்வுகளைக் கடத்துவதாகும். நரம்புகளின் அன்றாட வேலைகளை பாதித்து, அதாவது நீங்கள் நடக்கும் போதோ, பேருந்தில் செல்லும் போதோ, கால் உணர்ச்சிகள் இன்றியமையாதது. நரம்புகள் செயல் இழப்பதால், கால் உணர்வுகள் பாதிக்கப்படுகிறது. நாம் நடக்கும் போது சாலையிலோ அல்லது இல்லத்திலோ கால்கள் உராய்வினால் தோலில் ஏற்படும் சிறிய காயங்கள் மிகப் பெரிய புண்ணாக மாறி கால்களைத் துண்டிக்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது.

அது மட்டுமல்லாமல், உடம்பின் அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கும் நோய் உடம்பில் உள்ள கால் பகுதியில் உள்ள நரம்புகளையும், இரத்த குழாய்களையும் மிக மிக மோசமாகத் தாக்குவதால் கால்கள் மிகவும் பாதிப்படைகிறது.

பாதத்தை பாதுகாக்க

நாள் தோறும் காலை அல்லது மாலை நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது பாதங்களுக்கும், உடல் நலத்திற்கும் நன்மை பயக்கும்.

கால்கள் வெள்ளையாக

கால்களுக்கும் சில பராமரிப்புகளை செய்வது அவசியம். ஏனென்றால் அப்பொழுதுதான் அவை அழுக்கு மற்றும் தழும்பு இல்லாமல் பளிச்சென்று ஜொலிக்கும். கால்கள் வாழைத்தண்டுப் போல ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு.

           ஆசை இருந்தால் போதுமா,

            அழகை பேண வேண்டும் அல்லவா

அதற்கு என்னென்ன வழிமுறைகள் என்பதை பார்ப்போம்.

சாதாரணமான ரேசர் பயன்படுத்தி கால்களில் இருக்கும் முடிகளை நீக்கி விடுவதற்கு முன், ஏதாவது ஒரு எண்ணெய் அல்லது குளியல் சோப்பு நுரையையோ தடவி விட்டு செய்தால், கால்களில் உள்ள தோல் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.

மசாஜ் செய்தும் முடிகளை நீக்கலாம்

பாதாம் மற்றும் ஆலிவ் ஆயிலைக் கலந்து கால்களின் மீது தேய்த்து, மேலும் கீழுமாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணெய் ஒரு மணி நேரத்திற்கு அப்படியே கால் சருமத்தில் ஊற வேண்டும். பிறகு, கடலை மாவு 5 தேக்கரண்டி, சர்க்கரை 2 தேக்கரண்டி கலந்து, அதை ஈரக் கைகளால் தொட்டு காலில் நன்கு தேய்த்துக் கழுவினால் கால்களில் இருக்கின்ற முடிகள் உதிர்வதுடன் அழுக்கு மற்றும் தழும்புகள் எல்லாம் படிப்படியாக மறைந்து, கால்கள் பளிங்கில் செய்ததுபோல பளிச்சென்று மாறி விடும். இந்த மசாஜை வாரம் இரண்டு முறை தொடர்ந்து செய்து வரலாம்.

நாம் வெளியில் செல்லும் போது நவீன உடைகளை அணிவது வழக்கம். அப்பொழுது நம் கால்கள் பளபளவென்று இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். ஆனால் அப்போது நம் கால்கள் பொலிவிழந்து இருந்தால், நாம் அன்றிலிருந்தே நாம் அந்த உடையை அணிவதை விட்டு விடுவோம். இது எல்லா பெண்களும் செய்ய கூடிய ஒன்று. ஆனால், அதற்கு பதிலாக எளிய குறிப்பு ஒன்றை பார்க்கலாம்.

வாரத்திற்கு ஒருமுறை கோகோ பட்டர் மசாஜ் செய்து வந்தால் உங்கள் காலிற்கு பொலிவு கிடைத்து விடும்.

வெடிப்பு போக

கால்களை எப்பொழுதும் அழகாக பராமரிக்க பணத்தை செலவு செய்யாமல், வீட்டிலேயே ஒரு ஸ்பா போன்று தயார் செய்து கால்களை பராமரிக்கலாம். அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்களேன்…

இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சை சாறு, ஷாம்பு, மஞ்சள் போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு நாம் பயன்படுத்தும் பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.

