இயற்கை உணவு சமைக்கும் முறைகள்

Spread the love

உணவுப் பொருளை அதிக நேரம் அடுப்பில் இருக்கச் செய்தால், அவை உயிர்ச்சத்தை இழக்கின்றன. அடுப்பில் குறைந்த தீயில் மிகக் குறைவான நேரமே வேக வைக்கப்பட வேண்டும்.

* காய்கறிகளைத் தண்ணீரிலிட்டு வேகவைப்பதைக் காட்டிலும் இட்லி கொப்பரை அல்லது வடிதட்டு போன்றவற்றில் துணி போட்டு அதில் காய்கறிகளை வைத்து ஆவியில் சிறிது நேரம் வேக வைத்து எடுக்கலாம்.

* ஒரு வேலை சில காய்கறிகளைத் தண்ணீரில்போட்டு வேக வைக்க வேண்டியிருந்தால் காய்கறி வெந்ததும் அந்த தண்ணீரைக் கீழே கொட்டாமல், சூப், ரசம், சாம்பார் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

* காய்கறிகளை ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு கழுவிவிட்டு நறுக்குங்கள். நறுக்கிய பின் ஒருபோதும் கழுவாதீர்கள்.

* கீரைகளை நன்கு கழுவிவிட்டு அப்படியே முழுதாகப் போட்டுச் சமையுங்கள் நறுக்காதீர்கள்.

* பொரிப்பது, வறுப்பது போன்ற முறைகளைத் தவிருங்கள்.

* டால்டா உபயோகிப்பதைத் தவிர்த்து, குறைவான அளவில் நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் பயன்படுத்துங்கள்.

* இயன்ற வரை காய்கறிகளை ஆவியில் வேகவைத்த பின்னர் எலுமிசைசாறு, உப்பு, மிளகு பொடி தூவிச் சாப்பிடப் பழகுங்கள்.

* குழம்பிற்குக் காய்கறிகளை வேக விடும்போது குறைவான அளவு தண்ணீரையே சேருங்கள்.

* உருளை, சர்க்கரை வள்ளி, பீட்ரூட், கேரட் போன்ற கிழங்குகளை ஆவியில், அவித்துத் தோலோடு உண்ணப்பழகுங்கள்.

சுருக்கமாகச் சொன்னால், சமைக்கும்போது காய்கறிகளின் உயிர்ச் சத்துக்கள் அதிகம் சிதைவுறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் சமைப்பது, பொடிப் பொடியாக வெட்டுவது, குளிரூட்டுவது, காய வைப்பது, பதனப்பொருள்கள் (Preservatives) சேர்ப்பது போன்ற செயல்கள் காய்கறிகளை நசிக்கச் செய்து வெறும் சக்கையாக்கி விடுகின்றன என்பதை நினைவில் வையுங்கள். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் உணவுப் பொருட்களைச் சமைக்காமல் உண்ணப் பழகுங்கள்.


Spread the love