மிகவும் சுத்தமான, சிறந்த பழங்களை தேர்ந்தெடுங்கள்.
பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படவில்லை என்பதை செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் மேற்கூறிய பழத்தில் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு தரக் கூடியவை. செரிமான மண்டலத்தையும், உடலின் பிற உறுப்புக்களையும் பாதித்து விடும்.
ஓரிரு நாட்களுக்குள் சந்தைக்கு, நாம் வாங்கும் கடைக்கு வந்துள்ள பசுமையான, புதிய பழுத்த பழங்களை வாங்கவும். கீரை வகைகளில் இலைகள் வாடி வதங்காததாகவும் பச்சைப் பசேல் என்று பசுமையாக உள்ளதாகவும் இருத்தல் அவசியம்.
சந்தையிலிருந்து, கடையிலிருந்து வாங்கி பாதுகாத்து வைத்திருக்கும் பழங்களை உபயோகிப்பதற்கு முன்னர் அவைகளை நன்னீரில் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அழுகிய பகுதிகளை வெட்டி எறிந்து விடுங்கள்.
தயாரித்த பழ ரசங்களை கால தாமதமின்றி அருந்திவிட வேண்டும். பழரசங்கள் மீதம் இருப்பின் பிரிட்ஜில் வைத்து பின்னர் அருந்துவது தவிர்க்க வேண்டும்.
சாறு தயாரிக்கப்பயன்படும் மிக்ஸியினை சாறு தயாரிக்கும் முன்னரும் சாறு தயரித்த பின்னரும் நன்றாக கழுவி விடுதல் அவசியம். இதன் மூலம் மிக்ஸியில் அழுக்குப் பொருட்கள், பூசணம் போன்றவை காணப்படாது.
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் அல்லது நோய்வாய்ப் பட்டுள்ள நேரங்களில் 250 முதல் 350 மி.லி. காய்கறி அல்லது பழச்சாறினை தினசரி இரண்டு வேளை தவறாமல் அருந்த வேண்டும்.