பின்பு பாதங்களை மெல்லிய துண்டால் ஈரமில்லாமல் துடைக்கவும். பின் நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவவும்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள், மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு இருக்கும் இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.

நகத்திற்கு டார்க் கலர் பாலிஷ் போடுவதனால் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். எனவே பாலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பாலிஷ் போடவும். இதை தொடர்ந்து செய்து வர நம் நகங்களை அழகாக பாதுகாக்கலாம்.

பீர்க்கங்காய் நாரை கொண்டு தினமும் குளிக்கும் போது பாதத்தில், 5 நிமிடம் வரை தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

பாதங்களில் வரும் பிரச்சனைகளை தீர்க்க வழிமுறைகள்

குதிகால் வெடிப்பு:

பாதத்தில் வெடிப்பு என்று உங்கள் தோழிகள் மற்றும் பார்ப்பவர்கள் கிண்டல் செய்கிறார்களா இனி வருத்தம் வேண்டாம்.

இன்றைய கால கட்டத்தில் குதிகால் வெடிப்பினால், பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் நீரில் நின்று அதிக வேலை செய்வதனால் பாதங்களில் அழுக்குகள் அதிகம் சேர்கிறது. இதனால் அவர்கள் பாதங்கள் மென்மையிழந்து, வெடிப்புகளுடன்  காணப்படுகின்றது. பாதங்களில் இயற்கையான எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் நாம் தினம்தோறும் கால்களுக்கு எண்ணெய்கள் அல்லது ஏதேனும் மாஸ்சுரைசரை தடவி வரலாம். குதிகால் வெடிப்பு நீங்கும் வரை, கால்களை ஷூ (காலணிகள்) மற்றும் சாக்ஸ்களால் மூடியிருக்க வேண்டும்.

இதன் மூலம் கால்களில் உள்ள வெடிப்புகள் குறையும். பின்பு நீங்கள் வெடிப்பில்லாத கால்களுடன் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உங்கள் தோழிகளின் முன் நடந்து செல்லலாம். யாரும் கேலி செய்ய மாட்டார்கள்.  

பாதத்தில் படை:

படை என்பது கால்களின் விரல்களுக்கிடையே ஏற்படும் புண் அல்லது அரிப்பு என்பதாகும். இந்த படை நாளடைவில் பாதங்களில் வெடிப்புகளாக, பாதத் தோல்களின் மேல் செதில் போன்று ஏற்படுத்துகிறது. எனவே தினமும் குளிக்கும் போது பாதங்களை நன்கு சுத்தமாக கழுவி வருவதால் எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

வறண்ட சருமம்:

எண்ணெய் சுரப்பிகள் பாதங்களில் இல்லாததால் பாதங்களைச் சுற்றி ஒருவித வறட்சி காணப்படும். வறட்சியானது குதிகால்களில் அதிகளவில் காணப்படுகிறது. எனவே தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பாதங்களுக்கு மாஸ்சுரைசரை தடவ வேண்டும். அதிலும் காலையில் குளித்ததும், இரவில் படுக்கபோவதற்கு முன்பு தடவினால் நல்லது.  தடவிய பிறகு எங்கும் நடக்காமல் இருக்க வேண்டும். கால்களில் உள்ள செல்கள் அந்த எண்ணெயை உறிஞ்சிவிடும், நாளடைவில் பாதங்கள் நன்கு மென்மையாக இருக்கும். வேண்டுமென்றால் தினமும் குளிக்கும் நீரில் சிறிது எண்ணெயை விட்டு குளித்தால், உடலில் ஏற்படும் வறட்சியை தடுக்கலாம்.

பாதங்களை பேண சில டிப்ஸ்:

கரடு முரடான சாலைகளில் செல்லும் போது காலணிகளை உபயோகப் படுத்துங்கள்.

வாரத்திற்கு ஒரு முறை பதங்களில் உள்ள நகங்களை வெட்டி தூய்மையாக வைத்து கொள்ளுக்கள்.

உறங்குவதிற்கு முன் பாதங்களை இதமான சுடுநீரில் கழுவி வந்தால் பாதத்தின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

கீ.பி


Spread the love