உணவை மருந்தாக்க சில டிப்ஸ்

Spread the love

ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உருளைக் கிழங்கை அவித்து தோலுடன் சாப்பிட்டு வரவும். தினமும் ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் துண்டுகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறாகச் சாப்பிடுவதைவிட இது எளிதாக இருக்கும்.

பீட்ரூட் சூப்பை இரவு படுக்கைக்குச் செல்லும்போது அருந்திவிட்டுப் படுத்தால் நாள்பட்ட மலச்சிக்கல் அகலும். தலைவலி பல்வலி என்றாலும் பீட்ரூட் சூப்பை பீட்ரூட்டுடன் சேர்த்தே அருந்தலாம்.

தொண்டைப் புண் ஏற்பட்டிருந்தால் மஞ்சள் பொடியை போட்டுக் கொதிக்க வைத்த நீரை வாயில் ஊற்றிக் கொண்டு, தொண்டையில் படும்படி சற்று நேரம் வைத்திருந்த பிறகு கொப்பளித்து விடவும். சில வேளைகள் இவ்வாறு செய்தால் போதும் தொண்டைப் புண் பறந்தோடும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!