பதநீர் உடல் உஷ்ணத்தை உடனே தணித்து உடலைக் குளிர வைக்கும் தன்மை கொண்டது. பதநீரில் குழந்தைகளின் எடையைக் கூட்டும் சக்தியான இரும்புச் சத்து தயாமின், அஸ்கார்பிக் அமிலம், புரோட்டீன் ஆகிய சத்துகள் உள்ளன.
உடலுக்குச் சக்தியைத் தரும் குளுகோஸ், எலும்பு, பல், நகங்களின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச் சத்து, ரத்தத்தை விருத்தி செய்யும் ரிப்போ பிளோரான் சத்தும் பதநீரில் உள்ளது.
கோடையில் அதிகமாக கிடைக்கும் மாம்பழத்தைச் சாப்பிட்டால் உடலில் சூடு பிடிக்கும். இனிப்பு மாம்பழங்களைத் துண்டு துண்டாக நறுக்கி பதநீரில் போட்டுச் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து விடும். புளிக்காத பதநீர் எனக் கேட்டு வாங்கிப் பருக வேண்டும். புளித்தால் அது ‘கள்’ ஆகி போதையை ஏற்படுத்தும்