டாக்டர் கேள்வி-பதில் – நீங்கள் கேட்டவை

Spread the love

டாக்டர் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால் அது சேருவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்?

எந்த அளவிற்கு முறிவு ஏற்பட்டுள்ளது என்பதையும் முறிவு ஏற்பட்டவரின் வயதையும் பொருத்தது இது. சிறுவர்களது எலும்புகள் மிக விரைவாகச் சேர்ந்துவிடும். வயதில் முதிர்ந்தவர்களுக்கு எலும்வு முறிவு ஏற்படும் போது அவை சேராமலே போய் விடுவதும் உண்டு. சாதாரணமாக கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் ஒரு மாதகாலம் கழுத்தில் தொட்டில் (Cast) கட்டி கையைத் தொங்கவிடவேண்டும். அடுத்த ஒரு மாதம் அந்தக் கையில் அழுத்தம் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முறிவு ஏற்பட்டது கால் பகுதியாக இருந்தால் 2 மாத காலம் கட்டுப் போட்டு இருக்க வேண்டும்.

நான் ஒரு பள்ளி மாணவி, வயது 15, எனக்கு அடிக்கடி கண்கள் சிவந்து போகின்றன. இது எதனால் ஏற்படுகிறது-?.

கண் சிவந்து போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தூசு துரும்புகள் கண்களில் பட்டு உறுத்தல், ஒவ்வாமை போன்றவற்றை ஏற்படுத்திக் கண்களைச் சிவக்கச் செய்யலாம். கண்வலி நுண்மத் தொற்றினால் ஏற்படும். ட்ரகோமா ஆகியவற்றாலும் கண் சிவக்கலாம். கார்னியா  எனப்படும் கருவிழியில் புண் இருந்தாலும் கிளாக்கோமா எனப்படும் கண் விழிநீர் அழுத்தம் இருந்தாலும் கண் சிவக்கலாம். கண் மருத்துவர் ஒருவரிடம் காட்டி ஆலோசனை பெறுவது நல்லது.

மூக்கடைப்பு எதனால் ஏற்படுகிறது? இதற்கு ஒரு மருத்துவம் சொல்லுங்கள்.

மூக்கடைப்பு, தடுமன், ஒவ்வாமை, உட்கொள்ளும் சில வகை மருந்துகள் சைனஸ் அழற்சி போன்ற பல காரணங்களால் ஏற்படலாம். சாதாரணமாக ஏற்படும் மூக்கடைப்பிற்கு

சுத்தமான தண்ணீரில் சிறிதளவு உப்பைக் கலந்து உள்ளங்கையில் ஊற்றிக் கொண்டு மூக்கினால் உறிஞ்சி உள்ளிழுக்கலாம். இதனால் மூக்கிலுள்ள சீதச் சவ்வுகள் தளர்த்தப்பட்டு மூக்கடைப்புச் சரியாகும். உப்புப் போடாத சாதாரண தண்ணீரையும் இதற்குப் பயன்படுத்தலாம்.

சாதாரண தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் மருந்து எதுவும் போடாமல் வெறும் ஆவி பிடித்தாலும் மூக்கடைப்பு குணமாகும்.

என் மகளுக்கு 5 வயதாகிறது, எந்த நேரமும் மூக்கு ஒழுகிக் கொண்டே இருக்கிறது. மற்றபடி எந்தக் கோளாறும் இல்லை. இதற்கு உங்கள் அறிவுரை என்ன?

அலர்ஜிக் ரைனைட்டிஸ் எனப்படும் ஒவ்வாமையினால் ஏற்படும் மூக்கு ஒழுக்கு இது. சிலருக்கு இது அடிக்கடி தோன்றி மறையலாம். சில குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இருக்கலாம். வீட்டிலுள்ள தூசு, தும்புகளும், சுற்றுப்புறத்திலுள்ள செடி கொடிகளும், வீட்டு விலங்குகளின் கழிவு மற்றும் முடி போன்றவைகளும் இவ்வகை ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். மருத்துவர்களிடம் சென்றால் ஹிஸ்டமின் எதிர்ப்பிகளையும் ஒவ்வாமை எதிர்ப்பிகளையும் பரிந்துரைப்பார்கள். இவற்றால் சிறிது குணம் தெரியும். மருந்துகளை நிறுத்தியபின் மறுபடியும் மூக்கு ஒழுக ஆரம்பித்து விடும். முதலில் உங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வாமையை ஏற்படுத்தும் அலர்ஜன் எதுவென்று அறிந்து அதற்கான தடுப்பாற்றல் மருத்துவம் செய்து கொள்ளுவது அவசியம்.

