இதயம் சிறக்க இந்துப்பு சமையல்

Spread the love

நாம் தினமும் சமையலில் கடல் நீரிலிருந்து தயாராகும் உப்பை, பயன்படுத்தி வருகிறோம். உப்பை கல் உப்பு, தூள் உப்பு என பலவிதங்களில் உபயோகப்படுத்தினாலும், அவை அனைத்தினுடைய பலன்களும் ஒன்றுதான். “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்ற பழமொழிக்கேற்ப, கரிப்பு சுவைக்காகவும், கார வகை உணவுகளின் சுவையை கூட்டவும் உப்பு பயனாகிறது.

சமீபகால உணவு சம்பந்தப்பட்ட ஆய்வுகளில், கடல் உப்பை தினசரி பயன்படுத்துவதால், சிலருக்கு தைராய்டு உள்ளிட்ட பல உடல் பாதிப்புகளை உண்டாக்கும் தன்மைகள் இருப்பதாக மேலை நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்து, அப்பாதிப்புகளைப் போக்க கடல் உப்பில் அயோடினை கலக்க பரிந்துரைத்து. அதையே, முழுமூச்சாக நமது தேசத்திலும் நாம் பின்பற்றி, அயோடின் கலக்காத உப்பை, மக்கள் பயன்படுத்தத் தடை செய்துள்ளனர்.

உலகளவில் தைராய்டு பாதிப்புகள் ஏற்பட்ட இரண்டு சதவீகிதத்தினறாக அனைவரும் வெறும் உப்பை பயன்படுத்த தடைசெய்துள்ளனர். இது தவிர, உப்பு ஆலைகளில், ஆய்வில் உப்பில் அயோடின் அளவு குறைந்தால், ஏற்படும் தாக்கத்தைத் தவிர்க்க, அயோடினின் அளவை உப்பில் அதிகரித்து, மக்களின் உடல்நலனில் சிறிது கூட அக்கறை இல்லாமல் விற்பனை செய்கின்றனர். கூடுதல் அளவுகளில் சேர்க்கப்பட்டுள்ள அயோடின் கலந்த உப்பை நாம் நமது அன்றாடச் சமையலில் பயன்படுத்தும் போது மேலும் அதிக இன்னலை நமக்கு தரும் என்பதே நிதர்சனமான உண்மை.

சரி, எப்படி இந்த அயோடின் விஷயங்களைத் தவிர்த்து, நாம் உப்பை பயன்படுத்துவது? இன்றைய காலக்கட்டத்தில் அயோடின் கலக்காத சாதாரண உப்பை நாம் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவுதான். ஆனால், அதற்கு மாற்றாக, இமாலயப்பாறை உப்பு எனப்படும், இந்துப்பை பயன்படுத்தலாம். பழங்காலத்திலிருந்தே, நம் முன்னோர்களின் சமையலில் இடம் பெற்று வந்த இந்த இந்துப்பு காலப்போக்கில், தமது பயன்பாட்டிலிருந்து விலகிச்சென்று விட்டது  நாமும் இது பற்றி மறந்து ஒன்றும் தெரியாமல் இருந்துவிட்டோம் என்பது தான் சத்தியமான, மறுக்கமுடியாத  உண்மையாகும்.

இந்துப்பு என்றால் என்ன?

உலகில் உள்ள மலைத்தொடர்கள் எல்லாம் மிகவும் கடினமான கருங்கல் பாறைகளால் ஆனவை என்பது நமக்குத் தெரிந்தது தான். ஆனால், சில வகை மலைகள் மட்டும் விதிவிலக்காக, கடினமற்ற உடையும் தன்மையுள்ளவையாக உள்ளன. இவையே உப்புப்பாறைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த உப்பு பாறைகளிலிருந்து கிடைப்பதே, பாறை உப்பு என்ற இந்துப்பாகும். நமது நாட்டின் இமயமலைத்தொடரின் அருகில் உள்ள உப்பு மலைகளிலும், நமது நாட்டிற்கு அருகில் உள்ள பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளிலும் உப்புப்பாறைகள் உள்ளன. மேலும், நமது இந்தியாவில் இராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பாறை உப்பு, பூமிக்கு அடியில் இருந்து, சுரங்கங்கள் மூலம் வெட்டியெடுக்கப்படுகிறது. நமது தமிழ்நாட்டில் தூத்துக்குடி போன்ற சில இடங்களிலும் கடலுப்பு, கிடைகிறது. உலக நாகரீகங்களில் முதன்மையானதாகக் கருதப்படும், நைல் நதி நாகரீகம் எனும் எகிப்திய நாகரீகம் அக்காலத்தில் சிறந்து விளங்கியதற்கு அவர்களின் இயற்கை உப்பு வளமேயாகும். என்ன? கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், இது தான் உண்மை.

