ராணுவ வீரர் போல் உங்கள் கட்டுடலை வைத்துக்கொள்ள….

Spread the love

பொதுவாக நாம் சரியாக படிக்காதபோது, இல்லையென்றால் வீட்டில் அடங்காமல் இருக்கும் போது,நம்மிடம் மற்றவர்களை எடுத்துகாட்டாக வைத்துதான் திட்டுவார்கள். அது மாதிரிதான் நமது உடல்ஆரோக்கியமும், பழக்கவழக்கங்களும். இதை மற்றவர்கள் கூறவில்லை என்றாலும், நாமே சிலபழக்கவழக்கங்களை வளர்த்துகொள்ள வேண்டும். அதற்கு நல்ல ஒரு எடுத்துகாட்டுதான் ராணுவ வீரர்கள்.

முதலில் காலையில் சீக்கிரம் எழுந்ததும் பல் துலக்கிய பின் இரண்டு தம்ளர் தண்ணீர் குடித்து ஜிம்க்குபோகவும், இல்லையென்றால் நடைபயிற்சி போன்ற சிறிய உடற்பயிற்ச்சிகளை எடுத்துகொள்ளலாம்.இவையெல்லாம் காலையில் 7:3௦ மணிக்குள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை பழக்கம்.எப்போதுமே சரியான நேரத்தில் திட்டமிட்டு செய்ய வேண்டும். அதாவது காலையில் இந்த நேரத்தில்எழவேண்டும், சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். என்று ஒரு நிலையான நேரத்தை திட்டமிட்டுவைக்கவும். குறிப்பாக காலை உணவை தவிர்க்க கூடாது. முதலில் காலை உணவு என்பது ஒருநாளைக்கு தேவையான அத்தியாவசியமாக இருகின்றது. ஒரு நாள் முழுவதும் கலைப்பு இல்லாமல்இருப்பதற்கு அதற்கு தேவையான ஆற்றல் காலை உணவு மூலம் தான் நமக்கு கிடைக்கும்.

காலை, மதியம், இரவு இந்த மூன்று வேலையும் உணவுகளை சரியாக உண்ண முயற்சி செய்யுங்கள்.இதனால் தேவையற்ற கொழுப்புகள் நமது உடலில் சேராது. உடல் எடையையும் சீராக வைக்கலாம்.சரிவிகித உணவு முறையை கண்டிப்பாக கடைபிடியுங்கள். தினசரி உணவில் பச்சை காய்கறி,பழங்கள், பால், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், இவையெல்லாம் நோயில்லா ஆரோக்கியத்தைவழங்கும். நான்கு சுவர்களுக்குள்ளே அடங்கி விடாமல், வெளியில் நல்ல காற்றோட்டமான இடத்தைநோக்கி பயணிக்க வேண்டும். இதனால் நல்ல ஆக்சிஜன் கிடைக்கும். நேரம் கிடைக்கவில்லைஎன்றாலும் முடிந்த அளவு Shopping,Movie என உங்கள் மனதை சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள்.பாடல் கேளுங்கள், இதனால் மனஅழுத்தம் வராது.

Junk வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இதில் மிகவும் குறைவான ஊட்டச்சத்துக்கள்தான் உள்ளது. அதோடு அதிகமான கொழுப்பு நிறைந்திருக்கின்றது. ஆல்கஹால் மட்டுமே உங்கள்உடலிற்கு தீங்கை ஏற்படுத்தும் என சொல்ல முடியாது. அளவான  ஆல்கஹால் நல்லதூக்கத்திற்க்கும், அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் எழவும் உதவியாக இருக்கும் என ஆய்வுகளில்சொல்லப்பட்டிருக்கின்றது. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அல்லது 6 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம்எடுப்பது அவசியம் தூங்கபோகும் முன் மிதமான சூட்டில் பால் குடித்து படுத்தால் நிம்மதியான தூக்கம்வரும்.  அதிகளவில் நீர் அருந்துவது நல்லது. நம்மை எப்பொழுதும் உற்சாகப்படுத்த கூடிய நபருடன்நேரத்தை செலவிடுவது மனதிற்கும், வாழ்க்கைக்கும் மிகவும் நல்லது.


Spread the love