எனது 10 வயது மகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வலிப்பு வந்து கீழே விழந்து விட்டாள். இதை எபிலெப்சி (Epilepsy) என்று டாக்டர் சொல்கிறார். இது திரும்பவும் வருமா? தயவு செய்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

இது மூளையில் ஏற்படுகின்ற அளவிற்கு தகுந்த மின் அதிர்வினால் ஏற்படுவது. உடல் வலிப்பு, நடுக்கம், கண்கள் சொருகுதல், நாக்கைக் கடித்துக் கொள்ளுதல், சில நேரங்களில் சிறுநீர் பிரிதல் போன்றவை ஏற்படக்கூடும். மூளையில் ஏற்பட்டுள்ள சிறு தழும்புகளாலும் கட்டிகளாலும் இது போல் ஏற்படலாம். திரும்ப திரும்ப வலிப்பு ஏற்பட்டால் தான் அது எபிலெப்சி என்று சொல்லலாம். வாழ்வில் முதல் முறையாக ஒருவருக்கு வலிப்பு வரும் போது அதை எபிலெப்சி என்று சொல்ல முடியாது. இதற்காகச் சில சோதனைகள் உள்ளன.

(EEG/CT Scan/Blood Test/ CSF Exam) அவற்றைச் செய்து பாருங்கள். வலிப்பு நோய்க்கு (Tegreol. Sodium, Valporate, Phenytoin) போன்ற திறன்மிக்க மருந்துகள் தற்போது கிடைக்கின்றன. மருத்துவர் உதவியுடன் இம்மருந்துகளைச் சரியான அளவில் கொடுத்தால் தடுத்து விடலாம். ஒரு எச்சரிக்கை. வலிப்பு மருந்துகள் அளவிற்கு மிகுந்து கொடுக்கப்படும்போது மந்த நிலையும், தூக்கமும், கை நடுக்கமும், குளறுவதும் ஏற்படலாம். மருந்துகளைத் தேவைக்கேற்ப அளவைக் கூட்டியும் குறைத்தும் கொடுப்பது அவசியம்.

எனக்கு 32 வயதாகிறது. 2 குழந்தைகளுக்குத் தாய். திடீரென்று சென்ற ஒரு வருடகாலத்திற்குள் என் முகத்திலும் மார்பிலும் முடி முளைக்கத் தொடங்கியுள்ளது. எனக்கு இது சங்கடத்தையும் பயத்தையும் உண்டாக்குகிறது.

 தீடிரென்று முடி முளைக்கத் தொடங்கி இருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்று சோதித்து அறிவது முக்கியம். சில வேளைகளில் ஆண் ஹார்மோனைச் சுரக்க வல்ல கட்டிகள் ஏதாவது உங்களுடைய சினையகம் அல்லது அட்ரீனல் சுரப்பிகளில் வளரத் தொடங்கியிருக்கலாம். உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்து உடலின் ஹார்மோன் அளவுகளைக் கண்டறிய வேண்டும். டெஸ்ட்ரோஸ்டீரான் அளவு கூடுதலாக இருந்தால் அல்ட்ரா சவுண்ட் அல்லது ஸ்கேன் மூலம் கட்டி எங்கிருக்கிறது என்று கண்டு பிடிக்க வேண்டும். கட்டி எதுவும் இல்லையென்றால் சில வகை மருந்துகளைப் பயன்படுத்தி முடி வளர்ச்சியை தவிர்த்து விடலாம். முளைத்த முடியை எலெக்ட்ரோலிசிஸ் மூலம் நீக்கிவிடலாம்.

தாய். திடீரென்று சென்ற ஒரு வருடகாலத்திற்குள் என் முகத்திலும் மார்பிலும் முடி முளைக்கத் தொடங்கியுள்ளது. எனக்கு இது சங்கடத்தையும் பயத்தையும் உண்டாக்குகிறது.


தீடிரென்று முடி முளைக்கத் தொடங்கி இருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்று சோதித்து அறிவது முக்கியம். சில வேளைகளில் ஆண் ஹார்மோனைச் சுரக்க வல்ல கட்டிகள் ஏதாவது உங்களுடைய சினையகம் அல்லது அட்ரீனல் சுரப்பிகளில் வளரத் தொடங்கியிருக்கலாம்.

உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்து உடலின் ஹார்மோன் அளவுகளைக் கண்டறிய வேண்டும். டெஸ்ட்ரோஸ்டீரான் அளவு கூடுதலாக இருந்தால் அல்ட்ரா சவுண்ட் அல்லது ஸ்கேன் மூலம் கட்டி எங்கிருக்கிறது என்று கண்டு பிடிக்க வேண்டும். கட்டி எதுவும் இல்லையென்றால் சில வகை மருந்துகளைப் பயன்படுத்தி முடி வளர்ச்சியை தவிர்த்து விடலாம். முளைத்த முடியை எலெக்ட்ரோலிசிஸ் மூலம் நீக்கிவிடலாம்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love
error: Content is protected !!