துத்தநாகம் (Zinc)

Spread the love

துத்தநாகம் (Zinc)

ஆண்மை தாதுப்பொருள்

நீல – வெண்மை வண்ணம் கொண்ட உலோகம் துத்த நாகம். உடலில் மிக குறைந்த அளவு இருந்தும், எல்லா செல்களிலும் இருக்கும். பல பணிகளை புரியும் துத்தநாகத்தின் முக்கிய செயல்கள்-

நோய் தடுக்கும் சக்தியில் உள்ள பொருட்களில் ஒன்றானவை துத்த நாகம் குறைந்த பட்சம் 100 என்சைம்கள், ஜிங்க்கின் நட்பையும், உதவியையும் நாடுகின்றன. ஏனென்றால் ஜிங்க் ஒரு கிரியா ஊக்கி.

செல்கள் இரண்டாக பிரியும் போது, டி.என்.ஏ, ஆல்.என்.ஏ, உற்பத்திக்கு ஜிங்க் தேவை.

புரதம், கார்போஹைட்ரேட் இவைகளின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு ஜிங்க் உதவும்.

காயங்கள் ஆற, உடல் வளர்ச்சிக்கும், நல்ல பார்வைக்கும் ஜிங்க் உதவும். துத்தநாகம் சமஸ்கிருதத்தில் யஷாடா எனப்படுகிறது. ஜிங்க், தனி உலோகமாக கிடைப்பதில்லை. ஆக்ஸிஜனுடன் சேர்ந்து ரெட் ஆக்ஸைட்டாக (Red – oxide), கார்பனுடன், சேர்ந்து கார்பனேட்டாகவும், கந்தகத்துடன் இணைந்து ஸல்ஃபைடாகவும், ஸிலிகாவும் சேர்ந்து சிலிகேட்டாகும் கிடைக்கிறது.

ஜிங்க் குறைந்தால்

உணவில் தானியங்கள், காய்கறிகள் மட்டுமே அதிகம் இருந்தால் போதாது. இவற்றில் ஜிங்க் இருந்தாலும் உடலால் சுலபமாக இந்த ஜிங்கை ஜீரணிக்க முடியாது. மாமிசம், முட்டை, லிவர், இவைகளிலிருக்கும் ஜிங்க் சுலபமாக ஜீரணமாகும்.

மதுபானங்கள் குடிப்பவர்களுக்கு ஜிங்க் குறைபாடு ஏற்படும்.

ஜிங்க் குறைந்தால் உடலின் நோய் தடுப்பு சக்தி பலவீனமடையும். நோய்க்கு எதிராக செயல்படும் செல்கள் குறைந்து விடும்.

ருசி, வாசனை அறியும் திறன் குறையும்.

உடல் வளர்ச்சி முழுமை பெறாமல் நின்று விடும். குள்ளர்களாக உருவமாகுவார்கள்.

ஞாபக சக்தி குறையும்.

ஜிங்க் குறைபாடு உள்ள குழந்தைகள் குறைந்த எடையுள்ளவர்களாக இருப்பார்கள். உடல் வளர்ச்சி தாமதமாகும்.

சிலருக்கு நகங்களில் வெள்ளை புள்ளிகள் காணப்படலாம். இவை ஜிங்க் குறைபாட்டை குறிக்கும்.

ஜிங்கின் தினசரி தேவை

ஒரு நாளுக்கு 15.5 மில்லி கிராம் ஜிங்க் சராசரி மனிதனுக்கு தேவை. கர்ப்பிணி பெண்களுக்கு இன்னும் 5 மி.கி. அதிகம் தேவை. சைவ உணவு உண்பவர்களுக்கு 50% அதிகம் தேவை. சராசரி பெண்ணுக்கு 12 கிராமும், சிறுவர்களுக்கு 10 மி.கி. தினமும் தேவை.

ஜிங்க் நிறைந்த உணவுகள்

பழங்கள், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெங்காயம், பரங்கி விதைகள், முந்திரி பருப்பு, சூரிய காந்தி விதைகள், மாமிசங்கள், கடற் சிப்பிகள், சீஸ், அரிசி, பருப்புகள், கோதுமை தவிடு.

ஜிங்க் டானிக்குகள் தேவையா?

ஜிங்க் டானிக்குகளை அதிக நாட்களுக்கு உபயோகிப்பதால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம். மற்ற சத்துக்கள் ஜீரணமாவதை ஜிங்க் தடுக்கும். ஒரு நாளுக்கு 40 மில்லி கிராமுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு, நோய் தடுப்பு சக்தி குறைந்து, உடலுக்கு விஷமாகும்.

துத்தநாகமும், சுக்கிலவலகமும்

ஆண்களின் பாலியல் சம்பந்தப்பட்ட உறுப்பு என சுக்கிலவலகம் (Prostate gland) உடலின் மற்ற பாகங்களை விட அதிகமாக துத்தநாகத்தை சேமித்து வைக்கிறது. இந்த சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு துத்தநாகம் அவசிய தேவை. ஆண் ஹார்மோன் மற்றும் சுக்கிலவலகம் – இவற்றின் செயல்பாடுகளுக்கு ஜிங்க் முக்கியம் என்பதால், ஜிங்கை “ஆண் தாதுப்பொருள் என்று அழைக்கிறார்கள்” விந்து உற்பத்திக்கு உதவும் ஜிங்க், உடலில் குறைந்தால் ஆண்மைக்குறைவும் மலட்டுத்தன்மையும் ஏற்படும். தொற்று நோயால் (Prostatis) ப்ராஸ்ரேட் சுரப்பி பாதிக்கப்பட்டால், ஜிங்க் அளவுகள் குறைகின்றன. வயதும் ஜிங்க் அளவுகளை குறைக்கும். சுக்கிலவலகத்தின் பெரும் பிரச்சனை, வயதானால் வீங்கி விடும். இந்த வீக்கம் மற்ற அவயங்களை குறிப்பாக சிறுநீர் பையை அழுத்துவதால் பல பிரச்சனைகள் ஏற்படும். துத்தநாகம் இந்த வீக்கத்தை குறைப்பது ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. சுக்கிலவலக புற்றுநோயையும், ஆரம்ப நிலையில் துத்த நாகத்தை கொடுத்து கட்டுப்படுத்தலாம்.


Spread the love