ஹெல்த் டிரிங்க்ஸ் எனும் இன்ப பானம்!

Spread the love

இப்போதைய காலக் கட்டத்தில்,இளசுகளிடம் உங்களது இன்ப பானம் எதுவென்று கேட்டால் கோக் அல்லது பெப்சி என்றுதான் சொல்வார்கள். அவர்களுக்கு கூல் டிரிங்க்ஸ் என்பதற்கும் ஹெல்த் டிரிங்க்ஸ் என்பதற்கும் வித்தியாசம் தெரியாது போலிருக்கிறது.

கூல்டிரிங்க்ஸ் என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஹெல்த் டிரிங்க்ஸ் பற்றி அனனவருக்கும் அவ்வளவாகத் தெரியாது.

“பல நாடுகளில் இந்த ஹெல்த் டிரிங்க்ஸ் வெரி பேமஸ். ஆனா, நம்ம ஊருக்கு இப்பதான் ரீசண்டா வந்திருக்கு. பார்ப்பதற்கு சரக்கு ஐட்டம் மாதிரியே தெரியும் இந்த டிரிங்க்ஸ் சுத்தமா ஆல்கஹால் கன்டென்ட் இல்லாதது. குழந்தை முதற்கொண்டு பெரியவங்க வரைக்கும் யார் வேண்டுமானாலும் அருந்தலாம்” என்பது இந்த ஹெல்த் டிரிங்க்ஸை பயன்படுத்துபவர்களின் பரிந்துரை.

இந்த ஹெல்த் டிரிங்க்ஸில் பெரும்பாலானவை ஐரோப்பாவிலுள்ள சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இம்போர்டட் சரக்கு என்பதனாலே இதற்கு ஏக கிராக்கி. பொதுவா இந்த டிரிங்க்ஸை எனர்ஜி டானிக் என்று சொல்லலாம்.

இதுல ஐந்து வகையான பானங்கள் இருக்கு. எல்லாம் நேச்சுரல் பழச்சாறு பானங்கள். பிரேசில் நாட்டு ரெயின் ஃபாரஸ்ட்டில் இருக்கிற அசாய் பெரி மரத்தில் விளைகிற பழத்தை பதப்படுத்தியே இப்பானம் தயாரிக்கப்படுகிறது. அசாய் பெரி பழத்தில் இருக்கிறது ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் அதிகம் இருக்கிறது. இந்த சத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள செல்கள் அதிகமாக தூண்டப்படுகிறது.

இந்த பழச் சாறுகளை சாப்பிடுவதால் உடல் இளைத்து ஸ்லிம் ஆகிவிடலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். உடலை இளைக்கச் செய்வதற்கும் சில ஜுஸ் வகைகள் இருக்கிறது. ஆனால், இதை மட்டுமே குடித்துவிட்டு உடம்பை இளைக்க வைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

யாரெல்லாம் குடிக்கலாம்

பொதுவாக ஹெல்த் டிரிங்க்ஸ் குடிப்பது நல்லதுதான். ஆனால், அது எல்லோருக்கும் பொதுவாக நல்லது என்று சொல்ல முடியாது. ‘Thynyl Ketone Uria ‘ வியாதி உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே அருந்த வேண்டும்.

பலர் கூல்ட்ரிங்க்ஸை குடிப்பதைப் போல ஹெல்த் டிரிங்க்ஸை ஒரே மூச்சில் கடகடவென்று குடித்து விடுவார்கள். இது தப்பு. பழத்தை முழுவதுமாக சாப்பிடுவதால் அதில் உள்ள சாறு மற்றும் தோல் பகுதியில் இருக்கும் மாவுச் சத்து இரண்டும் சேர்ந்து வயிற்றில் கலக்கிறது. இதனால் குடல் ப்ளஸ் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

ஆனால், எனர்ஜி டிரிங்க்ஸ் என்பது பழச்சாற்றில் மட்டும் தயாராவதால் அதில் நார்ச் சத்து பெரும்பாலும் இருப்பதில்லை. 

அதில் இருக்கும் எனர்ஜியின் அளவு பழத்தில் கிடைக்கும் அளவைவிட மூன்று மடங்கு அதிகம்.ஆகவே, அதை அளவாகத்தான் உட்கொள்ள வேண்டும்.  எக்ஸர்சஸைப் போன்ற கடின உழைப்புக்குப் பின் ஹெல்த் டிரிங்க்ஸில் கொஞ்சம் அருந்துவது உடலுக்கு நல்லது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!