முதியோர் நலம்

Spread the love

“மனிதனின் ஆயுளுக்கு குறிப்பிட்ட வரம்பு கிடையாது” – சரகசம்ஹிதை வயதாவது பிறப்பிலிருந்து இறப்பு வரை தொடரும் நிகழ்வு. இதனால் உடல் ரீதியாக, மனோ ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே வரும். ஒவ்வொரு ‘பத்து’ வருடப் பிரிவில் நமது இளமை, வளர்ச்சி, சர்மம், பார்வை, புத்தி, பாலியல் திறன், நடமாட்டம் போன்றவை மங்கிக் கொண்டே போகும். அஸ்திவாரம் சரியாக இருந்தால் கட்டிடமும் உறுதியாக இருக்கும். இளமையிலிருந்தே உணவு, உறக்கம், ஒழுக்கம் – இந்த மூன்று அஸ்திவாரங்கள் உறுதியாக, நன்றாக அமைந்தால் மூப்படைவதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளலாம்.

வயதாவது எல்லோரையும் ஒரே மாதிரியாக பாதிப்பதில்லை. மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

முதுமை எப்படி ஏற்படுகிறது?

இரண்டு கொள்கைகள் கூறப்படுகின்றன.

உடல் வளர்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்களின் குறைபாடு

ஆக்ஸிகரணத்தின் (Oxidation) பிரதி பலன்களால் முதுமை ஏற்படும். முதல் காரணத்தின் படி, வயது அதிகரிக்கும் போது, ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால் முதுமை ஏற்படுகிறது.

இரண்டாவது காரணம் வலுவானது. ஆக்சிகரணம் (Oxidation), ஃப்ரீ

ரேடிகல் (Free Radical), ஆன்டி ஆக்ஸிடான்ட் (Anti – Oxidation) என்ற வார்த்தைகளை அடிக்கடி நாம் கேட்கின்றோம். இவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

ஃப்ரீரேடிகல் (ஆக்ஸிடான்ட் – Oxidation)

உடலில் லட்சக்கணக்கான செல்கள் உள்ளன. இவற்றின் நார்மல் செயல்பாடுகளின் போது பிரதி விளைவுகளாக ஃப்ரீ ரேடிகல், (ஆக்ஸிஜனேற்ற சுயேச்சை மூலக்கூறுகள்) தோன்றுகின்றன. இவை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை. இவை செல்களின் பாகங்களை, டி.என்.ஏ (DNA), புரதம், ஜவ்வுகளை – சிதைத்து விடும். தொடர்ந்து உடலில் சேரும் ஃப்ரீ ரேடிகல்களால் முதுமை ஏற்படுகிறது.

ஃப்ரீ ரேடிகலின் அமைப்பை பார்த்தால் அது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஜோடி சேராத “எலக்ட்ரான்”கள் கொண்டது. இந்த எலக்ட்ரானுக்காக பக்க செல்களை ஃப்ரீரேகல் அழித்து விடும். ஃப்ரீரேடிகல்கள் “ஆக்ஸிடான்ட்கள், சுற்றுப்புற சூழ்நிலையின் மாசுகள், அசுத்தங்கள், மன அழுத்தம், உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism), அதிகமாக உண்பது, அதிகமாக கொழுப்புப் பொருட்களை உண்பது, மது குடிப்பது, புகைப்பது, சூர்ய வெப்பம் முதலியவற்றால் ஏற்படுகிறது. மொத்தத்தில் ஃப்ரீரேடிகல்கள் உடலை முதுமையாக்குவது மட்டுமின்றி, இதய நோய்கள், புற்றுநோய் இவை உண்டாக காரணமாகலாம். ஃப்ரீரேடிகல்களை எதிர்கொள்ளும் வழி அதிகமாக anti – Oxidation உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வது தான்.

முதியோர்களை தாக்கும் பிரத்யேக நோய்கள்

வியாதி       விவரங்கள்

1. மூளை மங்குதல் (Dementia) அல்சீமர் நோய் (Alzheimer diseases)அதிகமாகிக் கொண்டே வரும் மூளை குறைபாடுகள். புத்தி, அறிவு, ஞாபக சக்தி இவை குறையும்.     

2. இதய தமனி விரிவடைவது         தமனி சுவர்கள் விரிந்து வெடித்து சுடும் அபாயம்.      

3. பார்க்கின்ஸன் வியாதி       நடுக்க வியாதி, மூளையில் “டோபாமைன்” (Dopamine) குறைவினால் ஏற்படும், போகப் போக தீவிரமாகும் முடக்கு நோய்.     

4. சிறுநீர் கட்டுப்பாடின்மை   முதுமை தவிர வேறு காரணங்களும் இருக்கலாம்.    

5. ப்ராஸ்டேட் (Prostate) சுரப்பி வீக்கம், புற்று நோய்  ஆண்களுக்கு மட்டும் இதன் வீக்கம் சிறுநீர் போவதை பாதிக்கும்.

6. நீரிழிவு நோய்  பொதுவாக டைப் – 2 (இன்சுலினை சாராத நீரிழிவு ஏற்படும்.      

7. கண் பாதிப்புகள்       கண் புரை நோய் (Cataract), க்ளை கோமா (Glaucoma) இவை ஏற்படும்.   

8. தசை, எலும்பு, மூட்டு பாதிப்புகள்         இந்த பாதிப்புகள் 35 வயதிலிருந்து கூட தொடங்கும். இவை வயதாவதில் முதல் அறிகுறிகள். ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோ பொராசிஸ் (Oseto – porosis) இவை தோன்றும்.

மூன்று அஸ்திவாரங்கள் (உணவு, உறக்கம், ஒழுக்கம்)

உணவு – முதுமைக்கேற்ற உணவு

அதிகமாக Anti – Oxidants உள்ள உணவுப்பொருட்கள் பயனளிக்கும் தாவிர ஊட்டச்சத்துக்கள் (Phytonutrients) உள்ள காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கொட்டைகள், தேநீர் முதலியன. இவை புரதம், கார்போஹைடிரேட், கொழுப்புகள் போல இன்றியமையாத சத்துக்களில்லை தான். ஆனால் உடல் நலத்திற்கு, உடல் எடையை சரியான அளவில் வைக்க, வயது ஏறுவதை ஒரளவு தடுக்க, இந்த உணவுகள் தேவை. முக்கியமாக இந்த உணவுகள் ஆன்டி – ஆக்ஸிடான்ட் உணவுகள் – உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பவை. தவிர செல் வளர்ச்சிக்கு, ஆரோக்கியத்திற்கு உதவுபவை.


Spread the love
error: Content is protected !!