அங்குள்ள பாலைவன நிலங்களில் இயற்கையாகக் கிடைத்த இந்துப்பை அவர்கள் உலக நாடுகளுகளில் (வணிகம்) விற்று செய்து, பொருளாதார வளம் பெற்றனர். அதனால், உண்டான செல்வச் செழிப்பினால், அவர்களின் வாழ்க்கை நவ நாகரீகமிக்கதாக மாறி, உலக நாடுகளுக்கெல்லாம், முன்னோடியாக விளங்கினர்.

இந்துப்பில் உள்ள தாதுக்கள்:

பாறைகளில் இருந்து வெட்டியெடுக்கப்படும் இந்துப்பு, இளநீரில் ஊறவைத்து, பதப்படுத்தப்பட்ட பிறகு தான், நமக்கு பயன்படுத்தக்கிடைக்கிறது. சற்றே மங்கலான பழுப்பு, சிவப்பு மற்றும் இளஞ்சிகப்பு நிறத்தில் காணப்படும் இந்துப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு, அயோடின் போன்ற தாது சத்துக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது. மனிதருக்கு நலம் தரும் 80 [எண்பது வகையான கனிமத்தாதுக்களை, தன்னகத்தே கொண்டள்ளது). வட இந்தியர்கள், சிவ ராத்திரி போன்ற விரத நாட்களில், இந்துப்பை கொண்டு உணவுகள் தயாரிபார்கள். தங்களுடைய அன்றாட உணவிலும் இந்துப்பை வட இந்தியர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்துப்பின் பயன்பாடு அவற்றின் நன்மைகள் குறித்து, தமிழ்நாட்டில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை, ஆயினும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான  மருத்துவத்தில், முக்குற்றம் எனக்கூறும் வாதம், பித்தம் மற்றும் கபம் உள்ளிட்ட உடல் வியாதிகள் நீக்கும் மருந்துகளின் தயாரிப்பில், மனிதர்களுக்கு சிறந்த உடல் நலம் தரும் இயற்கை தாதுக்கள் நிரம்பிய இந்துப்பும் சேர்க்கப்பட்டது.

இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்து வந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் என்னும் உடல் வியாதிகள் நீங்கி, உடல் வலுவாகும், எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது, மனச்சோர்வு நீக்கும் தன்மை உள்ளது தைராய்டு பாதிப்புகளைப் போக்கும். கண்களைக்காக்கும் ஆற்றல் உண்டு. தைராய்டு பிரச்னைக்கு மருந்தாகும். குளிப்பதற்கு முன் சிறிது இந்துப்பை உடலில் தேய்த்து சற்றுநேரம் கழித்து குளித்து வந்தால், உடல் அசதிகள் நீங்கி, மனத்திற்கும் உடலிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். சிறுநீரக பாதிப்புக்கு வைத்தியம் செய்யவேண்டிய நிலையில் உள்ளவர்கள், அல்லது சிறுநீரகத்தையே மாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்கள், டயாலிசிஸ் எனும் இரத்த மாற்றுமுறை செய்து கொள்பவர்கள், மனந்தளராமல் ஒரு தன்னம்பிக்கை முயற்சியாக, இரண்டு வாரம், சமையலில் இந்துப்பை சேர்த்துக்கொள்ள இரத்தத்தில் உள்ள குறைபட்ட தாதுக்கள் எல்லாம் இயல்பான அளவில் சரியாகி, சிறுநீரக இயக்கங்களும் சீராகி, உடல் நலம் பெறுவர். மேலும், உடலில் ஏற்படும் வேதனைகளும் நீங்கும். 

பற்கள் பாதிப்பு நீங்கும் :

இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரினால் வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

மூல வியாதி :

மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்கவும், இந்துப்பு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. சாதாரண கல் உப்பில் சேர்க்கப்படும் அயோடின், இந்துப்பில் இல்லாத காரணத்தினால், அனைவரும் எல்லா நாட்களிலும் உணவில் பயன்படுத்த ஏற்ற வகையில், இந்துப்பில் இயற்கையான நன்மைகள், இயல்பாகவே அமைந்துள்ளது.

மேலும், தினமும் இந்துப்புடன் சமைத்த உணவை, வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவர, வியாதிகள் அணுகாத நல்வாழ்வை நம் பாரம்பரிய உணவுகளை உண்டு நலமுடன் வாழலாம். 

ஜி.பி. முருகன்


Spread the love