புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள். இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பழங்கள், காய்கறிகள், கீரைகள், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயறுகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள்.
சாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால், வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலத்தின் செயல்திறன் குறையும். செரிமானம் தாமதப்படும்.
வாழைத்தண்டு சாறு பருகலாம். அரும்கம் புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.
காலை உணவுகள்
உடைக்காத முழுத் தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகுத் தோசை மற்றும் ரொட்டி போன்ற உணவுகள் வைட்டமின் சி அதிகம் கொண்டவை.
பால், தயிர், பாலாடைக் கட்டிகள்மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்துக்குத் தேவையான வலிமையை அளிக்கின்றன. அதனால் காலை உணவை தவறாமல் உண்டு வர வேண்டும்.
மேலும் தெரிந்து கொள்ள…