இந்தியாவின் தேசிய மலராகிய தாமரை பெண்களின் முகத்திற்கு ஓப்பிடப்படுகிறது. இது வௌளை, சிவப்பு, நீலம், மஞ்சள் என நான்கு இனங்களாக உள்ளது. வெண் தாமரைப் பூவால் ஈரலின் வெப்பமும், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும். வெண்தாமரை குடிநீர் ஜீரத்திற்கும் வெண்தாமரைப் பூ இதழ் மூளை பலம் பெறவும் உதவுகிறது. வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் நோய்கள் குணம் கிடைக்கிறது. செந்தாமரைப் பூக்களின் இதழ்கள், சீந்தில் கொடி, நெல்லிமுள்ளி, காசினிக்கீரை, சுக்கு, திப்பிலி இவற்றைப் பாலில் கொதிக்க வைத்து நெய்சேர்த்து செய்யப்படும் செந்தாமரை லேகியமானது கண்களுக்கும், மூளைக்கும் சிறந்த டானிக்காக உள்ளது.
திரிதோஷங்களை சமப்படுத்தும் உணவு இட்லி:
தமிழகத்தில் இல்லம் தோறும் மட்டுமல்ல, வெளியே சிறு ஓட்டல் முதல் பெரிய ஸ்டார் ஓட்டல் வரை தயாரிக்கப்படும் ஓரு எளிமையான உணவு இட்லி. இட்லியானது, அரிசி, பருப்புகள் கலந்து ஆவியில் வேகவைக்கப்பட்டு கிடைக்கும் உணவாகும். இதில் சேர்க்கப்படும் உளுத்தம் பருப்பில் புரதம் உள்ளது. 100 கிராம் உளுத்தம் பருப்பில் 24 கிராம் புரதம் உள்ளது. ஆனால் உளுத்தம் பருப்பு சூடு நிறைந்த அமில உணவு மற்றும் வெயில் காலத்தில் சாப்பிட்டால் அதிக அமிலம், வாய்வைத் தோற்றுவிக்கும். இதனைச் சமன் செய்ய, அரிசியும் பருப்பும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டு கலவை புளிக்க வைக்கப்படுகிறது. பிறகு ஆவியில் வேக வைத்து எடுக்கும் பொழுது, உணவாக உட்கொள்ள உளுத்தம் பருப்பின் தீமையான பக்க விளைவுகள் களையப் படுகின்றன. புரதம், கார்போ ஹைட்ரேட் வைட்டமின்கள் நிறைந்த உணவாகிறது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவாக அமைகிறது.