உணவு நிபுணர்கள் பல சத்துள்ள உணவு வகைகளால் ஆரோக்கிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர். இவற்றில் எளிதில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பீட்ரூட் கிழங்கு :
இரும்புச்சத்துடன், பொட்டாசியம், சோடியம் மற்றும் மக்னீசியம் அடங்கியது. புற்றுநோயை எதிர்க்கும் காய்கறி. உண்ணும் முறை சூடாக்கினால் ஆன்டி ஆக்சிடன்ட் தனிமையை இழப்பதால் கூடிய வரை பச்சையாக உண்பது நல்லது.
முட்டைக்கோஸ் :
சல்ஃபோராபேன் என்ற புற்றுநோயை எதிர்க்கும் வேதிப்பொருள் அடங்கியது முட்டைக்கோஸ். விட்டமின் ‘சி’ செறிந்தது. உண்ணும் முறை காய்கறியாக சமைத்து அல்லது பச்சையாக வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் சமைத்து சாப்பிடவும்.
இலவங்கப்பட்டை :
உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரை இவற்றை மட்டுப்படுத்தும். உண்ணும் முறை பொடியாக்கி காப்பி (அ) இதர உணவுகளின் மேல் தூவிக் கொள்ளவும்.
‘ஆன்டி ஆக்சிடன்ட்’ பொருட்கள் செறிந்தது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். உண்ணும் முறை அப்படியே (சாறாக) குடிக்கவும்.
பரங்கி விதைகள் :
பரங்கிக்காயின் விதைகள் மிகுந்த சத்துள்ளவை. மக்னீசியம் செறிந்தவை. ஆயுளை நீடிக்கும். உண்ணும் முறை வறுத்து சாப்பிடலாம். பொடித்து ‘சாலட்’ மேல் தூவி சாப்பிடலாம்.
மஞ்சள்:
‘மசாலா’ வில் சிறந்தது. புற்றுநோயை எதிர்க்கும். உண்ணும் முறை முட்டை ஆம்லெட்டில் அல்லது எல்லா சமைத்த காய்கறிகளுடன்.
பரங்கிக்காய்:
குறைந்த கலோரிகள் கொண்ட காய்கறி. நார்ச்சத்து மற்றும் விட்டமின் ‘ஏ’ அடங்கியது. உண்ணும் முறை சிறிது வெண்ணெய் அல்லது லவங்கப்பட்டை, ஜாதிக்காய் சேர்த்து சாப்பிடலாம்.
ஆயுர்வேதம்.காம்