நீங்கள் கேட்டவை

Spread the love

எனக்கு வயது 34. சற்று காலம் தாழ்த்தியே என் திருமணம் நடந்தது. திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் எனக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை, எங்கள் குடும்ப டாக்டர் பல பரிசோதனைகள் செய்யச் சொல்லி எழுதிக் கொடுத்திருக்கிறார். இவையெல்லாம் தேவை தானா? அல்லது இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துப் பார்க்கலாமா?

பொதுவாக பெண்களுக்கு 30 வயதுக்கு மேற்பட்டு குழந்தை பெறுகின்ற வாய்ப்பு குறையத் தொடங்குகிறது. கல்யாணமாகி மூன்றாண்டுகளாகியும் கருவுறவில்லையென்றால் விந்தணுப் பழப்பாய்வு, இடுப்புக் கூட்டுச் சோதனை (றிமீறீஸ்வீநீ ணிஜ்ணீனீவீஸீணீtவீஷீஸீ) மற்றும் ஹிஸ்ட்ரோ சால்பிஞ்ஜோகிராபி போன்ற சில பரிசோதனைகள் செய்வது நல்லது. ஒருவகைச் சாயத்தை (ஞிஹ்மீ) ஊசி மூலம் உங்கள் கருப்பைக்குள் செலுத்தி அது பாலோபியன் குழல்களையடைந்ததும் எக்ஸ்ரே மூலம் படம் பிடித்துப் பார்ப்பதே ஹிஸ்ட்ரோசால்பிஞ்ஜோ கிராபி எனப்படும். இந்தச் சோதனைகளில் குறைபாடு எதுவும் தெரியவில்லை என்றால் லாப்பரஸ்கோபி மூலம் எண்டோ மெட்ரியோசிஸ் போன்ற நோய்கள் ஏதாவது உள்ளதா என்று சோதித்து அறியலாம். இச் சோதனைகளால் தீமைகள் எதுவும் நிகழ வாய்ப்பில்லை.

என் அக்காள் மகளுக்கு (வயது 3) சில நேரங்களில் மூக்கில் இரத்தம் வருகிறது. இதைச் சில்லி மூக்கு உடைந்துவிட்டு என்கிறார்கள். சில்லி மூக்கு என்றால் என்ன?

சில்லி மூக்கு என்று எதுவும் இல்லை. சிறு குழந்தைகள் தொடர்ந்து சளித் தொல்லையால் பாதிக்கப்படும் போது சிறிதளவு இரத்தம் வரக்கூடும். அப்போது மட்டும் மூக்கைச் சிறிதளவு அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தால் இரத்தம் நின்று போய் விடும்.

நான் ஒரு கல்லூரி மாணவன். வயது 20. என் நாக்கில் அடிக்கடி புண் ஏற்படுகிறது. இது ஏன்? என்ன மருந்து சாப்பிடலாம்.

நாக்கில் புண் பல காரணங்களால் ஏற்படலாம். பொதுவாக வைட்டமின் ஙி சத்துக் குறைவினால் வாயில், நாக்கில் புண் ஏற்படலாம். வயிற்றில் புழுக்கள் (கீஷீக்ஷீனீs) இருந்தாலும் புண் ஏற்படலாம். மனக்கவலை, பதட்டம், படபடப்பு போன்ற மனநிலை கோளாறுகள் காரணமாகவும் புண் ஏற்படலாம். ஒன்றிரண்டு வாரங்களுக்கு (ஙி நீஷீனீஜீறீமீஜ்) மாத்திரைகள் சாப்பிட்டு வாருங்கள். புண் அதில் குணமாகாவிட்டால் அருகிலுள்ள டாக்டரிடம் காட்டிப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

36 வயதான குடும்பப் பெண். எனக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இப்போது சற்று கவனக் குறைவாக இருந்ததில் கர்ப்பமாகி விட்டேன். தீட்டு வந்து 15 வாரங்கள் ஆகின்றன. வெளியே சொல்லக் கூச்சமாக இருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து விட்டேன். இப்போது என்ன செய்யலாமென்று ஒரு யோசனை சொல்லுங்கள்.

சாதாரணமாக 4 வாரங்களிலிருந்து 8 வாரங்களுக்குள் கருக்கலைப்பு (கிதீஷீக்ஷீtவீஷீஸீ) செய்வது எளிது. நீங்கள் 15 வாரங்கள் என்கிறீர்களே. இந்த நிலையில் கருக்கலைப்பில் ஈடுபடுவது ஆபத்தானதாகும், எதற்கும் அருகாமையில் உள்ள குடும்ப நல மருத்துவ மைய மருத்துவரையோ அல்லது உங்கள் குடும்ப மருத்துவரையோ சந்தித்து யோசனை பெறுங்கள்.

