குளிர் காலத்தில் மட்டுமின்றி வெயில் காலங்களிலும் சளி, தொண்டை கரகரப்பு ஏற்படும். சில உணவுகள் சளி தொண்டை கரகரப்பு இருக்கும் போது எடுத்தால், தொண்டை வலி இன்னும் அதிகமாக மாறிவிடும். எப்போதாவது வரும் சளி, இருமல் பற்றி பிரச்சனை இல்லை. நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே அதை தடுத்துவிடும். ஆனால், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, நெஞ்சில் சளி, தொண்டை கட்டுதல் ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்பதை புரிந்துகொள்வது அவசியம். இந்த நேரத்தில் நம் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அந்த உணவுப்பொருட்கள் என்னென்ன என்பது பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
சளியின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
§ தயிர், சளி இருக்கும் போது தயிர் சாப்பிடுவது நல்லது. அது நமது நெஞ்சில் உள்ள சளியை இன்னும் கடினமாக்கி விடும். எனவே சளி, தொண்டை வலி இருக்கும் போது தயிர் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
§ எலுமிச்சை பழம், ஆரஞ்சு இவற்றை தவிர்ப்பது அவசியம்.
§ சிப்ஸ், பூரி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகள் உண்பதை தவிர்க்கவும்.
§ சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சளி இருக்கும் போது ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது.
§ இறைச்சிகளில் அசிட்டிக் அளவு அதிகமாக இருப்பதால், இவ்வித உணவுகளை சளி பிடித்திருக்கும் போது தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை உடலில் உள்ள இயற்கை அமிலங்களுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது.
§ கொழுப்பு நிறைந்த உணவுகளில் ஃபேட்டி அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை உடலிற்கு பிரச்சனையை தருகிறது.
§ ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும், கலோரிகள் அதிகமாகவும் உள்ளது. எனவே இத்தகைய உணவுகளை உடல் நிலை சரியில்லாத நிலையில் உட்கொண்டு வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கிருமிகளை எதிர்த்து போராடும் திறன் குறைந்துவிடும். எனவே ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
§ பால் சளியின் அளவையும், நோய்க்கிருமிகளின் தாக்கத்தையும் அதிகரிக்கச் செய்துவிடும். மேலும் பால் செரிமானமாக நீண்ட நேரம் ஆகிறது. எனவே பால் பொருள்களை சளி பிடித்திருக்கும் நேரத்தில் தவிர்ப்பது நல்லது. பாலுடன், மஞ்சள் பொடி சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
§ நீர்ச்சத்து நிறைந்துள்ள சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், தர்பூசணி போன்ற காய்கறிகளை சில நாட்களுக்கு தவிர்ப்பது அவசியம். மேலும், இவற்றை சாப்பிடவேண்டிய சூழல் ஏற்பட்டால், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.
இந்த உணவு முறைகளை கடைபிடிப்பதன் மூலம் சளி, தொண்டைவலியில் இருந்து விரைவில் விடுதலை பெறலாம்.