என்னைக் கேட்டால் இப்பொது கருக்கலைப்பில் ஈடுபடாமல் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தை பிறந்ததும் நீங்கள் லாப்பரோஸ்கோபி முறைக் கருத்தடையோ அல்லது உங்கள் கணவர் வாசெக்டமி கருத்தடைச் சிகிச்சையோ செய்து கொள்வது தான் நல்லது என்று கூறுவேன்.

45 வயதான ஆண். உடம்பில் பல இடங்களில் ஊரல் உண்டாகிறது. சொரிந்தால் தடித்து விடுகிறது. சிறிது நேரம் கழித்துத் தடிப்பு மறைந்து விடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது?

சருமத்தூய்மை பேணாததாலும், ஒவ்வாமை போன்ற காரணத்தாலும் உடம்பில் ஊரல் ஏற்படக்கூடும். உங்களுக்கே தெரியாமல் சர்க்கரை நோய் இருந்தாலும் ஊரல் ஏற்படக்கூடும். எதற்கும் உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

வாசெக்டமி முறையில் கருத்தடை சிகிச்சை செய்து கொள்வது ஆண்மையைப் பாதிக்குமா?

பாதிக்காது. ஆணின் விரைகளிலிருந்து இருவிதமான சுரப்புகள் சுரக்கின்றன. ஒருவகையான செல்கள் டெஸ்ட்டோஸ்டீரான் என்னும் ஆண்பால் ஹார்மோனைச் சுரக்கின்றன. ஆண்மை உணர்விற்கு அடிப்படையான இந்த ஹார்மோன் நேரடியாக இரத்தத்தில் கலந்துவிடுகிறது. மற்றொரு வகையான செல்கள் விந்தணுக்களை (ஷிஜீமீக்ஷீனீs) உற்பத்தி செய்கின்றன. இந்த விந்தணுக்கள் வாஸ்டிபரன்ஸ் என்னும் விந்தேறு குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த விந்தேறு குழாய்களில் முடிச்சிட்டு விந்தணுக்கள் வெளியேறாமல் செய்வது தான் வாசெக்டமி அறுவைச் சிகிச்சை. எனவே வாசெக்டமியினால் ஆண்மை பாதிக்கப்படமாட்டாது.

யானைக்கால் வியாதி பரம்பரை நோயா?

இல்லை. கியூலெக்ஸ் என்னும் ஒருவகைக் கொசுக்கடியால் பரவக்கூடிய நோய் இது. இதை (திவீறீணீக்ஷீவீணீsவீs) ப்லேரியாசிஸ் என்று கூறுவார்கள். இந்நோயின் காரணமாக அடிக்கடி குளிர் காய்ச்சல் ஏற்பட்டு காலில் நிணநீர் தேங்கிவிடும். இதனால் கால்வீங்கி விடுகிறது. தொடக்க நிலையில் இதை ஊசி மற்றும் மருந்து மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தி விடலாம்.

எனக்கு வயது 32. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். நான் கருத்தடை மாத்திரை உட்கொள்ளலாமா?

உங்களது உடல் நிலையில் கோளாறுகள் ஏதுமில்லாதிருந்தால் நீங்கள் வாய்வழி கருத்தடை மாத்திரை உட்கொள்ளலாம். ஈரல் குறைபாடுகள் உள்ளவர்களும், மார்பகப் புற்று நோய் உள்ளவர்களும் கருப்பை மற்றும் பெண்பாற்புழை இரத்தக்கசிவு உள்ளவர்களும், இரத்த நாள நோய்கள் உள்ளவர்களும் வாய்வழிக் கருத்தடை மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும். தவிர நீரிழிவு உள்ள பேண்ணூம் தாய்ப்பாலூட்டும் பெண்களும், வலிப்பு நோய் உள்ள பெண்களும் இம்மாத்திரைகளைத் தவிர்ப்பது நல்லது. எதற்கும் ஒரு மருடததுவரின் ஆலோசனையுடன் இம்மாத்திரையை எடுக்கத் தொடங்கலாம்.

கொசுக்கடியால் எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்புண்டா?

கொசுக்கடியினால் மலேரியா வேண்டுமானால் வரலாமே தவிர எய்ட்ஸ் பரவ வாய்ப்பில்லை. கொசுக்கள் நம் உடலில் இருந்து இரத்தத்தை உறிஞ்சத்தான் செய்கின்றனவே தவிர பிறரிடமிருந்து உறிஞ்சிய இரத்தத்தை நம் உடலுக்குள் செலுத்துவதில்லை. எனவே கொசுக்கடியால் எய்ட்ஸ் அபாயம் இல்லை.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love
error: Content is protected !!